அப்பொழுது நம்மிடம் ஒரு விடுதலை உணர்வு உண்டாகும். பொம்மலாட்டக்காரன்கையில் உள்ள கயிறு பொம்மையின் ஒரு பக்கம் கட்டப்பட்டு அவன் கையில் இஷ்டப்படி பொம்மைகள் ஆடும்.
ஆனால் நாம் வேதனை பட்டும் வேதனைப்படுத்தியும் இரு கயிறுகளால் கட்டப்பட்டு ஆட கூட முடியாத பொம்மைகளாக இருப்பது போல இருக்கிறோம்.
மன்னிப்பு மற்றும் மன்னிப்பை ஏற்றுக் கொள்ளுதல் இது இரண்டும் இவ்விரு கயிறுகளின் பிடியிலிருந்து நம்மை விடுவிக்கும் .
நன்றி மற்றும் மன்னிப்பு போன்ற வார்த்தைகள் நம்மை கட்டும் அந்த பொம்மலாட்ட கயிறுகளிலிருந்து விடுவிக்கிறது .
அடுத்து செல்லினால் உண்டான சொல்லின் முடிவாக உண்டாகும் கர்ம பலன்கள் அவை அளவிட முடியாதவை.
எண்ணங்களால் ஏற்படும் கர்மாவை பிறர் அறிய முடியாது. அதனால் நாம் அதை கட்டுப்படுத்துவதும் கடினமாக உள்ளது.
தியானத்தினால் மட்டுமே அது கட்டுப்படுத்த முடிகிறது. சொற்களினால் ஏற்படும் கர்மாவும் அதிகம் என்றாலும் தெரியாமல் சொல்லிவிட்டேன். கவனிக்காமல் கூறிவிட்டேன் என்று ஞானவழி தெரியாதவர்கள் கூட தப்பிக்க வழி உள்ளது .
ஆனால் செயல்களினால் ஏற்படும் கர்மாவினால் உண்டாகும் விளைவை மாற்றுவது மிகவும் கடினம் .எங்கோ ஒரு பட்டாம்பூச்சி தன் சிறகு அசைத்தால் பூமியில் ஓரிடத்தில் புயல் வரும் என்று ஒரு பழமொழி ஆங்கிலத்தில் இருக்கிறது .
வினை விதைத்தவன் வினை அறுப்பான் .திணை விதைத்தவன் திணை அறுப்பான் .முற்பகல் செய்யும் பிற்பகல் விளையும் என்று நம்மிடம் கூட பல பழமொழிகள் உண்டு.
செயல்களினால் ஏற்படும் கர்மாவை தீர்க்க அதிக பிறப்புகளும் தேவைப்படும். தியானத்தில் கடின சாதனை புரிந்தால் மட்டுமே கடந்த ஜென்மம் மற்றும் இந்த ஜென்ம பாவக்கர்மாக்களை நம்மால் அறுக்க இயலும்.
செயல்களினால் வரும் கர்மாவானது அவரவர் நிலைக்கு ஏற்ப அமைகிறது. செயல்களை பெரும்பாலும் கட்டுப்படுத்த முடிவதில்லை.
துரியோதனனோ தர்மனோ அவரவர் செயல்களை அவரவர் நிலைகளைப் பொறுத்து தான் புரிகின்றனர் .எனினும் செயல்களினால் உண்டாகும் கர்மாவை தீர்க்க பல பிறவிகளும் தேவைப்படுகிறது.
இதில் நம்மால் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு கர்மா எது என்றால் சொல்லினால் உண்டாகும் கர்மாவாகும் .எனவே சொற்களை மிகவும் கவனமாக யோசித்து உபயோகிக்க வேண்டும்.
தியானத்தின் தெய்வீக வழியை உணர்ந்து நம் கர்ம செயல்களுக்கும் அதன் தாயான சொல்லுக்கும் அதன் தோற்றுவாயான செல்லுக்கும் அதாவது எண்ணங்களுக்கும் கட்டுப்பாடு விதிக்க கற்றோம் என்றால் கர்ம பந்தங்களில் இருந்து நாம் விடுபடலாம்.
Comments