top of page

சுதந்திரமா, சார்ந்திருத்தலா எது தேவை?


What is needed, independence or dependence?
What is needed, independence or dependence?

அனைவரும் சுதந்திரமாக இருப்பதாக நினைக்கிறோம் . அதையே விரும்பவும் செய்கிறோம். ஆனால் ஒவ்வோருவரும் ஏதோ ஒரு வகையில் அடுத்தவரை சார்ந்தே வாழ்கிறோம் என்பது உண்மையே. சுதந்திரமாக இருப்பதாக நினைப்பவரும் தன்னை அடுத்தவர் சார்ந்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பிறரை சார்ந்தவர் ஆகிறார். சார்ந்திருப்பவர் அவ்வாறு இருப்பது அறியாமையின் காரணமாகவும் இருக்கலாம் .சில சமயங்களில் பொறுப்பேற்க அச்சப்பட்டும் இருக்கலாம். சில சமயம் தவறுகள் நேர்ந்தால் அடுத்தவர் மேல் குறைகளைக் கூறி தப்பிக்கும் மனோபாவத்தினாலும் இருக்கலாம்.

 

சார்ந்திருத்தல் பொருளாதார சார்ந்திருத்தலாக மட்டுமே இருப்பின் விடுபடுதல் எளிதானது. ஆனால் சார்ந்திருத்தல் உணர்வு ரீதியாக அல்லது அறிவு ரீதியாக இருப்பின் அது நிச்சயமாக சார்ந்திருப்பவரின் வளர்ச்சியை தடுக்கும். மேலும் அவர்கள் சார்ந்திருக்கும் நபரின் ஆணவத்தை வளர்ப்பதாகவும் அமையும். ஆன்ம ரீதியில் யாரும் யாருக்கும் குறைவானவர்கள் அல்ல என்பதும் அனைவரும் சம்மானவர்களே என்பதும் மாற்ற  முடியாத சத்தியங்கள்.  இதைத் தெளிவாக அவரவர் புரிந்துக் கொள்வதற்கே தியானம் தேவைப்படுகிறது. தியானம் மூலம் உண்மையான ஆன்ம சுதந்திரத்தை உணர்வதோடு அனைவரும் சுதந்திரமானவர்கள் தான் என்ற அடிப்படை உண்மையையும் உணரலாம்.

 

சுதந்திரம் நாம் அடைந்து விட்டோம் என்பதன் பொருள் அடுத்தவர் கருத்துக்களுக்கு மதிப்பில்லை என்பதல்ல . மதிப்புள்ள கருத்துக்களை அதன் உண்மைத்தன்மையை உணர்ந்து ஏற்றுக் கொள்வது அவரவர்க்கான வளர்ச்சியையே கொடுக்கும். எப்பொழுதும் அனைத்தையும் உள் வாங்கும் தன்மையில் இருப்பது மிக முக்கியம். தியானத்தின் மூலம் எது சரி எது தவறு என்ற உலகின் ஆதி கால கேள்விகளுக்கு விடையை அறிய முடியும். தன் சுதந்திரத்தை மதிக்கும் ஒருவனால் மட்டுமே அடுத்தவர்களின் சுதந்திரத்தை மதிக்கும்  இயல்பு தானாகவே உருவாகும் . தேவையில்லாத அறிவுரைகளை வழங்குவதோ, அடுத்தவர் செயல்களில் தலையிடுவதையோ இல்லாமல் வாழ்வான்.

 

அடுத்தவர் வாழ்வில் அவரின் விருப்பம் இல்லாமல் தலையிடுவது அதைச் செய்பவருக்கு மிகப் பெரிய  எதிர் மறை கர்மாவை கொண்டு வரும்.

ஒவ்வோரு ஆன்மாவும் சுதந்திரமானதே. ஒவ்வோரு ஆன்மாவும் தனித்துவம் மிக்கதே. அதனதன் நிலைகளில் மிகவும் சரியாகவே உள்ளது. ஆன்மிகத்தை மிகவும் ஆழமாக நோக்கும் போது இந்த பிரபஞ்சத்தில் எதுவும் தவறல்ல எல்லாம் சரியாகத்தான் இயங்குகிறது என்பது நமக்கு விளங்கும்.அடுத்த ஆன்மாக்களை துன்புறுத்தாமல் தன் வளர்ச்சியில் மட்டும் கவனம் கொள்பவர் எவரும் விரைவாக வாழ்வில் முன்னேறுவர். சுதந்திரம் ஆன்மாவின் இயல்பு  என்பதும் மற்றும் சார்ந்திருத்தல் என்பது நமது கற்பனை  என்பதும் ஆன்மிகத்தை அறிந்தால் மட்டுமே உணர முடியும். ஆன்மிகத்தை உணர தியானம் மட்டுமே ஒரே வழி.

2 views0 comments

コメント


Message for Guided meditation for anxiety
bottom of page