நாலாவது கண்ணாடி {மூன்றாவது }
- airavathportal
- Apr 8
- 1 min read

நாலாவது கண்ணாடியின் அற்புதம் என்னவென்றால் காலம் கடந்துப் போயிற்றே என்று எண்ண வேண்டிய தேவை இல்லை.
நாம் எப்பொழுது மாற நினைக்கிறோமோ அக்கணமே வலிகளை சீர் செய்ய வழி வகுக்கும். நம் உறவினர்களே நம்முடைய நான்காவது கண்ணாடியாக நிற்பார்கள்.
நம்முடைய மாற்றம் எதுவோ அதையே பிரதிபலிப்பார்கள். வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் நிகழ்வுகள் நம்மை நோக்கி நிகழ்த்தப்படும் தாக்குதல் அல்ல என்பது புரியத் தொடங்குகிறது.
நமது வாழ்வின் சவால்கள் அனைத்தும் நமக்காகவே என்பதை உணர வைக்கும். நான்காவது கண்ணாடியானது நம்முடைய நெருங்கிய உறவினர்கள் மூலம் நாம் மறந்து போன உணர்வுகளை நினைவூட்டுகின்றன. .
நம்முடைய அதீத மோகங்கள் யாவும் நம்முள் நாம் தொலைத்துவிட்ட உறவுகளின் அருமையையும் அன்பையும் வெளிப்படுத்துகின்றன.
அது எவ்வித மோகமாக இருந்தாலும் அம்மோகத்தின் பிடியில் இருந்து நாம் அதை மோகம் என்று உணர்ந்து விலக ஆரம்பிக்கும் பொழுது தான் நம்முடைய மறந்து போன அன்பின் தேவைகளை உணர ஆரம்பிக்கிறோம்
தொடரும்
Comments