ஜூலை 1 இந்திய மருத்துவர்கள் தினம் . மருத்துவத்தின் உன்னதத்தை போற்றும் நாள் .1950 ல் மேற்கு வங்கத்தின் முதல் முதலமைச்சராக பதவியேற்ற பிதான் சந்திர ராய் புகழ் பெற்ற மருத்துவர் ஆவார். இவர் ஒரு சிறந்த சுதந்திர போராட்ட வீரர். மகாத்மா காந்தியின் தனிப்பட்ட மருத்துவராகவும் பணியாற்றியுள்ளார். நம் நாடு அவருக்கு பாரத ரத்னா விருது கொடுத்து கௌரவித்துள்ளது. அவரின் பிறந்த தினமும் மற்றும் இறந்த தினமும் ஜூலை 1 தான். அந்நாளை போற்றும் விதமாக இந்திய அரசு அன்றைய தினத்தை இந்திய மருத்துவர்கள் தினம் என அறிவித்து கொண்டாடுகிறது.
மருத்துவத்துறை மிக உன்னத துறை என்பது அனைவருக்கும் தெரியும். அந்த துறையில இருப்பவர்கள் இயல்பாகவே ஆன்மிகத்தின் அடிப்படையான இரு கருத்துக்களை கொண்டிருப்பர். முதல் கருத்து என்னவென்றால் சுய விருப்பு வெறுப்பு இல்லாமல் அனைவருக்கும் ஒரேபோல சேவை புரிவது. போர்க்காலத்தில் கூட இந்த பக்கம் உள்ளவர்கள் அந்தப் பக்கம் உள்ளவர்கள் எனப் பாகுபாடு பார்க்காமல் யாராக இருந்தாலும் உடல் ஊனமடைந்தாலோ காயப்பட்டாலோ இரு சாரார்க்கும் அவர்கள் சிகிச்சை அளிப்பார்கள் . அவர்களின் வாகனத்தை எந்த போர் விமானமும் தாக்காது.
அடுத்து ரெண்டாவது விஷயம் என்னவென்றால் உடலை காப்பற்ற அனைத்து முயற்சிகளையும் செய்த பின்னர் முடிவு கடவுள் கையில் காட்ஸ் க்ரேஸ் என்பார்கள் . ஒரு பிரபல மேற்கோள் உள்ளது. Do the best and leave the rest என்று அது அவங்க ஆதாரமாக பின்பற்றுகிறார்கள். பெரிய ஆபரேஷனே செய்தால் கூட எல்லாம் முடிஞ்ச பிறகு நாங்க எங்களால முடிஞ்சது அத்தனையும் பண்ணிட்டோம். இனிமே கடவுள் விட்ட வழி என்று கூறுவது ஆன்மிகத்தோட சாரம் தான்.
நாமும் நமது செயல்களை செய்யாமல் இருக்க கூடாது செய்யணும். ஆனா முடிவு என்ன வருது நம்ம எதிர்பார்க்கக்கூடாது. முடிவு எது வந்தாலும் ஏத்துக்க நாம தயாரா இருக்கணும். அதே போல எந்த ஒரு விஷயத்தையும் இருமைத்தன்மை இல்லாமல் விருப்பு வெறுப்பு இல்லாம ஒரே போல பாக்க கூடிய தன்மை மருத்துவர்களுக்கு இயல்பாவே இருக்கு இல்லையா? பிறகு ஏன் மருத்துவத் துறையினால் நிறைய பாதிப்பும் தற்போது வருகிறது.
நமது பழங்கால மருத்துவத் துறைக்கும் இப்பொழுது உள்ள துறைக்கும் உள்ள பெரிய வித்தியாசம் உள்ளது. நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செயல் என்ற திருவள்ளுவரின் குறளுக்கு என்ன அர்த்தம்? நோயோட வேர் என்ன, அதை எப்படி சரி செய்வது என்பது ரொம்ப முக்கியம். எந்த உடலுக்கு நோய் வந்தாலும் அந்தந்த உடலுக்கு ஏத்த மாதிரி எதை கொடுப்பது என்று அந்த காலத்திலேயே எழுதி வைத்துள்ளார்கள். தற்போது உள்ள மருந்துகள் பொதுவா எல்லாருக்கும் ஒரே போல இருப்பதால் தான் இந்த பாதிப்பு வருகிறது. அது போல உணவையே மருந்தாகவும் பயன் படுத்தினார்கள்.
