பதஞ்சலியின் யோக சாஸ்திரங்களின்படி நம் உடல் ஒரு உடலாக இல்லை. அது ஐந்து உடல்களாக உள்ளது. ஒரு உடல் ஐந்து உடல் அடுக்குகளால் அமைக்கப்பட்டுள்ளது.
பதஞ்சலி கூறும் முதல் உடல் அன்னமய கோஷா எனும் உணவு உடம்பாகும். உணவு மண்ணிலிருந்து வருவதால் அதை உண்டு தான் உயிர் வாழ்கிறாய்
மொத்ததிற்கும் அடிப்படையாக உணவு உடம்பு அமைந்துள்ளது. மிக எளிதான உணவு உண்ணும் போது அனைத்தும் இயல்பாகச் செயல்படுகிறது.
செரிக்காத உணவை உண்ணும் போது உடல் வேறுவிதமாக செயல்பட ஆரம்பிக்கிறது. நீங்கள் விரைவில் சோர்வடைந்து தூங்கி விடுகிறீர்கள்.
விரதங்கள் இருப்பது நமது உடலுக்கான ஓய்வாகும். விரதங்கள் இருப்பது அதனால் தான்.
விரதங்கள் இருக்கும் போது உணவின் நினைவுகளில் இருந்து உடம்பின் செயல்பாடுகளை உணர்ந்து விலகி இருக்க வேண்டும்.
உணவின் மீதே கவனத்தை வைத்து விரதம் இருந்தால் உடலில் அமிலங்கள் சுரந்து எதிர் மறை விளைவுகள் தான் ஏற்படும்.
உணவே வாழ்வென வாழ்பவன் அடுத்த கட்ட உடலுக்குள் போக முடியாதவனாக இருப்பான்.
அடுத்து பிராணாமய கோஷா . பிராண உடல் என்பதாகும். இது சக்திக்கான உடல் மின் தன்மை மற்றும் காந்தத் தன்மை உடையது.
இந்த பிராண உடலில் மிகுந்த கவனமுள்ளவனின் அருகே மற்றவர் செல்லும் போது அவர்களுக்கும் அந்த சக்தி பரவுகிறது.
பிராணாயம கோஷா உடலுக்குள் அமைந்திருந்தாலும் அலர்களைச் சுற்றி ஒரு ஒளி வட்டம் ஏற்படுகிறது. ப
ிராண உடல் சுத்தமாக இயங்கும் பொழுது ஊன் உடல் அபாரமாக இயங்கும்.
எனவே தான் யோகக் கலைக் கற்றுக் கொடுப்பவர்களும் பிராணாமயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
மூன்றாவது மனோ உடல் மனோமயக் கோஷம் எனப்படும் உடலாகும். இதுவே மனிதன் என்ற சொல்லின் வேர்ச் சொல்லாக உள்ளது.
பெரும்பாலான மனிதர்கள் மத நம்பிக்கைகள் மூலம் தங்களின் சொந்த புரிதல்கள் இல்லாமல்இரவல் வாங்கப்பட்ட மனம் மூலமே இயங்குகிறார்கள்.
இவர்கள் எந்த நேரத்திலும் இரவல் மனதிலே மட்டுமே முடிவெடுப்பார்கள். சொந்த மனம் இவர்களுக்கு செயல்படாமலே இருக்கிறது.
மற்றவர்களோடு ஒப்பிடும் மனப்பான்மையில் தான் அவர்கள் இருப்பார்கள்.அவர்கள் அதை நம்பிக்கை என்பார்கள்.
நம்பிக்கை என்பதே தவறான மனம் என்றே பொருள் கொள்ள வேண்டும். சுயமாக வாழ்பவர்களிடையே நம்பிக்கை என்ற சொல் தேவையில்லாமல் போகிறது.
அவர்களிடம் மனோ உடல் மட்டுமே வளர்ச்சி அடைகிறது.
அடுத்து நான்காவது உடல் விக்ஞானமய கோஷா எனப்படுகிறது. இது மிகத் தெளிவானது. இது எது நடந்தாலும் காத்திருக்கும் இயல்புடையது.
எது நடந்தாலும் போராடுவதில்லை. நடப்பது நடக்கட்டும் எனக் காத்திருக்கும்.
ஐந்தாவது ஆனந்த உடலெனும் ஆனந்த மய கோஷா. இது நம்மிடத்தில் இருந்து அதாவது நமது பரு உடலில் இருந்து வெகு தோலைவில் உள்ளது.
இது மிகவும் புனிதமான உடலாகும். உணர்வுகளுக்கெல்லாம் மேம்பட்ட உடல் இதுவாகும்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஐந்து உடல்களும் பூமி, நெருப்பு, நீர் , காற்று மற்றும் ஆகாயம் போன்ற ஐம்பூதங்களால் ஆனதாகும்.
இந்த ஐம்பூதங்களோடு பிணைக்கப்பட்டுள்ளது தான் நமது உடல்.
Comments