
இதற்கு ஒரு பழமையான கதையை உதாரணமாக கூறலாம். ஒரு தாத்தா தன் பேரனிடம் கூறுவதாக அமைந்த கதை.
ஒருவர் இரண்டு ஓநாய்களை வளர்த்தார். ஒன்று மகிழ்ச்சியான ஓநாய் மற்றொன்று சோகமான வெறுப்பு மிக்க ஓநாய்.
இரண்டிற்கும் போட்டி வைத்தால் எது வெல்லும் என்று யோசியுங்கள்.எந்த ஓநாய் பலம் பெறும்.
அவர் எந்த ஓநாய்க்கு அதிக உணவு கொடுக்கிறாரோ அதுவே வலிமையாக வளரும். அதுவே வெல்லும்.
இந்த இரண்டு ஓநாய்களில் நீ எந்த ஓநாய்க்கு உணவளிப்பாய் என்று அந்த தாத்தா தன் பேரனிடம் கேட்டார்.
அனைவரிடமும் இந்த இரண்டு ஓநாய்கள் உள்ளன. நீங்கள் எந்த ஓநாய்க்கு உணவளிக்க போகிறீர்கள் இது நம்மை நாமே கேட்க வேண்டிய கேள்வி.
நாம் எதற்கு அதிக கவனம் கொடுக்கிறோமோ அதுவே பலம் பெறுகிறது. ஏனெனில் நாமே அதற்கு அதிக கவனம் செலுத்துவதன் மூலம் நம்மை நோக்கி அந்த விஷயங்களை ஈர்க்கிறோம்.
எனவே தான் அந்த நிகழ்வு மீண்டும் மீண்டும் நம் வாழ்வில் நிகழ்கிறது. எனவே முதல் கண்ணாடி நம் உணர்வுகளை மட்டுமே பிரதிபலிக்கிறது.
நேர்மை, உண்மை, நம்பிக்கை, காதல், நட்புணர்வு, சிரிப்பு, சோகம், கோபம், பயம் வெறுப்பு, சந்தேகம், அன்பு, ஏமாற்றம் , எதிர்பார்ப்பு, பொறாமை, ஈகை, ஆனந்தம், அமைதி, உத்வேகம், ஊக்கம், தயக்கம், சோம்பல், சுறுசுறுப்பு, உல்லாசம், பொறுமை, அகங்காரம், ஆணவம்,
எளிமை, கருணை, இரக்கம், பாசம், நேசம் போன்ற நம்முடைய உணர்வுகளை மட்டுமே பிரதிபலிப்பது முதல் கண்ணாடியாகும்.
Comments