
இரண்டாவது கண்ணாடி மிக ஆழ்ந்த உணர்வுடன் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும். இந்த நூலை மொழி பெயர்த்த எழுத்தாளரின் அனுபவமே இதற்கு சாட்சியாக விளங்குகிறது.
நான் தியானம் செய்ய ஆரம்பித்து 1997 முதல் 2002 வரை நான் மாறியதாக தோன்றியதே தவிர என்னைச் சுற்றி உள்ள உறவுகளில் பெரிய மாற்றம் எதுவும் நிகழவில்லை.
இந்த சிந்தனைகளின் வெளிப்பாடே எனக்கு இரண்டாவது கண்ணாடியின் தன்மையைக் காட்டிக் கொடுத்தது. இரண்டாவது கண்ணாடி என்பது நாம் அடுத்தவர்களை அனுமானம் செய்வதை பொறுத்தே அமைகிறது.
புதிதாக பார்ப்பவர்களிடம் நாம் எந்த சிந்தனை இல்லாமல் பழகுவோம். ஆனால் ஏற்கனவே பழகியவர்களிடம் அவர்கள் இப்படித்தான் அவர்கள் குணங்கள் இதுதான் என்ற எண்ணத்தோடு மட்டுமே பழகுகிறோம்.
ஏனெனில், உங்கள் நெருங்கிய உறவினர்களிடம் ஏற்கனவே ஏற்பட்டு நிகழ்ச்சியால் நாம் காயப்பட்டு இருப்போம். அதை மறக்கவோ மன்னிக்கவோ இல்லாமல் தவிப்போம்.
என் மனைவி சட்டென்று எதற்கும் கோபம் கொள்ளக் கூடியவள் என்று நினைத்து நான் அவளை அணுகிய கணமே அவள் கோபத்தை வெளிப்படித்தினாள்.
என்பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரையும் ஏதாவது ஒரு வகையில் முன் முடிவுகளோடு மட்டுமே அணிக முடிந்தது.
நம்முடைய முன் தீர்மானங்களும் உணர்வுகளின் ஆற்றல் தான். அந்த ஆற்றலே அதே நிலைமையை நீடிக்க வழி வகுக்கிறது.
அப்போழுது நான் நினைத்துக் கொள்வேன் இவர்கள் முட்டாள்களாக இருக்கிறார்கள். நான் தியானம் செய்து மகிழ்வாக இருக்கிறேன். இவர்களுக்கு தியானம் தேவை என்ற ஆன்மிக அகந்தையோடு நினைத்தேன்.
Comentarios