பத்ரிஜி அவர்களின் சொற்பொழிவு
செய்யும் கர்மங்களுக்கு பலன்களும் சேர ஆரம்பிக்கிறது. நல்ல செயல்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். கெடுதியான செயல்களுக்கு கெட்ட பலனை வரும்.
படம் பார்க்கும் பொழுது படிப்பு குறித்து யோசிப்பதில்லை கார் ஓட்டும்போது சிரத்தை இல்லாமல் ஓட்டினால் விபத்து தான் ஏற்படும்.
செய்யும் அத்தனை செயல்களிலும் சிரத்தையும் கவனமும் இருக்க வேண்டும். ஆத்மார்த்திக சாஸ்திரம் அறிந்தால் அனுபவித்து சந்தோஷமாக வாழலாம் .
பிறப்பு இறப்பு சரீரத்துக்கு மட்டுமே ஆன்மாவிற்கு அல்ல என்று உணர்ந்து பின் வரும் சந்தோஷத்தின் அழகை குறித்து யோசியுங்கள்.
கர்ம சித்தாந்தம் தெரிந்த பின் நாம் நம் வாக்கு செயல்களில் ஜாக்கிரதை உணர்வுடன் வாழ தொடங்குவோம்.
நாம் குழந்தை பிறந்து வளர்வது போல ஆத்மாக்களும் குழந்தை ஆத்மாவிலிருந்து வளர்ந்து முதிர்ந்த ஆத்மாவாக மாறும்.
அதற்கு 300லிருந்து 400 ஜென்மங்கள் தேவைப்படும் . உலகம் நாடகம் மேடை நாம் பலவித கதாபாத்திரங்களின் நடித்து அனுபவம் பெறுகிறோம்
பிறக்கும் ஒவ்வொரு ஜென்மத்திலும் செய்யும் கர்மாக்கள் மூலம் கர்ம பலன்களை சேர்த்துக் கொண்டே வருகிறோம்.
புரோகமன சித்தாந்தம் நான்காம் சத்தியம்
ஆத்மா கற்றுக்கொள்ளும் பாடங்களில் நான்காம் சத்தியம் புரோகமன சித்தாந்தம். பரீட்சை எழுதும் மாணவன் 100க்கு 10 எடுத்தால் தோற்றுவிடுகிறான்.
ஆனால் , ஆன்ம பரிட்சையில் தோல்வி என்பதே இல்லை. ஆன்மா படிப்படியாக படித்து முன்னேறிக் கொண்டே இருக்கும்.
எந்த நிகழ்வும் பாடங்கள் என்று உணர்ந்த பின் ஹாயாக நாம் உட்காரலாம். பரீட்சை எழுத மாட்டேன் என்று ஆன்மா தப்பிக்காது.
எல்லா கதாபாத்திரங்களும் ஜென்மங்களும் நல்லவையே . நாம் வாழ்க்கையில் பின்னோக்கி செல்வதில்லை.
முன்னேறி மட்டுமே செல்கிறோம். எதற்கும் நாம் கலங்க வேண்டியது இல்லை. கற்றுக் கொடுப்பவர் அறிந்து சொல்லிக் கொடுத்தால் நாம் எளிதாக கற்றுக் கொள்கிறோம் அல்லவா .
யோக சித்தாந்தம் நம்மை வேகமாக புரிந்து கொள்ள வைக்கும். சிறு வயதிலேயே இதை நாம் புரிந்து கொள்வதே நல்லது.
யோக சித்தாந்தம் இப் புரிந்து கொள்ளுதலை விரைவாக்கும் எனவேதான் கிருஷ்ணர் யோகியாக மாறு என்று அர்ஜுனனிடம் கூறினார்.
நம் பயணம் பாதையில் அல்லாது வானத்தில் செல்வது போல வேகம் எடுக்கும் பிரமிட் மாஸ்டர்கள் எல்லாம் யுவ ,மாணவ, முதிர்ந்த ஆரம்ப நிலைகளை கடந்து கற்பிப்பதற்காக பிறந்த ஆன்மாக்களே.
Comentários