நாம் அன்பு என்று நினைப்பது நம்முடைய அளவுகோலின்படி எதிர்பார்ப்புகள் நிறைந்தது.
எதிர்பார்ப்புகள் இருப்பதினாலேயே ஏமாற்றம் , கோபம் கவலை மற்றும் வேதனை போன்ற உணர்வுகள் அதைத் தொடர்ந்து வருவதும்* உறுதியாகிறது.
காதல் என்ற வார்த்தையின் பொருள் மொழிகளி்லேயே மிகவும் தவறாக பொருள் கொள்ளப்படும் வார்த்தைகளில் ஒன்றாக உள்ளது.
நான் உன்னை விரும்புகிறேன் என்ற வார்த்தையின் மூலம் நாம் அடுத்தவரும் அந்த உணர்வைப் பெற வேண்டும் என நுட்பமான வகையில் கட்டாயப்படுத்து கிறோம்.
ஒருவேளை அவர்கள் நம்மை விரும்பவில்லை என்று கூறினால் நம்முடைய நிலை என்ன?
நாம் தொடர்ந்து எந்த மாறுதலும் இன்றி அவர்களை அந்த உணர்வோடு எதிர்கொள்வோமா?
நாளடைவில் நம்முடைய உணர்வுகள் மாறி வேறு உறவுகளை தேடத் தொடங்குகிறோம்.
இப்பொழுது நட்புணர்வு குறித்து சிந்தித்தால் நட்பானது அதிக எதிர்பார்ப்பு இல்லாதது.
மேலும் அதிகளவில் யாரையும் நிர்பந்திப்பதில்லை. நட்புணர்வில் பெரும்பாலும் யாரும் யாரையும் காயப்படுத்துவதில்லை.
வெகு நாட்கள் கழித்து சந்திக்க நேர்ந்தாலும் அவர்களின் உணர்வுகள் மாறுவதில்லை.
எனவேதான் ஆன்மாக்கள் ஒன்றோடென்று நட்புணர்வில் தான் தொடர்பில் உள்ளன என்று ஆன்மிக ஆசான்கள் கூறுகின்றனர்.
வார்த்தைகள் ஏதாக இருந்தாலும் நாம் யாரையும் கட்டாயப் படுத்தவோ , அவர்களின் வாழ்வில் தலையிடுவதோ கூடவே கூடாது.
இதை நாம் எப்படி கற்றுக் கொள்வது மற்றும் எவ்வாறு புரிந்துக் கொள்வது மிக எளிதான வழி தியானம் மட்டுமே.
இதை யாரும் நமக்கு கற்பிக்காமலேயே இந்த பிரபஞ்சம் நமக்கு ஆழ்ந்து தியானிக்கும் பொழுது புரிய வைக்கிறது.
பிரபஞ்சம் மொத்த இயக்கமும் இந்த அலைவரிசையில் தான் இயங்குகிறது. அதாவது நமக்கான சுய சுதந்திரம் எதிலும் அது தலையிடுவதில்லை.
சிலர் நினைக்கலாம் கர்மாக்களினால் நாம் வேதனைகளை அனுபவிக்கிறோம் . அதற்கு இப் பிரபஞ்சமே காரணம் என நினைக்கின்றனர்.
நாம் செய்யும் செயல்களுக்கான விளைவுகளைத் தான் நாம் சந்திக்கிறோம்.
பிரபஞ்சம் நம்முடன் எப்பொழுதும் தொடர்பில் உள்ளது .ஆனால் , எந்த வகையிலும் நம்முடன் இணைந்து இருப்பதில்லை.
இணைந்து இருப்பது என்றால் பற்றுடன் இருப்பது பிரபஞ்சம் நம்மை விட்டு விலகி விட்டேற்றியாக இருப்பதில்லை , எனினும், நம்முடன் பற்றுடன் இருப்பதில்லை.
பற்றில்லாததாலே பிரபஞ்சம் நம்முடன் முழு அன்புடன் இருப்பதை புரிந்துக் கோள்ளலாம்.
உதாரணமாக நாம் ஒரு வண்ணத்துப்பூச்சி தன் இயல்போடு வந்து நம் கையில் அமர்வதன் அழகைத் தான் பிரபஞ்சம் நமக்கு வழங்குகிறது.
கட்டாயப்படுத்தி அதனை நாம் கையில் இருத்த நினைத்தால் அதன் மன இயல்பு எவ்வாறாக இருக்கும்.
நாம் அந்தப் பிரபஞ்சத்தின் இயல்பில் இருந்தால் நாம் உண்மையான அன்பின் தன்மையை புரிந்துக் கொள்ள முடியும்.
இப்பொழுது நாம் நம்மை ஆராய்ந்து பார்த்தால் நமது அன்பு, காதல் மற்றும் நட்பின் தன்மை எவ்வாறு இருக்க வேண்டும் என்பததை உணர்ந்துக் கொள்ள முடியும்.
நாம் எப்பொழுது பிரபஞ்ச தன்மையின் இயல்போடு இணைகிறோமோ அப்பொழுது துன்பம் என்பதன் பேச்சுக்கே இடமில்லை.
பிரபஞ்சம் நாம் எப்படி இருப்பினும் , என்ன செய்தாலும் தன் இயல்பில் இருந்து மாறுவதேயில்லை. இது போலவே நாமும் இருக்க பிரபஞ்சமே கொடுத்த கருவி தான் தியானம்
தியானத்தின் மூலமே நாம் பிரபஞ்ச அலைவரிசையின் தன்மையை உணர்ந்து அதனோடு இணைய முடியும்.
Commentaires