வாழ்க்கை என்பதை வாழவே நாம் வந்திருக்கிறோம். ஆனால் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோமா? வாழ்வது என்றால் தினமும் உண்பதும் , தினசரி பணிகள் என்று நாம் நினைப்பதை செய்வதும், தூங்குவதும் இதுதானா? வாழ்வை உண்மையில் வாழ்பவருக்கே இதற்கான பதில் தெரிவதற்கான வாய்ப்பு உள்ளது.
சிலர் நினைக்கலாம் செல்வம் இருந்தால் தான் வாழ்வு இனிமையாக இருக்கும் என்று. சிலர் வாழ்வில் அவர்களுடைய நோக்கம் நிறைவேறினால் நாம் நன்றாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் என முடிவு செய்துக் கோள்கிறார்கள்.
வேறு சிலர் நான் நினைத்தது எதுவும் வாழ்க்கையில் நடக்கவில்லை வாழ்வே வீண் என மனம் வாடி வாழ்க்கையை நடத்துகிறார்கள்.
அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என அவ்வை ப் பாட்டி கூறியதன் பொருள் நமக்கு கிடைத்த இந்த மனித பிறவி என்பதே ஒரு கிடைத்தற்கரிய பேறு என்று முதலில் புரிந்துக் கொள்ள வேண்டும்.
இந்த மானிடப் பிறவி என்பது எளிதாக கிடைக்க் கூடிய பிறவி அல்ல. வாழ்க்கையே நமக்கு கிடைத்த வரம் தான் அதை எப்படி வாழ வேண்டும் என்கின்ற புரிதல் தான் நாம் தெரிந்துக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயமாகும்.
செல்வ வளம் தான் வாழ்க்கைக்கு ஆனந்தம் கொடுக்குமென்றால் ஏன் சில செல்வந்தர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். துன்பம் என்று நினைப்பதை விட்டு இதனால் நான் என்ன கற்றுக் கொள்கிறேன் என்று நினைக்கத் தொடங்கினால் வாழ்வை வேறு கோணத்தில் பார்க்கும் சக்தி உண்டாகும் .
புலம்பத் தோடங்கினால் திரும்பி பெற முடியாத நிகழ் கணங்களை இழக்க நேரிடும். வாழ்வி்ல் தவறுகள் செய்வதும் வேதனைகள் வருவதும் சகஜமானது .
ஏன் இந்த துன்பம் எனக்கு நேர்கிறது என ஆராயத் தொடங்கியவர்கள் தான் பெரும்பாலும் ஆன்மிக பாதையால் நுழைகிறார்கள் . இங்கும் வந்து அதை தீர்க்க வேண்டும் என்று நினைப்பதை விட்டு அதன் அனுபவத்தினால் பெற்ற பாடம் என்ன என்று புரிந்துக் கொள்பவர்களே உண்மையை நோக்கி பயணிக்கிறார்கள்.
புத்தருக்கு தனிப்பட்ட முறையில் எந்த துன்பத்தையும் அனுபவிக்காமலும் உண்மையை தேடும் உந்துதல் தோன்றியது ஏன் ? மிகப்பெரிய மகான்கள் அனைவரும் ஆன்மிகப் பாதைக்கு வந்ததன் காரணம் தங்கள் துன்பத்தை தீர்க்க வேண்டும் என்பதற்காக அல்ல.
பிரபஞ்ச சத்தியத்தை புரிந்துக் கொள்வதற்காகவே. அந்தப் புரிதல் மட்டுமே வாழ்க்கை என்பது பரிசு தான் பாரமல்ல என்பதை தெளிவாக்கும்.
ஷேக்ஸ்பியர் உலகம் ஒரு நாடக மேடை நாம் அனைவரும் இங்கு அவரவர் வாழ்க்கை நாடகத்தை நடிக்கத் தான் வந்திருக்கிறோம் என்று அழகாக கூறியுள்ளார். அவரவர் வாழ்க்கையை வெளியிலிருந்து பார்க்கும் பார்வையாளர்களாக நாம் மாறும் பொழுதே அதன் அழகை ரசிக்கும் மன பக்குவம் வரும்
.இந்த மன பக்குவம் தியானம் மூலம் மட்டுமே சாத்தியமாகிறது . மனமற்ற நிலைக்கு செல்லும் எந்த செயலும் தியானமே.
Commenti