
முன் முடிவுகளே நமக்குள் எதிர்ப்பை உருவாக்குகின்றன. எதை எதிர்க்கிறோமோ அதுவே பலம் பெறும்.
நாம் அதை உணர்வது கூட இல்லை. எந்த வேதனையின் அடிப்படையும் நாம் அதை எநிர்ப்பதும் மற்றும் ஏற்றுக் கொள்ளாத்தும் தான் காரணம்.
எது நேர்மறையானது எது எதிர்மறையானது என்று நாம் தான் முடிவு செய்கிறோம். நம்முடைய அகந்தையைத் தான் அது காட்டுகிறது.
யாராவது உங்களை எரிச்சலூட்டினால் புத்தரோ, இயேசுவோ இருந்தால் இதற்கு எப்படி ரியாக்ட் செய்திருப்பார்கள் என்று யோசியுங்கள்.
அவர்கள் கண்டிப்பாக நாம் வெளிக்காட்டும் உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்க மாட்டார்கள்.
அவர்களால் அந்த உணர்வுகளை கடக்க முடிந்தால் நம்மாலும் முடியுமல்லவா .
எனவே நாம் அனைவரையும் அனைத்து நிகழ்வுகளையும் முதன் முதலில் சந்திப்பது போலவே எதிர்கொள்ள வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டும்.
எந்த முன்முடிவுகளுடன் அல்ல, ஜெ. கிருஷ்ணமூர்த்தி அனைத்தையும் வெறும் சாட்சியாக பாருங்கள் என்கிறார். இதுவே மனிதனின் மிக உயர்ந்த நிலையாகும்.
அனைவரும் மாறக்கூடியவர்களே என்பதை உணர வேண்டும். இல்லையென்றால் மீண்டும் மீண்டும் அதையே நிகழ வைப்போம்.
நம்முடைய அதிர்வலைகளால் தான் நாம் அதை நிகழ்த்துகிறோம். பிரபஞ்சம் நமக்கு நாம் எதிர்ப்பதை தான் கொடுக்கிறது. அதற்கு தான் நீங்கள் அதிகமான ஆற்றலைக் கொடுக்கிறீர்கள்.
எனவே யாரிடம் பழகும் பொழுதும் அவர்களுடைய நேர்மறை எண்ணங்களை எதிர்பார்த்து தான் அணுக வேண்டும்.
குழந்தைகள் நல்லபடியாகத் தான் பழகுவார்கள் என்று முழுமையாக நம்பி நினைக்கும் பொழுதுதான் அவர்களின் பிஹேவியரில் மாற்றம் நிகழும்
.
அடுத்தவர்களை சந்திக்கும் போது அவர்களின் பழைய செயல்களைக் கொண்டு நாம் உருவாக்கிய தீர்மானங்களோடு அணுகினால், அதுவே வெளிப்படும்.
அந்த தீர்மானங்களை எப்பொழுது நாம் கைவிடுகிறோமோ அப்பொழுதே மாற்றம் தொடங்கும். அவை நினைவுகளாக இருக்கலாம் அப்பொழுது அவை ஞானமாக மாறும்.
இந்த புரிதல் மற்றவர்கள் மாறுமுன் நம் காயங்களை சரி செய்து விடும்.முன்முடிவுகள் இருந்தால் அன்பு செலுத்துவது கடினம்.
எனவே இரண்டாவது கண்ணாடி மிக முக்கியமானது அது நம்மில் உள்ள முன் தீர்மானங்களைத் தான் பிரதிபலிக்கிறது.
コメント