தியானத்தில் கிருஷ்ணர் வருவார் இறந்தவர்கள் வருவார்கள் நசிகேதன் கேட்டார் இறந்தவர்கள் எங்கே போகிறார்கள் என்று நாம் கேட்பது வேலை கிடைக்குமா திருமணம் ஆகுமா? என்று.
நான்காவது நிலை க்கு வருபவர் ரிஷி ஆவார் தாரணம் எந்த வாசனை வருகிறதோ எந்த காட்சி வருகிறதோ காணுங்கள் .
விசுத்தம் என்றால் முழுமையான சுத்தம் மூன்றாவது கண் திறக்க திறக்க முகத்தில் உள்ள பிரமிடு மேல் உள்ள (மூக்கின் மேல்) கவனம் வையுங்கள்.தாரணம் என்றால் கவனக்குமிப்பு .
தியானம் ஐந்தாவது நிலை . ராஜா தியானத்தில் ஏழு சக்கரங்களும் சுத்தி அடைந்து ஆக்ஞா சக்கரம் திறக்கிறது. சூட்சும சரீர யானமே(பயணமே) தியானம் .
முழுமையான தியானத்தில் கிடைப்பதே சமாதி .சமாதி என்பது ஆறாவது நிலை .
சமாதி என்றால் உலக விஷயங்களில் சமாதானம் சந்தேகம் இல்லாத சமாதானம் .
தியானம் இல்லை என்றால் ஆரோக்கியம் இல்லை ஆரோக்கியமே மகா பாக்கியம் இது புரிய ஒரு உதாரணம் விரல்களை எடுத்துக் கொள்ளுங்கள்.
பீமன் வாயுபுத்திரன் நகுலன் பிராணசக்தி சகதேவன் மூன்றாம் கண் திறக்கும் ஞானம் அர்ச்சுனன் ராஜரிஷி தருமர் பிரம்மரிஷி.
சமாதி அடைந்த பின் யமம் நியமம் ஒழுங்காக இருக்கும். அவர்களின் தினசரி வாழ்வில் நிகழும் செயல்களின் மேல் அவர்களுக்கு ஆதிக்கம் இருக்கும்.
சமாதி அடைந்தவர் பிரம்மச்சாரி. பிரம்மச்சரியம் சரீரம் சம்பந்தப்பட்டது அல்ல . அவர்கள் பேசுவது எல்லாம் சத்தியம். சத்தியம் மட்டுமே பேசுவார்கள் மழை பெய்யும் என்றால் பெய்யும் .
உணவு உண்டா இல்லையா படுக்க மெத்தை உண்டா இல்லையா என்று நினைப்பதில்லை. சமாதி ஸ்திதி அடைந்தவர்களுக்கு பகவத் கீதையை ஒரு முறை படித்தாலே போதும் மீண்டும் எந்த புத்தகமானாலும் படிக்க தேவையில்லை.
யம நியமங்களை முதலில் கடை பிடிக்க நினைத்தால் தியான சாஸ்திரத்தை பரணில் போட வேண்டியது தான் .
நியமம் ஐந்து சௌசா, சந்தோஷ, தபஹ, தானா ஸ்வாதியாயா ஈஸ்வரப் பிரணிதானா
யமம் ஐந்து
சத்தியம் அகிம்சை ஆஸ்தி அபகரிகா பிரம்மச்சரியம் .
சந்தோஷா என்றால் இறப்பும் பிறப்பும் சந்தோஷம் தான். வேண்டுமானால் புசிப்பார் இல்லை என்றால் விரதம் இருப்பார். சுவாதியாயம் அனைத்தையும் படித்து புரிந்து கொள்ளுதல்.
ஈஸ்வரப் பிரணிதானா தான் ஈஸ்வரன் என்று உணர்ந்தால் அனைவரும் ஈஸ்வர நிலை என்று உணர முடியும்.
ராமாயணத்தில் கும்பகர்ணன் தமோநிலை ராவணன் ரஜோ நிலை விபீஷணன் சாத்வீக நிலை அனுமன் வாயு புத்திரன் சீதா ஆகாயம் பிராணசக்தி ராமர் தான் ஆத்மா என்று உணர்ந்தவர்.
வால்மீகியும், வியாசரும் பாமரர்கள் புரிந்துகொள்ளும் கதையாகவே தியான சாஸ்திரத்தை உணர்த்தி உள்ளனர்.
ராமர் சிலை மட்டும் வணங்கிக் கொண்டிருந்தார் கும்பகர்ணனாகவே ஜென்மங்கள் தோறும் வாழ வேண்டியதுதான் தியான சாஸ்திரம் மகாவீரருக்கு வேறு ரமண மகரிஷிக்கு வேறு புத்தருக்கு வேறு குருநானக்கிற்கு வேறு என்று கிடையாது
பிரமிடு கீழே அகலமானது சந்திப்பது ஒரே இடமே இயேசுவிற்கும் ராமருக்கும் அல்லாஹ்வுக்கும் வேறு தியான நிலை இல்லை.
மனம் வாக்கு செயல்களின் அதிகாரம் செலுத்துபவர்களே உண்மையான தியானி அனைவரிடம் நட்புணர்வுடன் இருந்து தன்னை உணர்பவரே ஆசான் ஆவார்.
Comments