top of page

குழந்தைத்தனம் அல்லது குழந்தை தன்மை எது ஞானம் தருகிறது


Childishness or childishness is what gives wisdom
Childishness or childishness is what gives wisdom

குழந்தைகள் கடவுளுக்கு நெருக்கமானவர்கள் என்று சொல்வார்கள். ஏனென்றால் குழந்தைகள் கள்ளங்கபடமில்லா நிலையில் உள்ளார்கள். மேலும் மனம் என்பதே உருவாகாமல் இருப்பார்கள்.


இயேசு ‘ யார் குழந்தையாக மாறுகிறார்களோ அவர்களே கடவுளின் ராஜ்ஜியத்தில் நுழைய முடியும் ‘என்று குறிப்பிடுகிறார்.  குழந்தையாக மாறுவது என்றால் என்ன?


சிறு சிசுவாக இருக்கும் போது குழந்தை சிரித்தால் கடவுள் மலர்களை காண்பிப்பதாகவும் அழுதால் அவர் ஒளித்து வைத்து விளையாடுகிறார் எனவும் வயதானவர்கள் விளையாட்டாக கூறுவர்.


உண்மையில் குழந்தையாக இருக்கும் போது காலமற்ற நிலையில் குழந்தைகள் இருப்பதால் அதே நிலையில் உள்ள பிரபஞ்சத்தோட நிச்சயமாக தொடர்பில் தான் இருப்பார்கள்.


இந்த குழந்தை தன்மையானது வளர வளர நம்மில் மாற்றம் அடைகிறது. நாம் கடந்த கால நிகழ்வகளை சேர்க்க ஆரம்பிக்கும் போது மனமானது உருவாக தொடங்குகிறது.


 பின்னர் எதிர்கால எதிர்பார்ப்புகளும் இணைந்து நாம் நிகழ்கால வாழ்வை தவற விடத் தொடங்குகிறோம்.


இதில் குழந்தை தன்மைக்கும் குழந்தை தனத்திற்கும் உள்ள வேறுப்பாட்டையும் அறிவது அவசியம்.


 குழந்தையாக இருக்கும் போது நிகழ் வாழ்வில் மட்டுமே வாழும் தன்மையும் , செயல்களின் பலன்களை எதிர்பார்க்காத தன்மையும் இருக்கும்.

  குழந்தை தனம் என்பது பிடிவாதம் , அடம் பிடித்தல் , அழுகையால் காரியம் சாதிக்க நினைத்தல் , கோபம் கொண்டு பேசாதிருத்தல் போன்ற பல விஷயங்களை உள்ளடக்கியது.


நாம் குழந்தை தன்மையில் இருந்து விலகினாலும் குழந்தை தனத்தை அதிகரித்துக் கொண்டே தான் உள்ளோம். நம் மனதானது கடந்தக் காலத்தை சுமந்துக் கொண்டு துன்பத்தை அனுபவிக்கிறது.


எதிர்கால கனவுகளின் ஆக்ரமிப்பாலும் அலைபாய்கிறது.  எதிர்பார்ப்புகளினால் ஏமாற்றம் உருவாகிறது.  மனதின்   உருவாக்கமே   நம் வாழ்வின் மொத்த துன்பத்திற்கும் காரணமாகும்.


அதனால் தான் புத்தர் முதல் பல பெரிய மகான்கள் மனதின் செயல்பாட்டை நிறுத்துவதே ஆன்மிகத்தின் முதல் படியாகக் கூறுகின்றனர்.


மனதின் ஓட்டத்தை கவனிக்கவும், அதன் செயல்பாட்டைக் குறைப்பதற்கும் தியானம் மிகப் பயனுள்ள ஒரு  கருவியாகும் .


பல தியான முறைகள் இருந்தாலும் புத்தர் வழிமுறையான ஆனாபானசதி தியானம் மிக எளிதான தியான முறையாகும். இந்த தியான முறையில் எளிதாக மனமற்ற நிலைக்கு செல்ல முடியும் .


மனமற்ற நிலைக்கு செல்வதற்கான காரண்  நாம் குழந்தை தன்மையை பெற்று  பிரபஞ்ச இணைப்பை எளிதாகப் பெறலாம் என்பதற்காகவே


சிலர் குழந்தை தனத்தை பெரியவர்கள் ஆனாலும் விடுவதில்லை. சிலர் குழந்தை தன்மையை ஒரு நாளும் பெறுவதில்லை.  


 மனநிலை பிறழ்ந்தவர்களும் , குழந்தைகளும் மனமற்ற நிலையில் இருப்பினும் ஞானமடைந்தவர்கள் ஆக மாட்டார்கள்.


மிக அழகான ஒரு ஆன்மிக முரண்பாடு இதில் உள்ளது. நாம் மனமுள்ளவர்களாக மாறி அனைத்தையும் கற்றுக் கொண்டு பின் மனதின் பயன்பாடு முடிந்தவுடன் அதனை விடுத்து மனமற்றவர்களாக மாறும் போதே  ஆன்ம ஞானம் பெற முடிகிறது.


குழந்தைத்தனம் அனைவரிடமும் உள்ளது. குழந்தை தன்மை என்பது மிக அரிதாகவே உள்ளது. குழந்தை தன்மையே படைப்பாற்றலின் குணமாகும். அனைவரும் இந்த தெய்வீக தன்மையை பெற தியானம் செய்வோம்.


Read more blogs through PMC Tamil Website.

209 views0 comments

Yorumlar


Message for Guided meditation for anxiety
bottom of page