பத்ரிஜி சொற்பொழிவின் விளக்கம் பாகம் 3
ஒரு ஜென்மத்தில் எப்பொழுதும் பொய் பேசுபவனாகவும் , காது கேளாதவனாகவும் பிறப்பான். அது தெய்வத்தின் கருணையே.
மீண்டும் பொய் பேசி பொய்களை கேட்டு உன் கர்ம்பலனை அதிகரிக்க வேண்டாம் என்று நினைக்கும் பிரபஞ்சத்தின் இது . அதனால் தெய்வ நிந்தனை தேவையில்லை.
நாம் இங்கு வரும் காலம் பிரபஞ்சத்திற்கு ஒரு கணப்பொழுதுதான். கர்மதேவதை எப்பொழுதும் கருணைதேவதையே. நமக்குதான் புரிவதில்லை,
நம் சரீர சக்தியையும் ஆத்ம சக்தியையும் உபயோகிக்கவில்லையென்றால்் என்ன செய்வது? இதுவும் பாவமே மீண்டும் மீண்டும் பிறப்பே
சூரிய உதயம் மற்றும் சந்தியா காலத்தை ஒரு போழுதும் காணாத கண்களுக்கு அடுத்த ஜென்மத்தில் அதன் தேவை என்ன?
படத்தின் இயக்குனர் சரியாக நடிக்கவில்லை என்றால் கட் செய்து விட்டு மீண்டும் மீண்டும் எடுப்பார் அல்லவா?
கெட்டது செய்வது மட்டும் பாவமல்ல நல்லது செய்யாமல் இருப்பதும் பாவமே . எனவே தான் இயேசு அனைவரும் பாவிகள் என்றார் அதன் பொருள் எனக்கு பின்னரே புரிந்தது.
தியானம் செய்ய நேரமில்லை என்பார்கள். மீண்டும் பிறந்து கற்க வேண்டியது தான். உனக்கு கிடைக்கும் நேரத்தை சரியாக உபயோகிக்காமல் இருப்பதும் பாவமே.
தாய் தந்தையர் தன் குழந்தைகள் அனைத்தையும் அறிய வேண்டும் . கற்க வேண்டும் என்றுதானே விரும்புவர் . தன் குழந்தைகள் அனைத்தையும் அறிய வேண்டும் , கற்க வேண்டும் என்றுதானே விரும்புவர்.
தன் குழந்தைகளை சரியாக கவனிக்காத பெற்றோர் மீண்டும் பிறந்து தன் குழந்தைகளை சரியாக வளர்க்க கற்கும் வரை பிறக்க வேண்டியது தான் .
தெரியாமல் செய்வது அஞ்ஞானம் என்றாலும் அதை அறிந்துக் கொள்ள சிரமிக்காததும்் பாவமே . எனக்கு சொல்லித் தர யாருமில்லை என்று சொல்வதும் அஞ்ஞானமே .
வ
Kommentare