எதை விதைக்கிறீர்களோ அதையே அறுவடை செய்கிறீர்கள்
- airavathportal
- Dec 16, 2024
- 1 min read
பத்ரிஜி அவர்கள் சொற்பொழிவின் மொழியாக்கம்.

எம் எஸ் சுப்புலட்சுமி மற்றும் லதா மங்கேஷ்கர் நன்றாக பாடுகிறார்கள் . ஏன் நம்மால் பாட முடியவில்லை. உடல் எல்லோருக்கும் ஒன்று தான் நாம் நம் உடலை சரிவர உபயோகிப்பதில்லை.
உன் கையில் இருக்கும் பணத்தை நீ சரியாக உபயோகிக்கவில்லை என்றால் யாருக்கு அந்த பாவம் அதைப் போலவே நாம் நம் உடலை சரியாக பயன்படுத்தவில்லை என்றாலும் பாவமே.
இயேசு அதற்காகவே அனைவரும் பாவிகள் என்றார். நமக்கு கிடைத்த உடலை நாம் சரியாக உபயோகிக்காததன் பாவமே மீண்டும் மீண்டும் பிறப்பு.
சகல வித்தைகளும் கற்றுக் கொள்ளவே நாம் பிறந்திருக்கிறோம் இதற்காகவே இந்த உடல் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
நமது உடலுக்கான எந்த வேலையையும் செய்யாமல் இருப்பதும் பாவமே. சாப்பிடுவதும் தூங்குவதும் மட்டுமல்ல நமது வாழ்க்கை.
எனக்கு தியானம் செய்ய வராது என்றால் கற்றுக் கொள்ளும் வரை மீண்டும் மீண்டும் பிறக்க வேண்டியது தான்.
நம் உடல் மிகச் சிறந்த கருவி. இரு கால்கள் இரு கைகள் இரு கண்கள் இரு காதுகள் மூக்கு வாய் என அனைத்து அவயங்கலாலும் செய்ய முடிந்தவற்றை சிறந்த முறையில் செய்ய வேண்டும்.
எதையும் உபயோகிக்க மாட்டேன் என்றால் கற்றுக் கொள்ளும் வரை பிறக்க வேண்டியதுாதான். என்சகோதரி , தாய் , அண்ணன் அனைவரும் நன்றாக வரைவார்கள்.
அதைக் கற்றுக் கொள்ள நான் மீண்டும் பிறக்க வேண்டி வரும். செய்ய முடியாத நிலையில் இருப்பின் பரவாயில்லை. செய்ய உடல் ஒத்துழைத்தாலும் செய்யாமல் இருப்பது பாவமே.
ஆத்ம நிலை மாறலாம் உடல் அனைவருக்கும் ஒன்றே. பணம் சம்பாதிக்க திறன் இருந்தும் சம்பாதிக்கவில்லை என்றாலும் பாவமே.
சம்பாதித்த பணத்தை யாருக்கும் கொடுக்காமல் ஒருவன் தானே அனுபவிப்பதும் பாவமே. சம்பாதிப்பதில் ஒரு பகுதியாவயாவது உலக நன்மைக்காக கொடுக்க வேண்டும்.
Comments