Spiritual Reality - Explore the Depths of Your Spiritual Journey
ஆன்மிக யதார்த்தம்
(Spiritual Reality)
‘ஆனாபானசதி’
‘சுவாச குருவிற்கும், தியான குருவிற்கும் வணக்கம்
‘ஆனாபானசதி’ இது ‘கௌதம புத்தர்’வருடங்களுக்கு முன் பயின்று வந்த முறையாகும். இந்த தியானத்தை இடைவிடாமல் மேற்கொண்ட பின்பு தான் ‘கௌதம சித்தார்த்தர்’ என்னும் மனிதர், ‘கௌதம புத்தர்' என்னும் மகான் ஆனார். பாலி மொழியில்
‘ஆனா' என்றால் `உள் இழுக்கும் மூச்சு'
'அபான' என்றால் 'வெளிவரும் மூக்சு'
‘சதி' என்றால் ‘ஒன்றியிருப்பது’
ஆக, ‘ஆனாபானசதி" என்றால், 'நம் சுவாசத்தோடு நாம் ஒன்றியிருப்பது’ என்று பொருள். இதனையே, ‘சுவாசத்தின் மீது கவனம்’ என்றும் சொல்லலாம். ‘ஆனாபானசதி’ தியானம் உலக மக்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதமாகும்!.
தியானம் செய்யும் முறை
தியானம் செய்வதற்கு, சுகமான ஆசனத்தில் அமர வேண்டும். பாய்மீதோ அல்லது நாற்காலியிலோ அமர்ந்து கொள்ளவும். கண்ணாடி அணிந்திருந்தால் அதை கழற்றி விட வேண்டும். பாதங்களை ஒன்றின் மீது ஒன்றாக இணைத்துக்கொள்ளவும், இரு கை விரல்களையும் ஒன்றுடன் ஒன்றாகக் கோர்த்துக்கொள்ளவும். உடல் இறுக்கமாக இல்லாமல் தளர்த்தியபடி, இயல்பாக இருக்க வேண்டும். கண்களை மெதுவாக மூடிக்கொண்டு நம்மில் இயல்பாகவும், இயற்கையாகவும் மென்மையாகவும் நடக்கும் சுவாசத்தின் மீது கவனத்தைச் செலுத்த வேண்டும். எந்த மந்திரங்களையும் உச்சரிக்க வேண்டாம். கடவுள் மற்றும் மகான்களின் உருவத்தை நினைக்கக்கூடாது. மனதில் எண்ணங்கள் எழும்பொழுது . அவற்றை விட்டு, முழு கவனத்தையும் சுவாசத்தின் மீதே செலுத்தவும். இந்த தியானம், வயதானவர்கள், பெரியவர்கள், படித்தவர்கள், படிக்காதவர்கள், ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் அனைவரும் எளிதாகக் செய்யக்கூடியதாகும்.
To Learn Meditation