பத்ரிஜியின் அவர்களின் உரையின் தமிழாக்கம்
சத்தியம் தர்மம் இரு வார்த்தைகள் உள்ளன. சத்தியம் அறிந்தவர் தர்மத்தை உணர்ந்தவர் . சத்தியம் அறியாதவர் தர்மத்தை உணர மாட்டார்.
சத்தியம் என்பது எது இருக்கிறது எது இல்லை என்று புரிவது .தர்மம் என்பது எது செய்யலாம் எதைச் செய்யக் கூடாது என்று அறிவது .
. தர்மம் செய்வதற்கு சத்தியம் தெரிவது அவசியம் . சத்தியம் என்பது ஆன்மா உண்டு என்று அறிவது. அசத்தியம் என்பது உடல் அழியும் ஆன்மா அழிவதில்லை என்பதை அறியாமல் இருப்பது.
அநேக சத்தியங்கள் உண்டு. ஆன்மா , மூலப்பொருள், மூலப்புருஷர்கள் , ஜென்மங்கள்,கர்மா, கர்ம்ப் பலன்கள், சிருஷ்டி தத்துவம் எதுவும் நம் கண்களுக்கு தெரிவதில்லை.
நம் கண்களுக்கு தெரியாதத லால் அவைகள் அனைத்தும் பொய்யல்ல . தெரிந்த உண்மைகளும் உண்டு. தெரியாத உண்மைகளும் உண்டு.
ஆத்ம நிலையில் உள்ளவர்களுக்கு பிரபஞ்சத்தில் அனைத்து அறியாத உண்மைகளும் புலப்படும்.தெரிவது ஆஸ்தி . தெரியாமல் போவது நாஸ்தி.
நா அஸ்தி உண்டென்பது ஆஸ்திக தத்துவம் . இல்லை என்பது நாஸ்திக தத்துவம் . ஆஸ்திகர்களுக்கு விதைக்குள் இருக்கும் விருட்சமும் தெரியும்.
கௌதம புத்தர் , சாக்ரடிஸ் , இயேசு போன்ற பல குருமார்கள் அறிந்தது. எனக்கு விதை மட்டுமே கண்ணுக்குள் தெரிகிறது என்பார்கள் நாஸ் திகர்கள்.
சத்தியம் தெரிந்தால் வெளிச்சம் இல்லையேல் இருட்டில் தான் வாழ்வர். தியானம் செய்தால் ஆத்ம ஞானிகள் ஆகலாம்.
சத்தியம் உணர்ந்தால் தர்மம் செய்வது சாத்தியம். சத்தியம் தாயானால் பிறக்கும் குழந்தையே தர்மம் . தாயில்லாமல் குழந்தை இல்லை.
சத்தியம் இல்லையேல் தர்மம்் இல்லை. சத்தியம் என்பது ஞானம், தர்மம்,புண்ணியம், போகம், சுகம், ஆனந்தம், வெளிச்சம் [ஆத்ம பிரகாசம்]
அசத்தியம் -அஞ்ஞானம் , அதர்மம், பாவம், ரோகம், துக்கம் அந்தகாரம், இவையே ஆன்மாவின் சமன்பாடாகும்.
காலால் நடக்காமல் தலையால் நடக்க இயலுமா? நம் சுக துக்கங்கள் நம் புண்ணிய பாவங்களில் இருந்தே வருகிறது.
இவையே பிரபஞ்ச சத்தியங்கள். தினமும் குடிப்பவன் தனது உடல் செல்களை அழிக்கிறான். அதன் பாவமே அவனுக்கு ரோகமாகிறது.
உலகம் முழுவதும் மிருக வதை மற்றும் மனித வதை செய்பவர்களுக்கே வியாதிகள் வருகின்றன.
கடந்த கால பாவம் இப்பொழுது ரோகமாகிறது. இப்பொழுது செய்யும் பாவம் அடுத்த பிறவியில் ரோகமாகிறது.
இதில் இருந்து தப்பிக்க இயலாது. நான் இப்பொழுது மிகவும் நல்லவன் எனக்கு எதற்காக இந்த துன்பங்கள் . நேர்கின்றன என்று ஒருவன் கதறுகிறான் .
எனில், கடந்த பிறவியில் நீ செய்ததுு என்ன என்பதை அறிவாயா? எனக்கு தெரியவில்லை என்றால் அதை அறிந்துக் கொள்ள தியானமே வழி.
கடந்த காலப் புண்ணியம் இந்தப் பிறவியில் சுகத்தை அளிக்கிறது. காரணம் எப்பொழுதும் கடந்த காலத்தில் உள்ளது. காரியம் இப்பிறவியில் நிகழ்கிறது.
Comments