top of page

பிதாமகர் பத்ரிஜி அவர்களின் பதினெட்டு கொள்கைகள். பாகம் -2

 


Eighteen principles of Pitamakar Padriji
Eighteen principles of Pitamakar Padriji

7. உடலின் நோய்களைத் தீர்க்க மருந்துகளை உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் தியானத்தினால் பெறப்படும் பிரபஞ்ச சக்தியே அனைத்து நோய்களையும் குணப்படுத்தவல்லது. மேலும் பெரும்பாலான வியாதிகள் மனதின்  உருலாகும் எண்ணங்களின் தாக்கத்தால் தோன்றியதே.

 

சில சமயங்களில் கர்ம வினையால் தோன்றி இருந்தால் அதை இந்த பிறவியிலேயே அனுபவித்து முடிப்பதே நல்லது. சில உடல் உபாதைகள் நமக்கான அனுபவ பாடங்களை கற்றுக் கொள்வதற்காகவும் இருக்கலாம். எனவே எதற்கெடுத்தாலும் மருந்துகளையோ  அல்லது மருத்துவர்களையோ நாடாமல் இருத்தல் நலம்.

 

8. உண்ணும் உணவானது சைவ உணவாகவே இருக்க வேண்டும். பசித்தால் மட்டுமே உண்ண வேண்டும். தேவைக்கு அதிகமாக உண்ணக் கூடாது. சைவ உணவே மனிதர்களுக்கான உணவாகும். அசைவ உணவானது ஏற்கனவே செரிக்கப்பட்ட உணவாக இருப்பதால்  உடலுக்கு தீங்கு மட்டுமே விளைவிக்கும்.

 

மேலும் ஓர் உயிரைக் கொல்லும் சந்தர்ப்ப்பதில் அதனுள் உண்டாகும் பயம் மற்றும் வேதனை உணர்வானது அதன் மாமிசத்தில் கலப்பதால்  அதை நாம் சமைத்து உண்டால் அந்த உணர்வுகளின் விஷத்தன்மையால் நம்முள் பல நோய்கள் உருவாகும்.  கூடுதலாக கர்ம வினைப் பலன்களையும் அனுபவிக்க வேண்டி வரும்.

 

9.காடுகள், புல்வெளிகள், நதிகள், மலைகள் மற்றும் இயற்கை சுற்றுச்சூழல் மிக்க இடங்களில் அதிக நேரம் செலவழிக்க வேண்டும். இயற்கையின் அண்மையில் பிரபஞ்ச சக்தி கூடுதலாக கிடைப்பதால் அங்கு தியானம் செய்யும் சந்தர்ப்பங்களில்  தியான ஆற்றலின் வலிமை மும்மடங்கு கூடும்.

 

இயற்கையான பிரதேசங்களில் நேரத்தை செலவழித்தால் நம்முள் ஓர் அமைதி , நிதானம் மற்றும் ஆனந்தம் இயல்பாகவே உருவாகும். இயற்கை அதன் ஆற்றலுடன் நம்மை இணைத்துக் கொள்ளும் அற்புதத்தைை உணர்ந்துக் கொள்ள முடியும்.

 

10. ஆன்மிக ஆடைகளை உடுத்துவதையும், ஆன்மிக வஸ்துகளை அணிவதையும் மற்றும் ஆன்மிக முத்திரைகளை உடலில் குத்திக் கொள்வதையும் தவிர்க்க வேண்டும். உண்மையான ஆன்மிகத்திற்கு அடையாளங்கள் தேவையில்லை.

 

அடையாளங்கள் உண்மையில் நம்முள் இருக்கும் நம்பிக்கையின் குறைபாட்டையே காட்டுகின்றன. வெளி அடையாளங்கள் உள் அக மாறுதல்களை கொண்டு வருவதில்லை.

 

மேலும் பெரும்பாலும் இவ்வகை அடையாளங்கள் நான் உயர்ந்தவன் அல்லது மாறுபட்டவன் என்ற அகந்தையின் வெளிப்பாடாகவே அமையும்.

 

11. ஆன்மிகத்தை அறிந்துக் கொள்வதற்கு இளவயதினர் முன் வர வேண்டும். ஆன்மிகம் என்பது வயதானவர்களுக்கானது என்பதே பொதுவான கருத்தாக உள்ளது.

 

உண்மையில் தியானத்தினால் மிகப் பெரிய பலன்களை இளம் வயதினர் பெற முடியும் . எனவே பெற்றோர்கள் இதனை முதலில் புரிந்துக் கொள்ள வேண்டும்.

 

 அவர்களுக்கு சிறு வயதிலேயே தியானத்தைக் கற்பித்தால்  அவர்கள் தங்கள் வாழ்க்கையை சிறப்பாகவும் தன்னம்பிக்கையோடும்  வாழ்வார்கள்

 

அவர்களின் ஞாபக சக்தி அதிகரிப்பதோடு தேவையில்லாத பழக்கங்கள் அவர்களிடம் உருவாகாது. யாரையும் சார்ந்திருக்காத நிலையில் வாழும் தன்மையில் வாழ்வை ஆனந்தமாக அனுபவிப்பார்கள்.

 

12.ஆனாபானசதி  தியானம் செய்பவர்கள் எப்பொழுதும் சீடர்களாக  இருக்க மாட்டார்கள். அவர்கள் எப்போதும் ஆசான்களாகவே இருப்பார்கள் அதாவது இந்த தியானம் செய்வதன் மூலம்  அனைவரும் அடுத்தவரை சார்ந்திருப்பதை விடுத்து சுதந்திரமாக முடிவெடுக்கும் திறனைப் பெறுவர்.

 

 தங்களின் ஆன்மிக வளர்ச்சிக்கான புரிதல்களுக்காக கூட அவர்கள் யாரையும் சார்ந்திருக்க மாட்டார்கள். அவர்களும் ஆசான்களாக மாறுவதால்  தியானத்தை மற்றவர்களுக்கு கற்பித்து மேலும் பல ஆசான்களை உருவாக்குவார்கள்.  

 

 

 

 

0 views0 comments

Comments


Message for Guided meditation for anxiety
bottom of page