பத்ரிஜியின் மொழிபெயர்ப்பு பாகம் 2
வாயைத் திறந்தால் உண்மையை பேசுங்கள் . இல்லையென்றால் வாயை மூடி இருப்பது நலம் . செய்யும் செயல்கள் தர்ம்மமாக இருக்க வேண்டும். நம்மை ரட்சிப்பது ராமரோ , கிருஷ் ணரோ, இயேசுவோ அல்ல
இரண்யகசிபுவை கொன்றது நரசிம்மர் அல்ல . அவன் செய்த பாவமே அவனைக் கொன்றது. கொரோனாவில் இருந்து காப்பது தடுப்பூசி அல்ல நாம் செய்த தர்ம்மே .
விஞ்ஞானிகள் தங்கள் அஞ்ஞானத்தை ஒப்புக் கொள்ளுவதில்லை. கண் தெரியாதவன் மற்றவருக்கு வழி காட்டுவது போல சத்தியம் அறியாதவர்களே நமக்கு வழிகாட்டுகின்றனர்.
நாஸ்திகர்கள் ஆஸ்திகர்களாக மாறுவர் , பின் ஆத்ம ஞானிகளாகவும் மாறுவர் . இது பரிணாம வளர்ச்சி தத்துவம் . இங்குள்ள அனைத்து உயிரனங்களும் ஜீவ தத்துவமே.
அல்லாவை , இயேசுவை நம்புவர்களும் ஜீவ ஹிம்சை செய்வதை நிறுத்துவதில்லை. ராமரும் கிருஷ்ணரும் உண்டு என்பவர்கள் மேசையில் கீதையும் இருக்கிறது. அசைவ உணவும் இருக்கிறது.
எனவே பாதி சத்தியத்தை உணர்பவர்களால் முழு சத்தியத்தை உணர முடிவதில்லை. பிரமிட் ஆசான்கள் ஆன்மிக விஞ்ஞானிகள் எனவே அவர்கள் ஜீவ ஹிம்சை செய்வதில்லை.
உயிரினங்கள் அவைகளின் காலம் முடிந்த பிறகு இறப்பதற்கு அவற்றிற்கு உரிமை உண்டு. நம் உயிரை பறிக்கவே நமக்கு உரிமை இல்லை . பின் எவ்வாறு வேறு ஜீவனின் உயிரைப் பறிக்க உரிமை கொள்கிறோம்.
தற்கொலை மகாபாவம் . நம் உடல் மாமிசம் சாப்பிடுவதற்காக படைக்கப் பட்டதல்ல. டீசல் வண்டியில் பெட்ரோல் ஊற்றினால் கொஞ்ச காலம் ஓடும் பின்னர் பிரச்சனை உண்டாகும் அல்லவா .
நம் சரீரமும் அசைவத்தை உண்டு வளர்ந்தால் சிறிது காலம் கழித்து வியாதிகளினால் அலைக்கழிக்கப்படும். உலகில் உள்ள கோடானகோடி உயிர்களும் இப்பூமியில் வாழவே படைக்கப்பட்டுள்ளன.
பாவம் செய்பவன் அதை உணர்ந்து நிறுத்தி விட்டு மன்னிப்பு கேட்டால் மட்டுமே ரோகம் போகும். தப்பு செய்யவில்லை என்பவர்களுக்கு வியாதி போவதில்லை.
முதலில் தவறு செய்யக் கூடாது. செய்து விட்டால் அதை ஒப்புக் கொண்டு பிராயசித்தம் செய்து விட்டு மன்னிப்பு கேட்க வேண்டும். ஜீவ ஹிம்சை செய்ததுு பாவம் என்று உணர்ந்து ஒப்புக் கொண்டால் கொரோனா கூட நம்மை விட்டு போகும் . மீண்டும் மீண்டும் பாவம் செய்தால் புதிய புதிய ரோகங்கள் வரும் . எனக்கு அதிகமான வியாதிகளின் பெயர்கள் தெரியவில்லை. ஏனெனில் எனக்கு எந்த வியாதியும் வந்ததில்லை.
நாம் சூரர்களாகக வாழ்வோம் . அசூரர்களாகக வாழக்கூடாது. நாமே நம்மை திருத்திக் கொள்ள வேண்டும். சங்கீதம் வேண்டுமெனில் கடினமாக சாதனை செய்துக் கற்க வேண்டும்.
உங்களுக்கு சத்தியம் தெரிய வேண்டுமானால் கடினமாக தியான சாதனை செய்ய வேண்டும். சத்தியத்தை யாரும் கையில் எடுத்துக் கொடுக்க முடியாது.
ஒருவன் மரத்தை பிடித்துக் கொண்டு மரம் என்னை பிடித்துக் கொண்டது என்றான். உண்மை அதுவல்ல. அது போல அதர்மம்் நம்மை பிடிப்பதில்லை. நாமே அதர்மத்தை பிடித்து கொண்டு இருக்கிறோம்.
Kommentare