யோகா தினம் வருடம் தோறும் ஜூன் 21 அன்று கொண்டாடப்படுகிறது. யோகாவின் ஒரு பகுதி தான் தியானம். நாம் யோகா செய்வதினால் நம் உடலில் ஒரு சரி நிலைக்கு வருகிறது; உடலில் ஒரு அதிர்வு ஏற்படுகிறது. நம் உடலை கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்ள யோகா உதவுகிறது.
ஆரோக்கியமான வாழ்வை பெறுவதற்கு பல்வேறு வழிகள் இருப்பினும் யோகா மற்றும் தியானம் அதில் முதன்மையாக செயல்படுகிறது. தினமும் காலையில் யோகா செய்வது நல்லது. நமது வீட்டிலேயே காற்றோட்டமான இடத்தில் இருந்து யோகா செய்யலாம்.
தொடர்புக்கொள்ள : https://www.pmctamizhtv.com/
யோகாவில் பல வகைகள் உள்ளன. அவற்றுள் சில கர்மயோகம், பக்தியோகம், ராஜயோகம், ஞானயோகம் ஆகும்.
(*) கர்ம யோகா என்பது உடல் மற்றும் மனம் சம்பந்தப்பட்டது. கர்மயோகா செய்வதனால் மனதில் உள்ள விருப்பு வெறுப்பு
நீங்கி மனம் அமைதி பெறுகிறது.
(*) பக்தி யோகா என்பது இறைவனை அடைவதற்கான ஒரு வழி ஆகும். பக்தி யோகம் குறித்து பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனிடம் விளக்கியுள்ளார்.
(*) ராஜ யோகா என்பது மனதிற்கும் புலன்களுக்கும் ஏற்றது. நமது ஆசைகள் உணர்ச்சிகள் ஆகியவற்றை அடக்கி முழுமை பெறுவதற்கான வழி ராஜ யோகா ஆகும்.
(*) ஞான யோகா என்பது அறிவை மேம்படுத்துவதற்கான செய்யும் யோகா ஆகும். தன்னைப் பற்றிய தன் ஆத்மாவைப் பற்றிய ஞானத்தை பெறுவது ஆகும்.
தியானத்தின் மூலமாக மூளை சுறுசுறுப்படையும். இதனால் மூளையில் ஆரோக்கியமும் வலுபெறுகிறது. இதனால் யோகா , தியானம் போன்ற அமைதியான எந்த செயலும் மன அழுத்தத்தை வெளியேற்றுகின்றன என்பதை குறிக்கிறது. மன அழுத்தம் குறைந்தாலே தூக்கம், மன அமைதி, கோபம், இயலாநிலை, தனிமை போன்ற பிரச்னைகளும் தீர்ந்துவிடும். இதனால் மனம் தெளிவு பெற்றதாகவும் மனம் நிம்மதி அடைந்ததாகவும் கூறுவார்கள்.
உண்மையில் அறிவியல்படி ஆராயும்போது தியானத்திற்கு மனதை ஒருநிலைப்படுத்த ஏதேனும் ஒரு விஷயம் தேவை. அது நம் மனதைக் கட்டுப்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும். தியானம் பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றி வரும் நடைமுறை.
Comments