
ஏழு கண்ணாடிகள் என்பது நம்மை நமக்கு தெளிவாக காட்டும் கண்ணாடிகளைக் குறிக்கிறது. இவை வாழ்வின் கண்ணாடிகள்.
இவைகள் அடுத்தவரிடம் நாம் உருவாக்கிக் கொள்ளும் உறவின் நிலைகளை விரிவாக விளக்குகிறது.
உண்மையில் இந்தக் கண்ணாடிகள் தியானம் செய்யும் பொழுது நமக்கு கிடைக்கும் கண்ணாடிகளே.
நாம் நம் சக மனிதர்களை சந்திக்கும் பொழுது அவர்களை தொடர்பு கொண்டு வாழ வேண்டிய சந்தர்ப்பங்களில் நம்முடைய அமைதியான மனநிலை நீடிப்பதில்லை.
மீண்டும் மீண்டும் அதே பழைய பிரச்சனைகள். ஒன்று நாம் மற்றவர்களை ஆதிக்கம் செலுத்துவது அல்லது அவர்களிடம் அடங்கிப் போவது , இவைகள் நம் வாழ்க்கையில் தொடர்ந்து நடைபெறுகிறது.
இவ்வாறாக தொடர்ந்து நடைபெறுமாயின் நமது தியானத்தின் பலன் தான் என்ன? நமது பழைய பிரச்சனைகள் தீராமல் இருப்பதன் காரணம் என்ன?
இதற்கான விளக்கமே இந்த ஏழு கண்ணாடிகள் காட்டும் பிரதிபலிப்பு தான்.
இந்தக் கண்ணாடிகளைப் பற்றித் தெரிந்துக் கொள்ளும் பொழுது தான் நாம் நம்மைப் பற்றி தெரிந்துக் கொள்ள முடியும்.
நாம் நம்மை எவ்வாறு சரி செய்துக் கொள்ள வேண்டும் என்பதும் புரியும் . இதில் முக்கியமானது எதுவென்றால் நாம் நம்மைத் தான் சரி செய்துக் கொள்ள வேண்டும் மற்றவர்களை அல்ல.
நம்முடைய உறவுகளின் செயல்பாடுகள் ஒரு திசைமானி போல செயல்பட்டு சட்டிக் காட்டுவது நாம் நம்மிடம் உள்ள எதை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதைத் தான்
நாம் நம்மை மாற்றிக் கொள்ளா விட்டால் நம்மை ச்சுற்றி நடக்கும் நிகழ்வுகள் எதுவும் மாறுவதில்லை என்பதையே இந்த ஏழு கண்ணாடிகள் நமக்கு உணர்த்து கின்றன.
Comentarios