மேலும் மருத்துவத்துடன் ஜோதிடமும் அறிந்திருந்தார்கள். நடக்கும் விஷயங்கள் ஒரு கர்ம வினைப்பயனா என்பதையும் ஆராய்ந்து அதன் அடிப்படையிலும் அவர்கள் மருத்துகளை தேர்ந்தெடுத்து கொடுத்தார்கள். அடுத்து பார்த்தோம்னா அவர்கள் உளவியல் ரீதியாக அந்த மக்களுக்கு எது தேவை என்பதையும் ஆராய்ந்து மூலிகை மூலமா கொடுத்ததினால் நமக்கு அதனோட பலன்கள் கிடைத்தது.அதாவது எஃபெக்ட் இருந்தது. சைடு எபக்ட் இல்லை.
நமது நாட்டை ஆக்ரமித்த பிற நாடுகளின் தாக்கத்தினால் உருவான இந்த அலோபதி மருத்துவம் தான் நெறைய சைடு எஃபெக்ட் கொடுக்கிறது . அதனால் நோயைவிட இன்று மருந்துகள் அதிகமா இருக்கிறது. ஏன்னா ஒரு நோய்க்கு ஒரு மருந்து கொடுத்தீங்கன்னா அது இன்னொரு நோயை கொண்டு வருது . அதை சரி செய்தால் இன்னொரு நோய் . இந்த வணிக ஊடத்தின் தாக்கத்தினால் தான் இது போன்ற பெரிய பிரச்சனை உருவாகி உள்ளது.
மருத்துவத்துறையில் இருக்கும் சில மருத்துவர்கள் கூட நோய்வாய்பட்ட உடலுக்கு ஒரு ஞானம் இருக்கு என்பதை புரிந்துக் கொண்டு இந்த உடலுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுங்கள். அது தன்னைத் தானே சரிசெய்து கொள்ளும் என்று சொன்னால் அதை ஏத்துக்கறதுக்கு நிறைய நோயாளிகளுக்கு மொதல்ல மனசு இல்லை. Impatience creates the patient அதாவது நம்மளோட பொறுமை இன்மை தான் அதிக நோயாளிகளை உருவாக்குகிறது.
நமக்கு எல்லாம் பாஸ்டு உலகத்திலும் எல்லாமே பாஸ்ட் தான் . இப்ப மருந்து குடுத்த உடனே அது மதியத்துக்குள்ள சரியாக வேண்டும். உடலுக்கான காத்திருக்கும் தன்மையை நாம் அனுசரிப்பது இல்லை. அதுக்கு ஒரு நோய் வருதுன்னா அது தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்ளும் என்ற ஒரு விஷயத்தை ஒரு மருத்துவர் சொன்னாலும் நாம ஏத்து கொள்வது இல்லை. போனமா ஒரு ஊசி போட்டமா மாத்திரை சாப்பிட்டமா உடனே எனக்கு சரியாயிடும்.
அதே போல இந்த ஆன்மிகத்திலும் கூட நாம் எதிர்பார்க்கிறோம். ஞானம் என்பது அனுபவிச்சி அத நாம புரிஞ்சிக்கணும்றது கூட கிடையாது. மனதின் அகம்பாவம் அப்படி உள்ளது. இதே நிலையில் இருக்கும்போது மட்டும் தான் நமக்கு இந்த மருத்துவத்துறை பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அதனால் தான் நம் பத்ரிஜி அவர்கள் நோ டாக்டர் நோ மெடிசன் என்றார். அவர் மருத்துவத்தை குறைப்படுத்தி சொல்லவில்லை என்பதை நாம் புரிஞ்சுக்கணும்.
மருத்துவர்கள் மெடிக்கல் ஸைன்ஸ் படிக்கிறார்கள். நாம் ஸ்பிரிச்சுவல் சைன்ஸ் படிக்கிறோம் . அவர்கள் படிக்கிற நாலு வருஷம் படிப்பை நம்மளால படிக்க முடியாது. ஆனா ஸ்பிரிச்சுவல் சைன்ஸ் எல்லாராலயும் படிக்க முடியும். ஏன்னா நம்ம பத்ரிஜி இதை எளிதாகவும் இலவசமாவும் எத்தனையோ இடத்துல நெறைய சென்டர்ஸ் மூலமா உலகம் முழுவதும் கற்றுக் கொடுத்துள்ளார்.
நம்மளால மெடிக்கல் சைன்ஸ் படிக்க முடியாது. ஆனால் மருத்துவர்கள் ஸ்பிரிச்சுவல் சைன்ஸ் படிக்கணும். அவர்கள் அந்த ரெண்டு சைன்ஸையும் ஒன்றிணைத்து எல்லா மக்களுக்கும் மருத்துவச் சேவை செய்தால் நோயின் தாக்கத்தையும் குறைக்க முடியும். சைடு எஃபெக்ட் என்று பின்னாடியே வரும் இணை தாக்கத்தையும் குறைக்க முடியும்.அப்பொழுது மருத்துவத்துறை மேலும் மேலும் உன்னதத்தை நோக்கி வளரும் .
Kommentare