முக்தி என்று சொல்லை எடுத்து கொண்டால், அது முக்தி என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து உருவான தமிக்ருதச் சொல்லே ஆகும். முற்று என்ற முழுமை , முதிர்ச்சி, அடைவு, வலிமை என்றெல்லாம் பொருட்களை கொண்டதாகும்.
பிறப்பு - இறப்பு மீண்டும் பிறப்பு என்ற சுழற்சியிலிருந்து விடுபட்டு பரம பாதத்தை அடைவதே முக்தி எனப்படும் .
எண்ணிலடங்கா முற்பிறவிகளில் செயல் செய்து சேர்த்துவைத்திருக்கும் மிக அதிக அளவிலான சஞ்சித கர்மங்கள் தீருவதற்குள் ஒவ்வொரு பிறவியிலும் அதன் அளவை எஞ்சியுள்ள ஆகாமி என்ற கர்மங்கள் மூலம் அதிகரித்து வருகின்றோம் . எனவே கர்ம பலன்கள் தீர்ந்து நாம் முக்தி அடையவது என்பது நமது முயற்சி இல்லாமல் தானாக நடைபெறாது.
முக்தி பெற வழிகள்
1. சரியை
2. கிரியை
3. ஞானம்
4. யோகம்
சரியை :
சரியை என்பது நாம் ஒருவரிடம் நடந்துகொள்ளும் முறையை பற்றி கூறும் வார்த்தை. அன்பு, அடக்கம், ஒழுக்கம் , பொறை. இந்த நற்பண்புகளை கடைபிடித்து முக்தி பெறுவது சரிரை காட்டும் வழி.
கிரியை :
கிரியை என்பது ஒருவர் செய்யும் இயல்.அதாவது, ஒருவருக்கு விருந்தோம்பல் செய்வதும், இனியவை கூறுதலும் போன்றவையே பற்றி கூறுதலே கிரியை காட்டும் வழி.
ஞானம் :
ஞானம் என்பது ஒரு உள்ளுணர்வு. இறைவன் தனக்குள்ளே, இறைவனுக்குள்ளே யான்; இறைவன் வெளியே, வெளிக்குள்ளே யான் என்றல்லாம் உணர்ந்துகொண்டு செயலாற்றி வாழ்தல் முக்தி பெறலாம் என்பது ஞானம் உணர்த்தும் வழி.
யோகம் :
யோகம் என்பது ஒரு தவம் .இதனை கடைபிடித்து முக்தி பெறுவது இன்னொரு வழி.
இப்பொழுது நாம் அனைவரும் உயிருடன் இருக்கிறோம் அல்லவா. நாம் உயிருடன் இல்லா விட்டாலும், நாம் இந்த ஜென்மத்தில் உயிருடன் இருக்கும் பொழுது செய்யும் நல்வினை மற்றும் தீவினையின் அடிப்படையில் நமக்கு அடுத்த பிறவி ஒன்று வருகிறது .
முக்தி என்றால் மறுபடியும் பிறக்காமல் இருப்பது மறுபடியும் இறக்காமல் இருப்பது
Visit : https://www.pmctamizhtv.com/
Learn Meditation : +91 7667555552.
Comments