தியானம் என்றால் நிழலிடா பயணம் அதாவது சூட்சும சரீர பயணம். தியானத்தின் மூலம் நாம் மற்ற உலகங்களில் பயணம் செய்து அங்குள்ள ஆசான்களை சந்தித்து அவர்கள் மூலம் அனைத்து உலகங்களின் ரகசியங்களையும் தெரிந்துகொண்டு பேரானந்தத்தை அடைகின்றோம்.
மனித குலத்திற்கு தியானம் என்பது மிகவும் தேவையான ஒரு செயலாகும். தியானம் செய்தால் மட்டுமே ஞானத்தை பெற இயலும். ஞானம் பெற்றால் மட்டுமே முக்தியை அடைய முடியும். தியானத்தின் பொருள் என்னவென்றால் சித்த:விருத்தி:நிரோதம் அதாவது மனதை ஒருநிலைப்படுத்துவது. எவ்வித எண்ணங்களும் இல்லாத நிலைக்கு மனதை மாற்றுவது என்று பொருள். இதை தான் சிந்தனையற்ற நிலை என்று கூறுவோம்.
தியானம் செய்து ஞானத்தை பெற்றால் மட்டுமே துக்கங்களில் இருந்து விடுதலை கிடைக்கும். மன நிம்மதி, உடல் ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கையின் சந்தோஷங்களை தியானத்தின் மூலமாக பெற முடியும். மனிதனின் வாழ்க்கையில் தியானம் இருந்தால் அவன் வாழ்க்கை மிகவும் ஒளி மயமாக இருக்கும். ஒருவர் தியானம் என்ற விளக்கை ஏற்றினால் அதனால் ஆன்மா என்ற விளக்கும் எரியும். நாம் எப்பொழுதும் நிரந்தரமான ஞான ஜோதியை ஏற்ற வேண்டும் நம் வீட்டில் மட்டும் ஏற்றினால் போதாது மற்றவர்களின் இல்லங்களிலும் தியான விளக்கை ஏற்றியே ஆக வேண்டும்.
நாம் மட்டும் தியானம் செய்வது இல்லாமல் மற்றவர்களுக்கும் தியானத்தை கற்பிக்க வேண்டும். அனைவரையும் ஒரு தியானியாக மற்றும் ஞானியாக மாற்ற வேண்டும். நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் பலன் உண்டு.
நாம் நற்செயல்கள் செய்தால் நல்ல பலன் இருக்கும். தீய செயல் செய்தால் தீய பலன்கள் தான் இருக்கும். அதனால் நம் வாழ்வில் முடிந்தவரை மற்றவர்களுக்கோ அல்லது நம் வாழ்விற்கோ முடிந்தவரையில் நற்செயல்களை செய்து வர வேண்டும் . நாம் ஞான ஒளி பெறுவதற்கு பல்வேறு வழிகள் உள்ளன.தியானமும் ஒரு வழி.
பத்ரிஜி எப்பொழுதும் 2 விஷயங்களில் மிகவும் பலம் கொடுப்பார்.
1. தியானம்
2. சைவ உணவு
அவர் கூறுவது என்னவென்றால் முதலில் நீ அசைவத்தை விட்டுவிட்டு சைவாகாரம் சாப்பிட ஆரம்பித்துக்கொள். மாம்சாகாரத்தை விட்டுவிட்டு பின் அதனோடு தியானத்தை செய்யப்பழகு.
இப்படி செய்தால் நம் வாழ்க்கை மிகவும் அமைதியாகவும், சந்தோஷத்துடனும் இருக்கும் என்று "பிரம்மரிஷி சுபாஷ் பத்ரிஜி" அவர்கள் என்றும் கூறுவார்.
"பிரம்மரிஷி சுபாஷ் பத்ரிஜி" அவர்கள் என்றும் கூறும் ஸ்லோகம் "ஹிம்ஸா சோடோ ஹம்சா பக்டோ" - அதாவது விலங்குகளை உண்பதை நிறுத்திவிட்டு மூச்சின்மேல் கவனம் செலுத்துங்கள்.ஏனென்றால் அசைவம் நமக்கு ஏற்றதில்லை. ஆனாலும் நம் நாவின் ருசிக்காக நாம் அசைவம் சாப்பிடுவதை நிறுத்தாமல் இதனால் வரும் கெட்ட கர்மாக்களை சுமந்துக்கொண்டு வாழ்கின்றோம். நோய்கள் இல்லாமல், ஆரோக்கியமாகவும், சந்தோசமாகவும் இருக்க வேண்டுமென்றால் அசைவத்தை விட்டுவிட்டு உடனே, சைவமாக மாறி தியானம் செய்யுங்கள்.
Comments