பிதாமகர் பிரம்ர்ஷி பத்ரிஜி அவரின் கருத்துகளின் தமிழாக்கம்
சாந்தி தர்மம் மூலம் உருவாகும் அசாந்தி அதர்மம்் மூலம் உண்டாகும். சாந்தியை விரும்புவர்கள் தர்மத்தை நோக்கி வருகிறார்கள் .
அர்சுன்ன் காண்டீபம் எடுத்தவுடன் நான் எந்த பக்கத்திற்காக போரிட வேண்டும் என கண்ணணிடம் கேட்டான். கண்ணன் எந்தப் ப்க்கம் என்று விளக்கம் கூறவில்லை.
உனது தர்மம்் எதுவென்று நீயே முடிவு செய்துக் கொள் என்றே கூறினார். நமது தர்மம் எதுவென்று நாமே முடிவு செய்ய வேண்டும்.
மகாபாரதத்தில் கிருஷ்ணர்் போரிடவில்லை. நான் ஒரு பக்கம் என் படைகள் ஒரு பக்கம் என்றார்.
யார் எதை விரும்பினார்களோ அவர்களுக்கு அவைகள் கிடைத்தன. பகவான் நாம் கேட்பதை தான் கொடுப்பான்
பாமரர்கள்் தங்களுக்கு தனம், பொருள், செல்வாக்கு , பதவி வேண்டும் எனக் கேட்பார்கள். ஆத்ம வழியில் செல்பவர்கள் தங்களுக்கு தியானம் மட்டும் போதும் என்பார்கள்.
கௌரவர்களுக்கு படைபலம் போய் சேர்ந்தது.பாண்டவர்களிடம் கிருஷ்ணர் போய் சேர்ந்தார். அவர்கள் அளவை விரும்பினார்கள் இவர்கள் தரத்தை விரும்பினார்கள்.
சாமானியர்கள் பணத்தின் மேல் ஆசை கொள்கிறார்கள். பிரமிட் மாஸ்டர்கள் தியானம் கிடைத்தால் போதும் என்று வேண்டுவார்கள். வேறு எதன் மீதும் அவர்களுக்கு நாட்டம் இல்லை.
காலம் மாறியுள்ளது நடக்கும் விஷயங்கள் மாறுவதில்லை. அப்பொழுது பாண்டவர்கள் குறைவு கௌரவர்கள் அதிகம். இப்பொழுது பாண்டவர்கள் அதிகம் கௌரவர்கள் குறைவு.
வருங்காலத்தில் அனைவரும் கிருஷ்ணராக மாறுவர். யோகிகளாக மாறுவர் .தியானம் கற்பிப்பவர் கிருஷ்ணரின் தர்மவழியில் நடப்பவர் தியானம் கற்றுக் கொள்பவர் அர்சுனனின் தர்ம வழியில் நடப்பவர்.
பிரமிட் ஆசான்கள் தியானம் கற்பிக்க பணம் பெறுவதில்லை. தியானம் கற்பிப்பது அவர்களின் தர்மமாகும்்.
துரியோதனன் தர்மம் அறியாதவன் அல்ல .தர்மம்் தெரிந்தாலும் அதர்மமே எனக்கு தேவை என்று விரும்பி செய்தான். எல்லாவருக்கும் உள்ளிருக்கும் ஆன்மா தர்மமே செய். தர்மம் எது என்றும் கூறும்.
தர்மம்் அறியாதவர் யாரும் இல்லை ஆனால் தர்மம்் செய்பவர் அல்லது செய்யாதவர் உண்டு. என் தர்மம் என்னிடம் தியானம் கற்றுக் கொள்ள வருபவர்களு க்கு தியானம் சொல்லித் தருவதே .
ஒருவரும் இல்லையென்றால் சுகமாக தியானத்தில் ஆழ்வதே எனது தர்மம். நான் எனது தர்மத்தை கடை பிடிக்கிறேன்.
நம் உடல் உறுப்புகள் அதனதன் பணியை செய்துக் கொண்டு தங்கள் தர்மத்தை கடைபிடிக்கின்றன. நாம் நம்முடைய தர்மத்தை செய்ய வேண்டுமல்லவா?
சிருஷ்டியை நோக்கி இது தர்மமா எனக் கேட்கும் சிரமத்தை சிருஷ்டி கொடுப்பதில்லை. சிருஷ்டி அதன் தர்மத்தில் இருந்து மாறுவதில்லை.
எனக்கு நோய் உள்ளதென்றால் அது உன் கர்மப் பலன் அல்லவா? பாவம் செய்தால் ரோகம் புண்ணியம் செய்தால் போகம். தியானம் செய்தால் ஞானம். இது சிருஷ்டியின் சமநிலை தீர்வு.
திருதராஷ்டிரன் தருமம் நோக்காத குருடன். கண்ணில்லாதவர்கள் குருடர்கள் அல்லர். தர்மத்தை உணராதவரே குருடர். சிருஷ்டி தர்மத்தின் பக்கமே நிற்கும்.
Comments