"யோக வாசிஷ்டம்" என்ற உபதேச வாசகங்கள் ராமாயணத்தில் உள்ளது. இது குரு வாசிஷ்டர் ராமபிரானுக்கு உபதேசம் செய்ததாகும்.இது பகவத் கீதைக்கு இணையான ஒரு ஞானப் பொக்கிஷமாகும்.
பூர்வ ராமாயணத்தில் பால காண்டம், அயோத்திய காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என்று ஆறு காண்டங்கள் இருக்கின்றன. இது போலவே உத்திர ராமாயணத்திலும் வைராக்கியம், முமுக்ஷு, உற்பத்தி, ஸ்திதி, உபசமன, நிர்வாணங்கள் என்று ஆறு பிரகரணங்கள் இந்த பூர்வ ராமாயணத்தில் இருக்கின்றன.
இந்த பூர்வ ராமாயண சரித்திரத்தைப் படித்து இதயத்திலே அதனை புரிந்துகொண்டு, அவர்கள் யாராயினும் சீலத்துடன், தர்மத்துடன், நீதி நியமங்களுடன் அவரவர் வாழ்க்கையை சரி படுத்திக்கொண்டு நிர்மலமான ஒரு ஆன்மிக நிலையை யார் வேண்டும் என்று ஆசைப்படுகிறார்களோ அப்படிப்பட்ட ஆன்மிக ஆன்மாக்களுக்காக தான் இந்த கிரந்தம் சொல்லப்பட்டு இருக்கின்றன.
இந்த தேகம் தான் நான் என்ற ஒரு உறுதியான ஞானம் இல்லாதவனும் ஒரு சமநிலையான தத்வ ஞானத்தை இல்லாதவனும் நான் இதற்கு எப்படியாவது மோட்சத்தை பெற்றே தீர வேண்டும் என்ற ஒரு த்ருட நிச்சயத்தை இருக்கிறவனும் இந்த சாஸ்திரத்தை படிக்க தகுதி உள்ளவன். இந்த யோக வாசிஷ்டம் வேதாந்தத்தின் ஒரு அந்திம சித்தாந்தமான அத்வைதத்தை காட்டும் ஒரு அபூர்வ மகா கிரந்தம்.
இந்த கிரந்தத்தை யார் நியம நிஷ்டையுடன் படிக்கிறார்களோ அவர்களுக்கு அத்விதீய ஒரு பிரம்ம சாக்ஷாத்காரம் பெறுவார்கள் என்று ஸ்ரீ ராம தீர்த்த ஸ்வாமி அவர்கள் செலவித்தார். இந்த கிரந்தத்துக்கு வேறு பெயர்கள் கூட இருக்கின்றன. இதற்கு லகு யோக வாசிஷ்ட, என்றும் யோக வாசிஷ்ட சாரம் என்றும் லகு யோக வாசிஷ்டம் சாரம் என்றும் வசிஷ்ட கீதை என்றும் அந்தந்த நாடுகளிலே அதனுடைய மற்ற பெயர்களுடன் இது வெளியாகி வந்திருக்கின்றது.
கீதைகளில் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனருக்கு எப்படி செய்தாரோ அதை போலவே வாசிஷ்ட பிரம்ம ஸ்ரீ ராமனுக்கு ஆன்மிக தத்துவத்தை உபதேசித்தார்.
To know more about Vasishtambrutham, Join the 21 day FREE Online Spiritual - Meditation Workshop by B. Kumari hosted by #PMCTamizh. Register now to join.
Comentários