உலகில் பல்வேறு விஷயங்கள் உள்ளன. வண்ணங்கள், படிகங்கள், நேரங்கள், வாசனைகள், ஜோதிட கருத்துகள் மற்றும் பல்வேறு மருத்துவ முறைகளும் உள்ளன. சில வண்ணங்கள் நேர்மறையான எண்ணங்களை ஈர்க்கின்றன. சில வண்ணங்கள் சிலருக்கு எதிர்மறையான விளைவுகளை தரலாம். அதே போல சில படிகங்கள் சிலருக்கு நன்மையும் சிலருக்கு ஒவ்வாமையையும் ஏற்படுத்தலாம். உண்மையான ஜாதக கணிப்புகளை அறிந்தவர் மூலம் நமது நல்ல நேரத்தையும் சில சமயங்களில் உருவாகியுள்ள சற்று சரியில்லாத சமயங்களைக் கூட அறிய முடியும்.
வாசனைகள் மூலம் செய்யக்கூடிய மருத்துவத்தின் மூலமும் சில நோய்களை குணப்படுத்தலாம். மேலும் அக்கு பங்சர் மற்றும் அக்கு பிரஷர் இவைகளை முறையாக கற்றவர் வழியாகவும் உடலின் சில உபாதைகளை குணப்படுத்தலாம். ஏனென்றால் அனைத்தும் ஒரு வகையில் அறிவியலே.எல்லாவற்றிலும் ஏதோ ஒரு பயன் உள்ளது. எனினும் நாம் முக்கியமாக அறிந்துக் கொள்ள வேண்டியது ஆன்மிக அறிவியலே அனைத்திற்கும் தலையாய அறிவியல் ஆகும் என்பதே. பிறவற்றிலும் பயன் உள்ளது எனில் நாம் ஏன் ஒன்றை மட்டுமே பின்பற்ற வேண்டும்
சத்தியம் என்றும் முரண்பாடுகள் நிறைந்ததே.சதுரங்க விளையாட்டில் அனைத்து காய்களுக்கும் பயன் உண்டு. சிப்பாய்கள் ,யானைகள் , குதிரைகள்,மந்திரிகள் , ராணி மற்றும் ராஜா உண்டு. அனைத்தும் அதனதன் வழியில் விளையாட்டில் பயன் படுத்தப்பட்டாலும்.ராஜா இல்லையென்றால் மற்ற எதற்கும் வேலை இல்லை. விளையாட்டு முடிந்து விடும்.நீங்கள் ராஜா உள்ளவரையே ஆட்டத்தில் நீடிக்க முடியும். அதேப் போல மற்ற அனைத்தும் அறிவியலை அடிப்படையாக கொண்டு இருந்தாலும்,ஆன்மிகத்தின் துணையான தியானம் இல்லாவிடில் பயனளிப்பதில்லை.
ராஜா இருந்து மற்ற அனைத்தும் வீழ்ந்தாலும் ஆட்டத்தை தொடரலாம்.நமது நோக்கம் உயர்ந்த மற்றும் முக்கியமானதை நோக்கியே இருக்க வேண்டும். நீங்கள் வண்ணங்கள் , படிகங்கள், ஜாதக கணிப்புகள்மேலும் பல வித மருத்துவ விதங்களை பின்பற்றுவதால் வாழ்வில் பயன் அடைவதை விட எது அனைத்திற்கும் மையமோ அதை முதலிலேயே கைப்பற்றினால் நமது வாழ்வில் வெற்றியின் பலன்களை விரைவில் அடையலாம். அனைத்தும் அறிவியல் ஆனாலும் உயரிய அறிவியலான ஆன்மிக அறிவியலைப் பின்பற்றுவோம் . மற்றவற்றின் பின்னால் சென்று நேரத்தை வீணாக்குவதை விட்டு விட்டு ராஜாவைக் கைப்பற்றுவது போல ஆன்மிகத்தின் மையமான தியானத்தை கை கொள்வோம் வாழ்வில் முன்னேறுவோம்.
Commentaires