உள்ளபடியே உள்ள தத்துவம்---- உள்ளார்ந்த தத்துவம்
- airavathportal
- Nov 15, 2024
- 2 min read
பத்ரிஜியின் சொற்பொழிவின் தமிழாக்கம் பாகம்- இரண்டு

விஷ்ணுவை சேஷசயனர் என்பார்கள். அதனுடைய உள்ளர்த்தம் என்ன ? அது வெறும் பாம்பல்ல. கால சர்ப்பம். அதன்மேல் இருப்பது காலத்தைக் கடப்பதாகும். சரீர உணர்வில் இருக்கும் பொழுது காலம் உண்டு.
தியானம் செய்து காலத்தைக் கடக்கலாம். அனைவரும் விஷ்ணுவாகலாம் . உள்ளபடியே அர்த்தம் புரிந்துக் கொள்வது புரிதலாகாது. உள்ளார்ந்த அர்த்தத்தைஅறிவதே அனுபவம் .
நாம் அவற்றை புரிந்துக் கொள்வது தபஸ் ஆகும். எதைச்செய்தாலும் உண்மையான முயற்சியுடன் செய்ய வேண்டும். நேரத்தை வீணாக்குபவர்கள் மூர்க்கர்கள்.
24 மணி நேரத்தையும் உபயோகிக்க நமக்கு தெரிய வேண்டுமல்லவா?பண்டிதர்கள் ஆடலோ பாடலோ படிப்போ தியானமோ நேர்மையாக இருப்பர்.
சிவனை திருநீலகண்டர் என்பர். விஷத்தை முழுங்காமல் துப்பாமல் வைத்து இருந்தார். விழுங்கினால் தேகத்திற்கு கேடு. உமிழ்ந்தால் பிறருக்கு கேடு.
சிவன் போல உலக நன்மைக்காக வாழ நினைத்தால் கஷ்டங்கள் வருவது யதார்த்தமே. அரக்கர் மற்றும் தேவர்கள் பாற்கடலைக் கடைந்ததற்கும் சிவனுக்கும் சம்பந்தமில்லை.
எனினும் அதனால் வெளியே வந்த ஆலகால விஷத்தை சிவன் அவர் கண்டத்தில் அடக்கிய போது சம்பந்தம் உருவானது.
உலக நன்மைக்காக கஷ்டப்படலாம் என்பதே திரு நீலகண்டர் தத்துவம். அவருக்கு ஆகாயகங்கை மற்றும் பார்வதி என்ற இரு மனைவியர் என்பதன் பொருள் ஆன்மிக வாழ்வு மற்றும் உலகாயத வாழ்வைக் குறிக்கிறது. இரண்டின் முக்கியத்துவத்தை யும் குறிப்பது.
அவர் கழுத்தில் உள்ள பாம்பு என்பது வேறு தத்துவமாகும். அனைவருக்கும் பாம்பென்றால் அச்சம் . எதை நீ அஞ்சுகிறாயோ அதையே நீ அணிந்துக் கொள்ள வேண்டும்.
பயம் நிர்பயமாகிறது. பார்வதி மற்றும் சிவன் இருவரும் எப்பொழுதும் தியானத்தில் உள்ளனர். சிவனுக்கு முக்கண்ணன் என்ற பெயருண்டு.
நமக்கும் புறப்பார்வை, மனப்பார்வை, தியானப்பார்வை மற்றும் ஞானப்பார்வை உண்டு. புறப்பார்வை மூடினாலே மனப்பார்வை திறக்கும்.
இரண்டும் மூடும் பொழுதே திவ்யப்பார்வையான மூன்றாம் கண் திறக்கும். இவற்றைக் கடக்கும் பொழுதே ஞானத் திருஷ்டி கிடைக்கும்.
சிவன் பார்வதி என்பது ஒரு குறியீடே. சிவன் இமாயலயத்தில் ஏன் தவம் புரிகிறார்? நம் சிரம் எப்பொழுதும் குளிர்ந்தே இருக்க வேண்டும்.
பல எண்ணங்களின் அலைவால் சூடேறக் கூடாது. நமது தலையே நமது இமாலயம். எந்தச் சந்தர்பங்களிலும் நாம் நமது நிலைத் தவறக் கூடாது.
சிவன் வரமளிப்பதை செயல்பாடாக கொண்டவர். எந்த தடையும் இல்லை. சிவன் உணர்த்துவது நீ தியானித்து கேட்கும் வரம் பலிக்கும். எதைக் கேட்பது என்பது நாம் தான் முடிவு செய்ய வேண்டும்.
இல்லறத்தில் இருந்துக் கொண்டே முக்தி அடைவது குறித்தும் விளக்குவதே சிவ தத்துவம். நமது வீடே நமது ஆலயம்.
சிவபார்வதி தத்துவம் என்பது ஆகாயகங்கையில் நனைந்துக் கொண்டே சக்தியை அதிகரித்து சிவன் , சிவபார்வதியாக மாறுவது
பிரம்மன் --சிவன் , சரஸ்வதி -- பார்வதி . தியானத்தால் கிடைக்கும் சக்தி மற்றும் சித்தி கொண்டு பிரம்மனைப் போல நினைத்ததை உருவாக்கலாம். சரஸ்வதி போல ஞானம் பெறலாம்.
コメント