செல்ஃப் கேர் என்றால் நம்மை நாம் பராமரிப்பது. நாம் எப்படி இருந்தாலும் அழகா இருந்தாலும் இல்லையென்றாலும், நாம் பெரிய பதவியில் இருந்தாலும் இல்ல ஹோம் மேக்கரா இருந்தாலும் நம்மை நாம் பராமரிப்பது தான் செல்ஃப் கேர்.
செல்ஃப்கேர் என்றால் நெறைய பேர் டாக்டர்ஸ்கிட்ட போயிட்டு ஹெல்த் செக்கப் பண்றது ஒரு செல்ஃப் கேர் என்று நினைக்கிறார்கள். பல பெண்கள் பார்லர் போயிட்டு அழகா நம்ம தோற்றத்தை வைத்துக் கொள்வது செல்ஃப் கேர் என்று நினைக்கிறார்கள். சிலர் என்ஜாய்மென்ட் என்று நினைத்து பலவிதமான ஜங்க் ஃபுட் ,டிரிங்க்ஸ், ஆல்கஹால், சிகரட் போன்ற பல விஷயங்களை பழக்கப் படுத்திக் கொள்கிறார்கள் . ரிலாக்ஸ்சேஷன் என நினைத்து மணிக்கணக்கில் மொபைல் பார்த்து தேவை இல்லாத ரேடியேஷனை எதிர் கொள்கிறார்கள் .
இதனால் உடலின் சக்தி குறைந்து அதிகமான சக்தி குறைபாடு ஏற்படுகிறது.இதனால பல விதமான நோய்கள் சுகர் ,பீபி,தைராய்டு, தலைவலி,
பிசிஓடி ப்ராப்ளம்ஸ் போன்ற பல பிரச்சனைகள் நமக்கு வருகிறது. மேலும் டிப்ரெஷன் ,உடல் வலி, சோர்வு, கோபம் ,அடிக்கடி மனநிலை மாறுபாடுதல் எனப் பல வித இடர்பாடுகள் உருவாகிறது
பொதுவாக மூன்று வகையான பராமரிப்புகள் உள்ளன. பௌதிகமான பராமரிப்பு ,மானசீகமான பராமரிப்பு, ஆன்மிகமான பராமரிப்பு . பௌதிக பராமரிப்பு என்றால் இந்த உடலுக்கு சரியான சாத்விக உணவை கொடுக்க வேண்டும். காலையில் அழகான காய்கறிகளோட ஜூஸ் குடிக்கும்போது டிடாக்ஸ் நடக்கும் .இந்த டிடாக்ஸ்ஸை காலையில் செய்வது நல்லது. அதன் பின்னரே சாத்விக காலை உணவை சாப்பிட வேண்டும். நடை பயிற்சி ,ஜாகிங்,யோகா, ஜிம் போன்ற பல அற்புதமான விஷயங்களை நாம் தமக்காக செய்ய வேண்டும். உடல் உழைப்பிற்கான எல்லா வேலைகளையும் செய்யலாம். அதே நேரத்துல ஸ்மார்ட் வர்க்கிங் செய்து நம்மை நாம் பராமரிக்கலாம்.
அடுத்ததாக நமது மானசீக பராமரிப்பு. இதற்கு ஹார்ட் சக்ரா சம்பந்தப்பட்ட ஃபீலீங்க்ஸ் எமோஷன்ஸ்போன்ற பலவித உணர்வுகளை சரியாக வெளிப்படுத்தி ரொம்ப அற்புதமாய் பராமரிக்க வேண்டும் . தேவை இல்லாத உணர்வுகளை தேவையில்லாத பீலிங்க்ஸ்ஸை நாம் இந்த உடலுக்கும் மனசுக்கு கொடுக்கும் போது ஹார்ட்ஸ் சக்ராவில் பிளாக்ஸ் உருவாகி அதற்கு ஏற்றார் போல நமக்கு வியாதிகள் வருகிறது. நம்முடைய மனதை எப்படி பராமரிப்பது ?
