பத்ரிஜி அவர்களின் சொற்பொழிவின் தமிழாக்கம்.
வேத வியாசர் மனம், வாக்கு மற்றும் செயல்களில் நிலை மாறாது சமமாக இருக்க வேண்டும் என்றார் ஆனால் பாமர்ர்கள் இதனை நாம் நேராக நிற்க வேண்டும் என்று எடுத்துக் கொள்கிறார்கள்.
பண்டிதர்கள் அதன் உள் அர்த்தத்தை அறிவர் . எண்ணுவது எதுவோ அதையே பேச வேண்டும். எதை பேசுகிறோமே அதையே செயல்படுத்த வேண்டும்.
மனம் வாக்கு, செயல்களில் வேறுபட்டு இருந்தால் திரிகரண அசுத்தி . மூன்றும் ஒன்றி இருப்பது திரிகரணசுத்தி . உள்ள த்த்துவம் வேறு உள்ளார்ந்த தத்துவம் வேறு.
உதாரணமாக தசரதர் அயோத்தியை பரிபாலனம் செய்தார் . இதன் பொருள் நேரிடையாக உள்ளது அல்லாமல் உள்ளார்ந்த அர்த்தம் உள்ளது.
தசம் என்றால் பத்து ரதம் [ஐந்து கர்மேந்திரியம் ஐந்து ஞானேந்திரியம்] செலுத்துபவன்.
யோத்திய என்பது போரிட்டு வெல்வது. அ- யோத்திய என்பது போரிட்டும் வெற்றி பெறாமல் இருப்பது. அயோத்தியா என்பது உடல் அதை ஆள்வதே பரிபாலனம்.
என் கைகளை அசைப்பது என் கட்டுப்பாட்டில் இருக்கிறது. காரைச் செலுத்துவது காரோட்டுபவனின் அதிகாரத்தில் இருக்கிறது.
தேகம் வேறு தேகி வேறு. சரீரம் வேறு ஆத்மா வேறு . ரதம் வேறு அதைச் செலுத்துபவன் வேறு. இரண்டையும் ஒன்றாக நினைப்பவன் சத்தியம் அறியாத நிலையில் உள்ளான்.
காரில் இருந்து கொண்டு ஓட்டுகிறோம் . ரத்த்தில் இருந்துக் கொண்டு அதைச் செலுத்துகிறோம் நாம் காருமல்ல ரதமும் அல்ல . சரீரத்தில் இருந்துக் கொண்டு ஆத்மாவால் அதை செலுத்துகிறோம்.
திரிகரணசுத்தியில் இருந்தால் திரிகரண சித்தி . சித்தி என்றால் வெற்றி . ராட்சதர்கள் கூட தபஸ் செய்து அதிக வரங்களைப் பெற்றனர் .
ஆனால் நாம் சித்தி பெறுவது உலக நன்மைக்காக இருக்க வேண்டும். அனைவருக்கும் நலம் செய்வதே தர்மம்.
பதஞ்சலி ஸ்திர சுக ஆசனம் என்றார் .தியானத்தால் அசுத்தி சித்தியாகும். சுத்தி பின் சித்தியாகும்.
நாம் பணியிடத்தில் வேலை நேரத்தில் வீட்டையோ வீட்டில் இருந்துக் கொண்டு வேலையையோ நினைக்க் கூடாது.
மனம் வாக்கு தேகம் மூன்றும் ஒரே இடத்தில் நிலைத்திருக்க வேண்டும். மூன்றையும் அசைவில்லாமல் நிலை நிறுத்துவதே தியானம்.
யோகம் என்றால் கலை. மனம் உடல் வேறு வேறானால் வியோகம். ஒன்றானால் சம்யோகம்.
தசரதருக்கு மூன்று மனைவிகள் கைகேயி - உடலின் கைகளால் செய்யும் செயல் - தமோகுணம்.
கௌசல்யா - குசலம் அனைத்தும் நல்லதே - சாத்வீக குணம் . சு-மித்ரா - இரண்டுக்கும் நட்புணர்வோடு இருக்கும் ரஜோ குணம்.
பரிணாம வளர்ச்சியில் தமோ குணத்தில் இருந்து ரஜோ குணம் பின் அதில் இருந்து சாத்வீக குணம் . இறுதியில் நிர்குண நிலை . இது பரிணாம வளர்ச்சியாகும்.
தசரதருக்கு மூன்று மனைவிகளுக்கு பிறந்த குழந்தைகளும் அந்தந்த குணப்படியே பிறந்துள்ளன.
நாம் ஞானமடைவதற்கு முன் வசு தேவர் ஞானமடைந்த பின்னர் வாசு தேவர் .
பகவத் கீதையை வாங்கி அலமாரியில் வைத்தால் ஞானம் கிட்டுவதில்லை. அதைப் படித்து தியானம் மூலம் அதன் உள்ளார்ந்த அர்த்தத்தை புரிந்துக் கொண்டாலே அனுபவம் கிட்டும்.
Comments