பத்ரிஜி அவர்கள் சொற்பொழிவின் மொழியாக்கம்.
பாவம், பச்சாதாபம் ,பிராயசித்தம் மற்றும் பரிகாரம் குறித்து அறிவோம். பகவத் கீதையில் நீ செய்யும் பாவம் தெரியவில்லையென்றால், உனக்கு ஞானம் தேவைப்படுகிறது என்று அர்த்தம் எனக் கூறப்பட்டுள்ளது.
ஞானம் நம் அனுபவங்களினால் உருவாகிறது. நிகழ்வுகள் நம் வாழ்வில் நடக்கும் பொழுதுதான் நாம் பாடம் கற்கின்றோம். அப்பாடங்களே நமக்கு ஞானம் அளிக்கிறது.
பாடத்தில் இருந்து ஞானம் பெற மாட்டேன் என்பவரை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. அவரே நான் கற்கத் தயார் என்று கூறும் வரை ஞானம் அவரை அடைவதில்லை.
எதனால் இந்த விஷயங்கள் என் வாழ்வில் நடக்கின்றன என்றுணர்வது ஞானமே. யாரும் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. அனைத்தும் அவர்கள் சுய இச்சையிலேயே நடைபெற வேண்டும்.
நாம் செய்யும் காரியங்களின் பலன் நம்மை அடைந்தே தீரும். ஒரு பையன் மருத்துவத்தை படிக்க விருப்பமில்லாமல் படித்தான் . பத்து வருடங்களாகியும் தேர்ச்சி பெறவில்லை. அவர் தகப்பனார் வருந்தினார்.
ஆனால் யாராலும் அவனை தேர்ச்சி பெற வைக்க முடியவில்லை. அது அவன் நினைத்தால் மட்டுமே சாத்தியம். அவரவர் பாடங்களை அவரவரே கற்க வேண்டும்.
மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு பிரமிட் ஆசான் ஒருவர் தனது ஊரில் வாங்கிய நிலத்தை இன்னொருவர் ஆக்கிரமிப்பு செய்த்தால் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
பின்னர் அவர் தியானத்தில் அவர் கடந்த காலத்தில் அவர் அவருடைய வீட்டு உரிமையாளரை வீட்டை விட்டு வெளியேற்றியதை தெரிந்துக் கொண்டார். அதன் பலனையே தற்போது அனுபவிக்கிறார்.
வேறொருவர் தமிழ்நாட்டிற்கு வந்து தியானம் செய்த பொழுது அங்கு கட்டவிருந்த பிரமிடுக்கு உதவி செய்தால் தன் ஊரில் பிரமிட் உருவாகும் என்ற உணர்வு தோன்றியதால் இங்குள்ள பிரமிட் உருவாக உதவி செய்தார்.
அவரது ஊரில் பிரமிட் உருவானது. நல்லது செய்தால் நல்லதே நடக்கும். பாவம் செய்தால் அதன் பலனே கிடைக்கும்.
பாவம் செய்தாலும் அதற்கு பிறகு நமக்குள் ஏற்படும் பச்சாதாபம் மற்றும் அதற்காக நாம் செய்யும் பிராயசித்தமே ஞானம் ஆகும்.
Comments