எந்த ஃபீலிங்ஸ் ,எமோஷன், எது வந்தாலும் ஒரு நதியானது அழகாக பாய்வது போல போக விட வேண்டும். அடக்கி வைக்க கூடாது. எந்த உணர்வுகள் ஆனாலும் அதற்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும் . நம்முடைய வீட்டில் பெரும்பாலானோர் கோபங்கள், தாபங்கள் இப்படி பல பிரச்சனைகளை
எல்லாமே மனசுக்குள்ள பூட்டி வச்சு அத அப்படியே சுமந்துக் கொண்டு இருப்பார்கள். பல வருடங்கள் ஆனாலும் அவர்கள் அதை மறக்க மாட்டார்கள். பல வருடங்கள் கழித்து ஒருவரை சந்திக்கும் போது அவங்க சொன்ன எல்லா விஷயங்களும் அப்படியே ஞாபகம் வைத்துக் கொண்டு வேதனைப் படுவார்கள்.. ஒரு இன்சிடென்ட் ஒரு தடவை நடந்திருக்கும் . ஆனா இவங்க அந்த இன்சிடென்டை 1000 தடவை நினைவு கூர்ந்து இதயத்திற்கு வலி கொடுக்கிறார்கள்.. அதனால எந்த எமோஷன் ஆனாலும் அன்றன்றே நீங்க சரி செய்து அத ரிலீஸ் பண்ணனும்.
நம்ம மனசை பராமரிப்பதற்கு அழகான இயற்கைக் காட்சிகளைக் காண நமது நேரத்தை ஒதுக்கணும். காடுகள், மலைகள், அருவிகள் இப்படி பல இடங்களுக்கு நாம் செல்லலாம். டிராவல் பண்ணலாம். நமக்கு பிடித்த விஷயங்களான ஹாபீஸ் படம் வரைதல், பெயின்டிங், ஸ்போர்ட்ஸ், ஆர்ட்ஸ், கிராப்ஸ், பாடல்கள், ஆடல்கள் போன்ற பல விஷயங்களில் நாம் ஈடுபட்டு நம்ம மனசுக்கு தேவையான சந்தோஷத்தை நாம் கொடுக்கலாம். நல்ல புத்தகங்கள் படிக்கும் போது அந்த ஞானத்தால் நாம் நமது அறிவை பராமரிக்கிறோம். ஒவ்வொரு ஆன்மிக புத்தகங்கள் படிக்கும் போது நமக்கு
எவ்வளவோ ஞானம் வருகிறது. இவ்வாறு ஞானத்தையும் சந்தோஷத்தையும் நாம் கொடுக்கும் போது நம்
இதயமானது மலர்கிறது.
ஆன்மிக பராமரிப்பு என்றால் நாம் தினந்தோறும் தவறாமல் தியானம் செய்ய வேண்டும். தியானம் செய்யும் போது நம் ஆன்மாவை நாம் உணர்கிறோம்.நமது நிலையில் இருந்து இன்னும் ஆன்ம நிலையை உயர்த்தக்கூடிய அற்புதமான விஷயம் தான் தியானம்.. பத்ரிஜீ எப்பொழுதும் உன்னை நீ நேசிக்க வேண்டும் என்பார். நேசிப்பது என்றால் தன்னைத் தான் முதலில் பராமரிப்பதாகும். இவ்வாறு நேசிப்பவர்கள் தியானம் , சத்சங்கம் மற்றும் சுவாதியாயத்திற்கு நேரத்தை கண்டிப்பாக ஒதுக்குவார்கள் . எப்பொழுதும் அடுத்தவர்களுக்கு சரியான உதவி செய்ய வேண்டும் . சரியான தியானம் சொல்லிக் கொடுப்பது ஒரு ஞானத்தை மற்றவர்களுக்கு கொடுப்பது இதுதான் சரியான ஆன்ம பராமரிப்பு என்று பத்ரிஜீ கூறுவார் . எனவே நாம் அனைவரும் உடலளவில், மனதளவில் மற்றும் ஆன்மிக அளவிலும் நம்மை பராமரிக்கலாம். எனவே இந்த சுய பராமரிப்பை நாம் கடைபிடித்து நம்மை நாம் அழகா பாத்துக்கலாம். தேங்க்யூ நன்றி. வணக்கம்.
Comentários