ஐந்தாவது கண்ணாடி
- airavathportal
- Apr 8
- 1 min read

ஐந்தாவது கண்ணாடி நம்முடைய பெற்றோரை காட்டும். அடிக்கடி இந்த பௌதிக உலகில் சொல்லப்படுவது யாதெனில் நீங்கள் உங்கள் தாய் அல்லது தந்தையின் பிம்பத்தை தான் மணந்து கொள்கிறீர்கள்.
ஏனெனில் நாம் அவர்களைப் பார்த்துதான் வளர்கிறோம். இந்த கண்ணாடி மிக எளிமையானதாகவும் புரிந்து கொள்ளக்கூடியதாகவும் உள்ளது.
பெரும்பாலும் நம் வாழ்வை நாம் வடிவமைப்பது சிறுவயதில் தான். நாம் வளர்க்கப்பட்ட முறைப்படியே தான் வடிவமைக்கிறோம்.
பெற்றோரோ நண்பர்களோ ஆசிரியரோ அல்லது குருமார்களும் யாராவது நாம் வாழ வேண்டிய கலாச்சாரத்தின் முறையை உணர்த்தி இருப்பார்கள்.
அந்த சமூக தாக்கத்தின் மேல் நாம் நம் வாழ்வை உருவாக்கி இருப்போம் அந்த பழக்கங்களையே நாம் வெளி உலகில் பிரதிபலிப்போம்.
உதாரணமாக உங்கள் தந்தை கஷ்டப்படாமல் வாழ்வில் ஏதும் கிட்டாது பணம் மரத்தில் காய்ப்பதில்லை என்றும் உழைப்பில்லாமல் ஊதியம் இல்லை எனக் கூறி இருக்கலாம்.
மேலும் பணம் என்பது மோசமானது நேர்வழியில் அதை அதிகமாக சம்பாதிக்க முடியாது அதிக பணத்தை அடைய தவறான வழியில் தான் போக வேண்டும் என்றும் கூறலாம்.
எனவே நாம் வளரும் பொழுதே நாம் தவறான கண்ணோட்டத்தில் தான் பணத்தை காண்போம். நம்மால் அதிக பணத்தை சேர்க்கவும் முடியாது.சிறிது சேர்ந்தாலும் தக்க வைத்துக் கொள்ளவும் முடியாது.
சில சமயம் நம்மை குறித்தும் தவறான கண்ணோட்டம் அவர்கள் மூலம் நமக்கு கிடைக்கிறது. உதாரணமாக நீ ஒரு லாயக்கு இல்லாதவன் அல்லது உன்னால் எதையும் சரியாக செய்ய முடியாது என்று கூறலாம்.
எனவே இந்த வார்த்தைகள் நம்மை தாழ்வு மனப்பான்மை உடையவர்களாக மாற்றுகிறது.
வெளியுலகில் நம்முடைய துணையை சந்திக்கும் பொழுது அதே மனப்பான்மை தான் அவர்களிடமும் வெளிப்படும் இதைத்தான் நாம் பெற்றோரையே நாம் மணந்து கொள்கிறோம் என்று விளையாட்டாக கூறுவது.
தொடரும்
Comments