
உணர்வுகளின் ஆற்றல் என்பது பிரார்த்தனை போன்றது. எதை வேண்டுகிறோமோ அதுவே கிடைக்கிறது. எண்ணங்களின் சக்தியை மின் சக்தி போன்றது என்றால் உணர்வுகளின் ஆற்றல் காந்தச் சக்தி போன்றது.
எனவே நம்மிடம் எந்த உணர்வு மேலோங்கி உள்ளது என்பதை ஆராய்ந்து , புரிந்து , ஒத்துக் கொள்ளவும் வேண்டும். Magic போல நம்மைச் சுற்றி மாற்றம் நிகழ்வதை உணர முடியும்.
மேலும், நாம் எதை வாழ்வில் வேண்டாம் என்று நினைக்கிறோமோ அங்குதான் அதிக கவனத்தையும் செலுத்துகிறோம். எண்ணங்கள் மற்றும் உணர்வுகளின் நீட்சியே நம்மைச் சுற்றி அமைகிறது.
உதாரணமாக, உங்கள் வாழ்க்கைத் துணையோ, எதிரியோ, நண்பனோ உங்களிடம் கோபம் கொள்ளும் போது உங்கள் முழு கவனத்தையும் அதில் செலுத்திக் கொண்டுதான் இருப்பீர்கள்.
இந்தப் பிரபஞ்சத்தின் பணம் எது என்றால் ஆற்றல் தான் . எனவே பிரபஞ்சம் எதில் ஆற்றலை செலுத்த செலுத்துகிறீர்களோ அதையேத்தான் திருப்பிக் கொடுக்கும் .
எண்ணங்கள் எங்கு செல்கிறதோ அங்குதான் ஆற்றலும் செல்லும் . வேண்டாம் என்று நினைக்கும் நிகழ்விற்கு நாம் மீண்டும் மீண்டும் பேசியோ ,சிந்தித்தோ, புலம்பியோ அதிக கவனத்தை கொடுக்கிறோம்.
அதன் மூலம் உங்கள் உள்ளுணர்வில் அதை மாற்றாமல் பதிந்துக் கொள்கிறீர்கள் . எனவே மீண்டும் மீண்டும் அதையே ஈர்த்துக் கொள்ளுகிறீர்கள்.
Comments