
இந்தப் பதிவு எழுதிய ஆசிரியரின் அனுபவமே இது . என் பண மோகம் எனக்கு நெருக்கமானவர்களை இழக்கும் நிலைக்கு என்னை தள்ளியது.
சில சமயம் மற்றவர்கள் நம் மோகத்தை கண்டு அதை நமக்கு உணர்த்த முற்பட்டாலும் இல்லை இல்லை நான் அவ்வாறு கிடையாது .
என் குடும்பத்தின் மீது பாசம் வைத்துள்ளேன் என்று மறுப்போம். என் மனைவி குழந்தைகள் உங்களுக்காக நாங்கள் ஏங்குகிறோம்.
நீங்கள் இங்கு இருந்தாலும் அவர்களிடன் இல்லாத நிலையில் தான் என்று கூறினாலும் அதை ஏற்றுக் கொள்ள மறுப்பேன் .
நான் தான் எப்பொழுதும் உங்களுக்காக இங்கு இருக்கிறேனே என்பேன். பின் நானே இதை உணர ஆரம்பித்து மெல்ல அதை சரி செய்ய முயல ஆரம்பித்தேன்.
என்னுடைய புரிதல் எனக்கு உணர்த்தியது என்னவென்றால் இந்த வலிகளை நம்மால் குணமாக்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது என்பதை புரிந்துக் கொண்டேன்.
அந்த மோகத்தின் பிடியில் நாம் இருக்கிறோம் என்பதை நாம் உணர ஆரம்பித்த பின்னரே விலக ஆரம்பிக்கிறோம். இவை தானாக நிகழ்வதில்லை.
நாமே இவ்வகையான மோகங்களை தேர்ந்தெடுக்கிறோம் மீண்டும் மீண்டும் விட முடியாமல் எந்த செயலும் நம்மால் கட்டுப்படுத்த முடியாத மோகமாக மாறும் அபாயம் உள்ளது
முதலில் நம்முடைய கட்டுக்குள் இருப்பதாக நினைக்க வைக்கும் பின்னரே அதன் கட்டுப்பாட்டில் நாம் இருக்கிறோம் என்பது புரிய ஆரம்பிக்கும் .
நமக்கு அதைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டால் மட்டுமே நாம் அதில் இருந்து விடுபட முடியும் .
Comentários