பத்ரிஜியின் சொற்பொழிவின் தமிழாக்கம்.
ஜோதி என்ற ஒரு பிரமிட் மாஸ்டர் அனைத்து உபகரணங்களுடன் பேசுவார்கள். எடுத்துகாட்டாக மிக்ஸி, அடுப்பு, சலவை இயந்திரம் மற்றும் பல.
சரியாக வேலை செய்யாவிடில் அவர்கள் அதனிடம் பேசி சரியாக வேலை செய்து எனக்கு உதவு என்பார்கள். நட்புணர்வு என்பது மனிதர்களிடம் மட்டுமல்லாமல் அனைத்து பொருள்களிடமும் இருப்பது அவசியம்.
டான் யுவான் என்றொரு குரு இருந்தார். அவர் ஒரு வளர்ந்த செடியிடம் சென்று நமஸ்காரம் என்றார். உடனே அந்த செடியும் வளைந்து நமஸ்காரம் செய்தது. எனவே நாம் அனைத்து உயிரனங்கள், பொருள்களிடமும் அன்புடன் நட்புடன் இருக்க வேண்டும்.
அதனாலேயே இந்துக்கள் ஆயுத பூஜை கொண்டாடுகிறார்கள். அன்று நாம் அனைத்து பொருள்களையும் வணங்குகிறோம். மனதால் செய்வதே பூஜை .மனதால் பழகுவதே நட்பு. மனதில்லாமல் செய்வது எதுவும் பூஜையோ நட்போ ஆகாது.
மனதால் நாம் பொருள்களிடமும் நட்பு கொள்ள வேண்டும். வெறும் பேச்சினால் எந்த பயனும் இல்லை. பேச்சு என்பது ஆத்மார்த்தமாக இருக்க வேண்டும்.
ரிச்சர்ட் பாக் என்பவர் நமக்கு உள்ள கடமை என்னவென்றால் நாம் எதை உண்மையாக உணர்கிறோமோ அதன் வழி நடப்பதே ஆகும்.
மௌனம் என்பது வாய் மூடி அமைதியாக இருப்பதல்ல.மேலும் பக்கத்தில் உள்ளவர்கள் பேசாமல் இருக்கிறார்கள் அதனால் நானும் பேசாமல் இருக்கிறேன் என்பதல்ல.
ஊருக்காக வாழ்வதல்ல வாழ்க்கை. நீ ஆத்மார்த்தமாக உணர்ந்து நாம் மௌனமாக இருக்கலாமா அல்லது பேசலாமா என்று முடிவு செய்ய வேண்டும்.
பூஜை என்பது உன் கையால் காட்டும் தீபத்தினாலோ, வாயால் சொல்லும் மந்திரத்தினாலோ அன்று. நாம் மனதார, மானசீகமாக பிராத்தனை செய்வதே பூஜை ஆகும். மனதும் உடலும் இணைந்து செய்வதே சாதனை ஆகும்.
மனமும் உடலும் வேறு வேறு பக்கம் விலகிச் செல்வது உண்மையான பூஜை ஆகாது. ஆத்ம பரிமாணத்தில் மனதால் செய்யும் பூஜைகள் நிலைக்கும். இவை ஆத்ம பூஜை என்று அழைக்கப்படும்.
சரீரம் அழியும். ஆன்மா அழிவதில்லை. பிறந்தால் இறப்பு உண்டு. அது உடலுக்கு மட்டுமே. ஆன்மாவிற்கு அல்ல.
ஆத்ம நிலையில் இருப்பவர்களுக்கு மானசீக பூஜைகள் கூட தேவைப்படுவதில்லை.நீ நலம். நானும் நலம் என்ற நிலையில் இருப்பார்கள்.
இதில் நான்கு நிலைகள் உள்ளன.
முதல் நிலையில் உள்ளவர்கள். எது நடந்தாலும் நன்மைக்கே என்று அங்கீகரிப்பவர்கள். கடவுள் வெளியில் இல்லை. நமக்குள்ளே தான் என்பதை உணர்ந்தவர்கள். இவர்கள் தான் தியானிகள் ஆவார்கள்.
இரண்டாம் நிலையில் உள்ளவர்கள் நம்மை சுற்றியுள்ளவர்கள் அனைவரும் நன்றாக உள்ளார்கள். நாம் மட்டும் துன்பப்படுகிறோம் என்றே நினைப்பவர்கள். இவர்களுக்கு பூஜை, பிராத்தனை தேவைப்படுகிறது.
மூன்றாம் நிலை என்பது துக்க நிலை. நீயும் நன்றாக இல்லை, நானும் நன்றாக இல்லை. அவர்களுக்கு எல்லாம் சோக மயமே. எப்பொழுதும் அவர்களுக்கு துக்கம் தான்.
நான்காம் நிலை அகங்கார நிலையாகும். அதாவது நான் நன்றாக இருக்க வேண்டும். மற்றவர்களைப் பற்றி கவலை இல்லை. அவர்கள் பூஜை செய்வார்கள், தரையில் விழுந்து வணங்குவார்கள். ஆனால் மனதால் எதுவும் செய்வதில்லை.
ஆகவே நாம் அனைவரும் முதல் நிலையில் வாழ்வோம், பல நன்மைகளை அடைவோம். ஆனந்தமயமான வாழ்வை பெறுவோம்.
Read more blogs through PMC Tamil Website.
Comments