தியானம் கற்றுக் கொள்ளும் போது ஜென்மங்களை குறித்து யாரும் பொதுவாக சிந்திப்பதில்லை.
ஏதேனும் ஒரு நல்லது நடந்தால் நமக்கு கொடுப்பினை உள்ளது என்றும் ஏதாவது விரும்பத்தகாது நடந்தால் எந்த ஜென்மக்கடனோ இப்பொழுது தீர்ந்தது என்றே நினைக்கிறார்கள் ..
ஆனால் ஆனா பான சதி தியானம் குறித்து அறிந்தவர்கள் படிப்படியாக அவர்களுக்குள் நிகழும் மாற்றங்கள் குறித்து சிந்திக்க தொடங்குவார்கள்.
செல் என்பது நம் உடலில் அமைந்துள்ள ஒரு சின்னஞ் சிறிய துகளாகும். நம் கடந்த கால கர்ம பலன்கள் எல்லாம் செல்லிலும் பதிந்து இருக்கிறது.
இந்த ஜென்மங்களில் அவை நமக்கு கொடுக்கும் பலன்களை குறித்து நாம் எத்தனை அறிவோம் .
எத்தனை எத்தனை ஜென்ம கர்மம் பலன்களை நாம் கொண்டு வந்திருக்கிறோம் என்பதை நினைத்தால் மிகவும் வியப்பாக உள்ளது.
அச்செல்களின் பதிவு உள்ளது என்பதை அறிய தியானம் வழி வகுக்கிறது . வழியை காண்பித்த தியானமே அதன் தீர்வையும் உணர்த்துகிறது.
வழியை உணராது இருப்பவர்கள் தீர்க்கவும் முடியாது அல்லவா. நாம் தியானத்தில் அமரும்பொழுது எண்ணங்கள் குறைந்து மனது வெறுமையாகி பிரபஞ்ச சக்தி உள்ளே வரும் விந்தையே அறிகிறோம்.
உள்ளே வரும் அந்த பிரபஞ்ச சக்தி நமது செல்கள் அனைத்திலும் ஊடுருவதை உணர்கிறோம்.
சைவமாக தற்போது மாறிவிட்ட சிலர் முன்பு உண்டதன் பாவத்தை எப்படி கழிப்பது என்று சிந்திக்கிறார்கள். எந்த தவறையும் குற்ற உணர்வோடு நினைக்காமல் மனதார மன்னிப்பு கேட்டுக் கொண்டால் விடுபடலாம்.
இந்த வார்த்தைகள் ஒவ்வொரு தவறுக்கும் நமக்கு விடுதலை அளிக்கும்.
நம் மூளையின் செல்களில் உருவாகும் எண்ணங்களினால் நமக்குள் தோன்றுவதே சொல்.
நாம் பேசும் ஒவ்வொரு சொல்லுமே நம் கர்மாவை கூட்டமும் குறைக்கவும் செய்யும் .
ஒருவர் நம்மை அவமானப்படுத்தி குறை கூறினால் நாமும் அவர்களுக்கு சொல்லால் பதிலடி கொடுத்தால் நாம் கற்க வேண்டிய பாடத்தை கற்கவில்லை என்று தான் அர்த்தம்
மேலும் நாம் பிறரை காயப்படுத்தும் பொழுது கர்மாக்களை கூட்டிக் கொள்கிறோம்.
இது இந்த ஜென்மத்திற்கு மட்டுமல்ல நாம் பிறவி எடுத்த கடந்த எல்லா ஜென்மங்களுக்கும் பொருந்தும்.
தியானத்தில் அமரும்பொழுது நம்மை வேதனைப்படுத்தியதாக கருதும் நிகழ்வுக்கு காரணமானவர்களுக்கு நாம் மன்னிப்பு கொடுக்க வேண்டும்.
அவர்கள் எனக்கு பாடம் கற்பித்த குரு என்று மனதார வணங்கி நன்றி கூற வேண்டும்.
ஒரு வேளை நீங்கள் காயப்படுத்தி இருந்தால் அந்த உறவுகளிடமும் மனதார மன்னிப்பும் கேட்டுக் கொள்ள வேண்டும்.
Comments