
நாம் விரும்பாத ஒரு நிகழ்வு மீண்டும் மீண்டும் நம் வாழ்வில் வருமாயின், அவை நமக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை தருகின்றன.
அந்த வாய்ப்பு எதற்கு நம்மை நாம் சரி செய்துக் கொள்வதற்கு தான். விந்தையாக உள்ளது அல்லவா!!
இன்று முதல்கண்ணாடி குறித்து விளக்கமாக பார்ப்போம்.
முதல் கண்ணாடி நாம் தற்பொழுது என்ன மன நிலையில் இருக்கிறோமோ அந்த மன நிலையைத் தான் காட்டும்.
அதாவது நீங்கள் இப்பொழுது மகிழ்ச்சியாக உள்ளேன் என்றால், அதைத் தான் மற்றவர்களிடமும் பிரதிபலிக்கும்.
கோபமாக அல்லது சோகமாக இருந்தாலும் அதன் அதிர்வுகளால் மற்றவர்களும் அதையே பிரதிபலிப்பார்கள் .
நான் நல்ல மனநிலையில் இருக்கிறேன் . ஆனால், அருகில் உள்ளவர்கள
அதாவது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் உடன் பணி புரிபவர்கள்} வேறு சுபாவத்தை வெளிப்படுத்தினால் , அது கண்டிப்பாக உங்களிடம் உள்ளது தான் என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.
நம்மை நாம் மாற்றும் பொழுது மட்டுமே அதாவது முழுமையாக உள்ளே மாற்றம் நிகழ்ந்தால் மட்டுமே வெளியே மாற்றம் நிகழும்.
ஏனென்றால் முதல் கண்ணாடி காட்டுவது உங்களைத்தான். உங்களின் உள்ளே உண்டாகும் உணர்வுகளின் பிரதிபலிப்பு மட்டும் தான் இந்த முதல் கண்ணாடி .
நாம் முதலில் வெளியே உள்ளவர்களை மாற்ற நினைக்கிறோம் . மாற்றத்தை முதலில் நாம் நம்முள் நிகழ்த்த வேண்டும்.
ஈர்ப்பு விதி குறித்து நாம் அறிவோம் . எதை வெளிபடுத்துகிறோமோ அதுவே ஈர்க்கப்படுகிறது .
Comments