13. தியானத்தை என்றும் இலவசமாக கற்பிக்க வேண்டும். தியானத்திற்கு என்றும் விலை வைக்க முடியாது. விலை வைக்க அதன் மதிப்பை அறிந்திருக்க வேண்டமல்லவா? தியானம் என்பது மதிப்பிற்கு அப்பாற்பட்டது.
தாயின் அன்பிற்கு விலை வைக்க கூடுமா? பிரபஞ்ச பரிசான தியானமானது அன்னையின் அன்பைக் காட்டிலும் மேலானது. மேலான ஒன்றிற்கு விலையை நிர்ணயிப்பது தவறாகும். அதன் மதிப்பை முழுமையாக உணர்ந்தவர் இப்புவியில் காண அரிதே.
14. கடவுள் என்ற அறியப்படும் பிரபஞ்ச தன்மையை புரிந்துக் கொள்ள வேண்டுமே அல்லாது கடவுள் என்று ஒரு சிலையை மட்டும் வழிபடக் கூடாது. கடவுள் உருவம் கடந்தவர் அல்லவா? அவரை சிலை வடிவில் மட்டுமே உணரத் தொடங்கினால் முழுமையை தவற விட்டு விடுவோம்.
மேலும் வாழும் குருமார்கள் மற்றும் பிற குருமார்களின் சிலை வழிபாடுகளும் செய்யக் கூடாது. அவர்கள் அனைவரும் தங்களை உடல் மூலம் வெளிப்படுத்திக் கொண்டாலும் அவர்கள் அளவிட முடியாத பிரபஞ்சத்தின் சிறு துகள்களே.
15.அவரவர் சொந்த பிரச்சனைகளுக்கு அவரவர் தியானத்தின் மூலம் கிடைக்கும் ஆன்ம சக்தியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தன்னைத் தானே குணப்படுத்துதலே என்றும் சிறந்தது.
யாரையும் எதற்காகவும் சாராத நிலையையே பத்ரிஜி அனைவருக்கும் கொடுத்துள்ளார். சிலர் தங்கள் தியான ஆற்றலைக் கொண்டு பிறருக்கு உதவ நினைப்பர். இதுவும் தவறானதே.
அவர்களின் கர்ம வினைப் பலன்களில் நாம் தலையிட்டால் அதற்கான விளைவுகளை நாம் கண்டிப்பாக சந்திக்க நேரிடும். யாருடைய பாடங்களையும் நாம் எழுத முடியாது. தலையிடவும் கூடாது.
16. பிரமிட் ஆசான்கள் எவரும் துறவறம் மேற்கொள்ளக் கூடாது. இல் வாழ்க்கையில் இருந்துக் கொண்டே ஆன்மிகத்தில் முன்னேற வேண்டும். இல்வாழ்க்கையில் நாம் சந்திக்கும் சவால்கள் நம்முடைய ஆன்மிக வளர்ச்சிக்கு மிகவும் தேவையானதே.
அவற்றை எதிர்கொள்ள வேண்டியது நமது கடமையாகும். மேலும் பெரும்பாலான மக்கள் துறவறத்தை சவால்களிடம் இருந்து தப்பித்துக் கொள்ளவே உபயோகிக்கின்றனர். இல்லற வாழ்க்கையை ஒதுக்க வேண்டிய அவசியமில்லை.
17. அனைத்து ஊர்களிலும் கிராமங்களிலும் தியான மன்றங்களை அமைக்க வேண்டும். ஊருக்கு ஒரு கோவில் இருப்பது போலவே எங்கும் பிரமிட் தியான மன்றங்கள் இருக்க வேண்டும்.
கோயில்களை கண்டால் பிரார்த்தனை மற்றும் பக்தி ஞாபகம் வருவதுப் போல பிரமிட் மன்றங்களை கண்டவுடன் மக்களுக்கு தியானம் மற்றும் ஆன்மிக சாதனை நினைவிற்கு வர வேண்டும்.
தேவைப்பட்டால் ஒவ்வோரு வீட்டிலும் பிரமிட் அமைக்கலாம். தியானம் செய்வதற்கு உதவலாம்.
18. தியானத்தின் மூலம் நாம் பெற்ற தியான அனுபவங்களையும் நம்முள் ஏற்பட்ட மாற்றங்களையும் , முன்னேற்றங்களையும் பிரசுரிக்க வேண்டும். இதனால் நம் பூமியானது சுவர்ண பூமியாக மாற ஏதுவாகும்.
நம்முடைய அனுபவங்கள் மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும். அதன் மூலம் அவர்களும் ஆன்மிகப் பாதையில் நுழைந்து தியானத்தைக் கற்று ஞானம் பெற்று பயன் அடைவர்.
பத்ரிஜியின் கொள்கைகள் அனைத்தையும் பின்பற்றுபவர்கள் வாழ்வில் யாரையும் எதற்காகவும் சார்ந்த நிலையில் இல்லாமல் ஆனந்தமான வாழ்வை வாழ்வார்கள். ஜெய் ஹோ பத்ரிஜி.
Comments