top of page

தியானம் என்றால் என்ன?

தியானத்தை குறித்து பல்வேறு கருத்துக்கள் உள்ளன. சிலர் தியானம் என்றால் மூச்சு பயிற்சி என்றும் ஒரு சிலர் உடலை அசைக்காமல் வைப்பது என்றும் வேறு சிலர் தியானம் என்றால் மனதின்  கவனத்தை  குவிக்க பயிற்சி செய்வது என்றும் நினைக்கின்றனர். உண்மையில் தியானம் என்பது செய்யப்படும் செயல் அல்ல.தியானம் என்பது ஒரு விழிப்பு  நிலையாகும்.  மேலும் மனதில் இருந்து விடுபடுதலும் ஆகும்.இது இயல்பாக நடைபெற வேண்டும்.



 

புத்தரும் தன் தேடுதல் எனும் செயலை கை விட்ட பின்பே ஞானநிலையை தியானம் மூலம் அடைந்தார் என வரலாறு சொல்கிறது. இதன் புரிதலுக்கு நாம் நம் உடல் மற்றும் மனதின் செயல்பாடுகளை  குறித்து அறிவது அவசியம். ஒரு நாளில் உடலானது அதிகபட்சம் 8-10 மணி நேரம் வேலை செய்கிறது . பின்னர் அதற்கு நாம் ஓய்வு கொடுக்கிறோம். ஆனால் மனமானது ஓய்வெடுப்பதே இல்லை. நாம் அதற்கு ஓய்வு கொடுப்பதும் இல்லை.இதனால் உடலானது மனதிற்கான ஓய்விற்காக நமக்கு தூக்கத்தை கொடுக்கிறது.இங்கு மனம் ஓய்வெடுத்தாலும் அந்த ஓய்வு விழிப்புணர்வற்ற நிலையில் நிகழ்கிறது.

 

மனதானது விழிப்புணர்வோடு ஒய்வெடுப்பதே தியானம்.எந்த ஓரு இயக்கத்திற்கும் ஓய்வு தேவை.மீண்டும் புத்துணர்வோடு செயல்பட இது உதவுகிறது.ஒரு வாகனமோ அல்லது மின் சாதனங்களோ ஓய்வின்றி வேலை செய்தால் தன் ஆற்றலை விரைவில் இழக்கும். நம்மை நாம் புதிப்பிக்க தூங்காமல் தூங்கும் இந்த தியானமானது மிகவும் அவசியம்.இது ஒரு அக தொழில் நுட்பம்.  இதற்கு முதலில் கண்களை மூடி விழிப்புணர்வோடு மனதிற்கு ஓய்வளிக்க பழக வேண்டும். பின்னர் கண்களை திறந்து எந்த வேலை  செய்தாலும் இடையிடையே மனதின் செயல்பாட்டை நிறுத்த பழக வேண்டும் .

 

மனதின் செயல்பாடு எந்த கடந்த காலத்திற்கோ எதிர் காலத்திற்கோ போகாமல் நிகழ்கணத்தில் மட்டுமே இருக்க பழக்கினால் அதன் கட்டுபாடு நம்முடைய கைகளில் இருக்கும். இவ்வாறு மனது செயல்பட்டால் அதற்கு ஆற்றல் குறைபாடு ஏற்படுவதில்லை.இதன் ஆரம்ப செயல்பாடாக புத்தரின் தியான முறையான மூச்சைக் கவனிக்கும் எளிதான ஆனாபான சதி தியான முறை நமக்கு வெகுவாக கை கொடுக்கும் .இதனை கடை பிடித்து பிரபஞ்ச உண்மைகளையும் அறிந்து வாழ்வில் அனைத்திலும் எளிதாக வெற்றி பெறலாம். 

5 views0 comments

Comentarios


Message for Guided meditation for anxiety
bottom of page