![Patanjali Dhyana Shastra](https://static.wixstatic.com/media/f1cd40_dc7895584bb94ec79b3a732d5eedf7be~mv2.jpeg/v1/fill/w_570,h_380,al_c,q_80,enc_auto/f1cd40_dc7895584bb94ec79b3a732d5eedf7be~mv2.jpeg)
நமக்கு எதற்கு தேவை தியான சாஸ்திரம். நம் வாழ்வின் மேல் நமக்கு அதிகாரம் தருவது தான் தியான சாஸ்திரம் .
அகம் பிரம்மாஸ்மி என்று அறிவதற்கு தான் இந்த சாஸ்திரங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது.
அனைத்து உயிரினங்களிடமும் அன்பு செலுத்துவதற்கும் இந்த அறிவானது உதவுகிறது.
சிவன் ஏன் பாம்பை அணிந்து கொண்டு உள்ளார் . பிள்ளையார் ஏன் எலியை வாகனமாகயாக்கினார்.
அனைத்து உயிர்களிடத்தும் இணக்கமாக வாழ வேண்டும் என்பதை கூறுவதற்காகத்தான் .
தியான சாஸ்திரம்
அறிபவர் தன் வாக்கு மற்றும் செயல் மேல் அதிகாரம் செலுத்துவார்.
பாமரர் தெரியாமல் பேசிவிட்டேன். தெரியாமல் செய்து விட்டேன் என்பார் தியான சாஸ்திரம் தான் நடைமுறையில் பயன்படுவது.
வழி தெரிந்து கொண்டால் சென்றடையலாம். இல்லை என்றால் ஜென்மம் ஜென்மமாக சுற்றி சுற்றி வர வேண்டியதுதான்.
அஷ்டாங்கமார்க்கம் எவை.
யமம் நியமம் ஆசனம் பிராணாயாமம் பிரத்யாகாரம் தாரணி தியானம் சமாதி.
யமம் என்றால் நம்முடைய கொள்கைகளின் மேல் ஆதிக்கம்( பிடிப்பு) செலுத்துவது. நியமம் என்றால் நம்முடைய தினசரி வாழ்க்கையின் மேல் சரியான ஆதிக்கத்துடன் உள்ளது.
இவை இரண்டும் இருந்தால் தியானத்தின் தேவையில்லாமலே போகலாம்.
இக்காலத்தில் முதலில் தேவை ஆசனம் பிராணயாமம் பிரத்தியாகாரம் தாரணம் தியானம் சமாதி பின்னரே யமம் நியமம் என்று வரிசைப்படுத்தலாம்
முதல் நிலையான ஆசனத்தி்ற்கு க தேவை ஸ்திர சுக ஆசனம் .
ஸ்திர சுக ஆசனத்தில் இருந்தால் தான் கூடுதலான நேரம் தியானம் செய்யலாம்.
ஆசன ஜெயம் என்றால் எந்த ஆசனத்தில் 3 மணி நேரம் அமர முடிகிறதோ அதுவே சிறந்த ஆசனம்.வயதானவர்கள் படுத்தும் தியானம் செய்யலாம் .
முதல் நிலையில் பாமரன் தியானத்தில் அமர்கிறான்.
இரண்டாவது நிலை பிராணாயாமம்.
எந்த மந்திரமும் தேவையில்லை .உடல் அசைவு இல்லாத போது சுவாசத்தை கவனிக்க வேண்டும் .சுக மய சுவாசம் தியானம் என்பது சுவாசம் மீதே நமது கவனம் இருப்பதாகும்.
மூன்றாவது நிலை பிரத்யாகாரம் முதலில் அமரும் பொழுது பாமரனாய் இருக்கிறவன் இரண்டாவது நிலையில் தியானியாக மாறுகிறான்.
மூன்றாவது குறிப்புகளை பின்பற்றி வரும் பொழுது அவன் யோகியாக மாறுகிறான். பிரத்யாகாரமூலம் சித்த விருத்தி அடையும். எண்ணங்கள் குறையும் .
கைகால்களை கட்டி கண்களை மூடுவதால் சக்தி சேமிக்கப்படுகிறது. வெளி உலகம் அந்தகாரமான பிறகு உள் உலகம் ஒளி பெறுகிறது .சிறிது சிறிதாகவே அவை தோன்றும்.
சங்கீதம் பாடம் மொழி இவை கற்றுக் கொள்வது போலவே தியானமும் கற்க கற்க உள் உலகம் தெளிவாகும்.
பிரத்தியாகாரம் என்றால் ஆகாரத்திற்கு எதிரானது அதாவது வெளி இருந்து கிடைக்கும் உணவல்ல உள்ளிருந்து கிடைக்கும் உணவே பிரத்தியாகாரம்
Comments