பிரம்மரிஷி பிதாமகர் பத்ரிஜி அவர்கள் சொற்பொழிவின் தமிழாக்கம்
புத்தரின் எண் வழிகள் தர்மமே நல்ல கண்ணோட்டம், நல்ல ஆசைகள், நல்ல பேச்சு, நல்ல வாழ்க்கைமுறை, நல்ல செயல், நல்ல எண்ணம், நல்ல ஆர்வம், நல்ல தியானம் .
ஆசையே துக்கத்திற்கு காரணம் ஆசையை ஒழித்தால் துக்கத்திலி, உந்து விடுபடவாம். எண் வழிமுறைகளை கடைபிடிக்கவும்.
மகாபாரதத்திலே முதல் வார்த்தையே தர்மஷேத்திரமே குருஷேத்திரம். ஜீவிதம் முழுமைக்கும் பேசினாலும் தர்மம் குறித்த விளக்கம் முடிவதில்லை.
அது அனுமாரின் வால் போல வளர்ந்து கொண்டே செல்லும். முக்கிய மூன்று கால தர்மத்தை உணர வேண்டும்.
இந்த வாழ்வில் என் தர்மம் என்ன? இன்று என் தர்மம் என்ன? இப்பொழுது என் தர்மம் என்ன? என்று உணர்ந்து வாழ வேண்டும்.
ஹிட்லர் ஹிம்சை தர்மம் என்று வாழ்ந்தான். மகாத்மா காந்தி அஹிம்சை தர்மம் என்று வாழ்ந்தார்.
என் தர்மம் எப்பொழுதும் ஒன்றே இன்று இப்பொழுது எப்பொழுதும் தியானம் குறித்து தர்மம்குறித்து சொல்லுவதே.
இந்த ஆசிரமத்திற்கு வரும் அனைவருக்கும் உணவு தயாரிப்பதில் மற்றும் பரிமாறுவதில் உதவுவதும் எனது தர்மமே.
வேலை செய்து கூலி வாங்குவதில் தர்மம் இல்லை. வீதியில் இறங்கி அனைவருக்கும் தியானம் கற்பிப்பதே தர்மம் என்று உணர்ந்தேன்.
புத்தர் ராஜகுமாரராக வாழ்ந்தாலும் குடும்ப வாழ்வில் இருந்தாலும் தன் தர்ம்ம் எது என்பதை உணர்ந்தார்.
அது போல நாம் ஒவ்வொருவரும் தம் தம் தர்மத்தை அறிய வேண்டும். புனரபி ஜனனம் புனரபி மரணம். நாம் நம் தர்மத்தில் சிரத்தையாக வாழ்ந்தால் மட்டுமே பிறப்பில் இருந்து தப்பிக்க முடியும்.
பிரமிட் ஆசான்கள் தியானம் செய் சைவ உணவை உட் கொள் என்று கூறுவதே தர்மம். தர்மம் தலை காக்கும். தர்மத்தை காப்பவர்களை தர்மமே காக்கும்.
தர்மத்தை சிட்சித்தால் சிட்சிக்கும் ரட்சித்தால் ரட்சிக்கும். திரௌபதியை காத்தது அவளது தர்மமே. பாண்டவர்களை காத்ததும் அவர்களது தர்மமே.
பலர் என்னிடம் தங்கள் வாழ்வின் நோக்கம் என்று கேட்கிறார்கள். என்னிடம் வந்து கேட்டால் உங்கள் வாழ்வின் நோக்கம் தியானம் கற்பிப்பதே என்பேன்.
பிஸ்மில்லாகானிடம் கேட்டால் சங்கீதம் கற்பதே வாழ்வின் நோக்கம் என்பார். கவாஸ்கரிடம் கேட்டால் கிரிக்கெட் விளையாடுவதே உங்கள் நோக்கம் என்பார்.
பிரமிட் ஆசான்கள் ஊர் ஊராக சென்று தியான மையங்கள் அமைத்து தியானம் குறித்து சோல்லுங்கள்.
இணையம் வழியாகவும் சொல்லுங்கள். பிரமிட் தியானத்தை ஒளியலை மூலமாகவும் விரிவுபடுத்துங்கள் என்றே கூறுவேன்.
நீங்கள் என்னிடம் வந்து இந்த கேள்வியை கேட்கும் போதே இதுதான் உங்கள் நோக்கம் என்று உணர்கிறீர்கள் அல்லவா? இல்லாவிடில் என்னை நாடி வர வேண்டிய அவசியம் என்ன?
தியானம் சொல்லிக் கொடுப்பது எனது நோக்கம். அவரவர் தர்மத்தை அவரவரே அறிய வேண்டும். இன்று எனது தர்மம் தர்மத்தை குறித்து பேசுவதே அது இன்று இத்துடன் நிறைவடைந்தது.
Comments