
மூன்றாவது கண்ணாடி நம்முடைய இழப்புகளை பிரதிபலிக்கிறது. இந்த இழப்புகள் கொடுத்ததோ அல்லது எடுக்கப்பட்டதாகவோ இருக்கலாம்.
சில சமயம் நாம் எதிர்பாராமல் சந்திக்கும் சில நபர்களால் பெரிதும் கவரப்படுகிறோம்.
அவர்கள் காதல் இணையாக மட்டுமல்ல சகோதரியாகவோ தாய் தந்தை உறவினர்களாக கூட இருக்கலாம்.
எதனால் அவர்களால் கவரப்படுகிறோம். அவர்களை முதன்முதலில் அப்பொழுதுதான் பார்த்திருப்போம் ஆனாலும் கூட அவர்களால் கவரப்படுவோம்.
இதற்கு காரணம் நாம் நம் வாழ்வில் சந்திக்கும் சில பல சவால்களினால் நம் ஆன்மா சில சமயம் துண்டுகளாக பிரிவதும் உண்டாகும்.
அதன் தொலைந்த பகுதியை நாம் சந்திக்கும் போது அந்த புதிய நபரிடம் அதன் பிரதிபலிப்பைக் காணும் போது நாம் முழுமையடைவதை உணர்கிறோம்.
பிரபஞ்சமே அவர்களை நம் வாழ்வில் நாம் சந்திக்கும் நிகழ்வை நடத்தும். அவர்களிடம் நாம் தொலைத்த பகுதி மேலோங்கி இருப்பதை தன் உணர்வில்லாமலே நாம் அறிவதால் தான் ஈர்க்கப்படுகிறோம் .
நம்மிடம் இருந்து எடுக்கப்பட்ட பகுதி அவர்களிடம் பிரதிபலிப்பதை நாம் காண்கிறோம். நாம் தொலைத்த பகுதியால் கவரப்படுகிறோம்.
சிலர் அன்பான குடும்பம் இருந்தும் பால் ஈர்க்கப்படுகின்றனர். நாமே சூழ்நிலைகளால் கொடுத்த அல்லது நம்மிடமிருந்து எடுக்கப்பட்ட பகுதியை தேடி அவர்களுக்கு நம் வாழ்வில் இடமளிக்கிறோம்.
மூன்றாவது கண்ணாடி நாம் நம் வாழ்வில் தொலைத்ததை அல்லது எட்க்கப்பட்டதை பிரதிபலிக்கும்
Comments