
இரண்டாவது கண்ணாடியில், எப்பொழுது முன் முடிவுகளை கை விடுகிறோமோ அப்பொழுது மாற்றம் நிகழ ஆரம்பிக்கும் என்பதை புரிந்து கொண்டேன்.
எதை நாம் எதிர்க்கிறோமோ அதுவே நீடிக்கும். இதை மாற்றுவதற்கு நாம் அறிந்துக் கொண்ட தியானமுறைகள் நமக்கு உதவும்.
அவர்களின் கடந்த கால கர்ம்பலன்கள் என்னவோ? அவர்கள் அதனால் என்னென்ன சவால்களை எதிர் கொள்ள வேண்டியுள்ளதோ? என்ற புரிதல் மற்றும் ஆன்ம ஒன்றுவணர்வோடு அணுக வேண்டும்.
நீ எதனால் இப்படி இருக்கிறாய். என் முன்முடிவினால் பாதிக்கப்பட்டு மாற முடியாமல் தவிக்கிறாய் என்ற கோணத்தில் பார்க்க வேண்டும்.
.
உண்மையில் அந்த நிகழ்வுகளை நாம் தவிர்க்க நினைப்போம் . வேண்டாம் என்ற கவனத்தை கொடுக்க ஆரம்பிப்போம்.
நாம் நினைப்போம் அவர்கள் என்னுடைய நெருங்கிய உறவினர்கள் என்னை விரும்புவர்கள் பின் ஏன் இப்படி பழகுகிறார்கள் என்று நாம் எண்ணுவோம்.
நாம் நம்முடைய உறவுகளை அணுகும் போது கடந்து போன வருடங்களின் நினைவுகளோடு தான் நெருங்குகிறோம். அவர்களின் இப்பொழுதுள்ள நிலையை காண்பதில்லை .
நாம் அவர்களுடன் வாழ்ந்த பழைய பிம்பத்துடன் பழக ஆரம்பிக்கிறோம் . அவர்கள் பேச ஆரம்பிக்கும் பொழுது இதுதான் என்ற முன்முடிவுகளோடு தான் பார்க்கிறோம்
அறிவியலின் விதிப்படி பார்ப்பவர் பார்க்கும் பொருளை பாதிக்கிறார். இதுவே குவாண்டம் அறிவியல் பார்ப்பவர் பார்க்கும் பொருளை பாதிப்படைய செய்ய முடியும்.
அவர்களின் கோணத்தில் சிந்தனை செய்யும் பொழுது நாம் கனிவோடு புரிதலோடு அணுக முடியும்.
ரிச்சர்ட் ஃபாக் என்ற அறிஞர் கூற்றுப்படி உலகில் அநீதியும் அக்கிரமும் அதிகமாக உள்ளது என்பதில் உங்களுக்கு எவ்வளவுக்கு ஆழமான நம்பிக்கை உள்ளதோ அந்த அளவிற்கு உங்களின் அறியாமையும் ஆழமாக உள்ளது .
Comments