பயனுள்ள செயல்களை செய்யவும் , பயனுள்ளவர்களாக வாழ்வதும் நம் வாழ்க்கையின் குறிக்கோளாக இருக்கிறது .நாம் அவ்வண்ணமே சமூகத்தாலும் , பெற்றோர்களாலும், ஆசிரியர்களாலும் கற்பிக்கப் பட்டுள்ளோம்.
உண்மையில் பயனுள்ள செயல்களாக கருதப்படுபவை எல்லாம் எவையென்று ஆராய்ந்து நோக்கினால் பலன்களைத் தருபவற்றை மட்டுமே நாம் பயனுள்ள செயல்கள் என எண்ணுகிறோம்.
நாம் செய்யும் செயல்களின் பலன்களை பொருளாகவோ, பணமாகவோ, உறவாகவோ, பதவி உயர்வுகளாகவோ என ஏதோ ஒரு வகையில் எதிர்பார்க்கிறோம். ஒரு வேளை இத்தகைய பலன்கள் எதுவும் கிடைக்காவிடில் அச் செயல்களை பயன்ற்ற செயல்கள் என எண்ணுகிறோம்.
இத்தகைய பயன்கள் தரும் செயல்களைத் தான் நாம் செய்ய வேண்டுமென்றால் கடமையைச் செய் பலன்களை எதிர்பாராதே என்ற கீதையின் கூற்றுக்கு என்ன பொருள் இருக்கக் கூடும்.
செயல்களின் பயன்களை நாம் எதிர்பார்க்கும் நேரம் அச் செயல்களின் நிகழ்கால அழகை நாம் தவற விடுகிறோம். ஓஷோ கூறுவதுப் போல மிகவும் பயனுள்ளவர்களாக இருந்தால் உலகம் நம்மை நன்றாக உபயோகப் படுத்திக் கொள்கிறது.
சிலர் நேரத்தை பணமாக மாற்றுமாறு கூறுகின்றனர் . அதுவே நேரத்தை நாம் சரியாக கையாண்டதற்கான சாட்சியாகவும் இருக்கிறது. ஆனால் நாம் ஒரு விஷயத்தை சிந்திக்க தவறி விடுகிறோம் நம்மால் ஒருக்காலும் பணத்தை நேரமாக மாற்ற முடியாது.
பயனற்ற தன்மை என்பது அதற்கே உரிய இயல்பான சில பயன்களையும் பெற்றுள்ளது. நீங்கள் அடுத்தவருக்கு பயனுள்ளவராக இருந்தால் உங்கள் நேரமானது உங்களிடமிருந்து களவாடப்படும்.
பயனற்றதாகக ஓரு விஷயம் இருக்குமானால் அதை நீங்கள் ரசிக்கிறீர்கள் என்றே பொருள். அதிலிருந்து எந்த ஆதாயத்தையும் நீங்கள் எதிர்பார்ப்பதில்லை.
பயனுள்ளதை செய்பவர்கள் மருத்துவராக , விஞ்ஞானிகளாக , பலன்களைத் தரும் பணிகளை செய்பவர்களாக உள்ளனர். கவிஞர்கள், நாடோடிகள் மற்றும் துறவிகள் பயனற்றதைை செய்வதாக கருதப்படுகிறார்கள்.
ஆனால் பயனுள்ளவர்களைக் காட்டிலும் இவர்களே உலகத்தை ரசிக்கும் வண்ணமாக மாற்றுகின்றனர். பயனுள்ளதை செய்வதாக எண்ணுபவர்கள் வெளி உலகில் வங்கி சேமிப்பை அதிகரித்தாலும் உள் உலகிற்கான எதையும் சம்பாதிப்பதில்லை.
ஏதாவது ஒரு செயல் அதற்கான மகிழ்ச்சியை அந்த செயலுக்குள்ளே வைத்திருக்கும் என்பதை புரிந்துக் கொள்வது பலருக்கு கடினமாக உள்ளது.
உதாரணமாக நீங்கள ஒரு இயற்கை காட்சியை ரசிக்கும் போது உங்களுக்குள்ளே ஒரு ஆனந்தத்தை உணர்வீர்கள் . இதனால் என்ன பயன் என்று தோன்றுவதில்லை. இத்தகையய வெளிப்பாடுகளே ஆன்மாவிற்கான செயல்கள் ஆகும்.
எவற்றையெல்லாம் செய்யும் பொழுது உங்களுக்குள் அந்த ஆனந்தம் உருவாகிறதோ அவையெல்லாமே ஆத்ம திருப்தி அளிக்க் கூடியதே. அதனால் தான் அந்தக் காலத்தில் செய்யும் தொழிலே தெய்வம் என்றனர் .
அந்தச் செயல் ஒரு குழந்தையின் சிரிப்பை ரசிப்பதாக இருக்கலாம் அல்லது பாடம் எடுப்பதாக இருக்கலாம் அல்லது மூட்டைத் தூக்குவதாக்க் கூட இருக்கலாம்.
எந்தச் செயல் என்பது முக்கியமல்ல பலனை எதிர்பார்க்காமல் அந்தச் செயலை ஆழ்ந்து செய்யும் மனப் பக்குவமே இங்கு முன் நிறுத்தப் படுகிறது.
பலளை எதிர்பார்க்காமல் செயலை செய்பவர்கள் உள் மற்றும் வெளி உலகம் இரண்டிலும் ஆனந்தமாக உள்ளனர். பயனற்றதில்் முதன்மையானது தியானம் . நாம் அந்த பயனற்றதைை செய்து உலகின் அனைத்துப் பயன்களையும் இணைப்பாக பெறலாம்.
Comments