பிரம்ரிஷி பிதாமகர் சொற்பொழிவின் தமிழாக்கம்
எந்த விஷயமும் பெரியது சிறியது என்பதல்ல . அத்தனையும் முக்கியமான விஷயமாகும். அனைத்தும் சரியானவையே. சரியாக சிந்தித்தால் இதை உணரலாம்.
சிந்திக்கவில்லை என்றால் இதை உணர இயலாது. உணர்ந்தவர்கள் அதிகம் பேசுவதில்லை. பேசுவதன் பொருள் புரிந்து கொண்டவர்கள் மகாபுருஷர் ஆகிறார்கள்.
தர்மம் என்றால் என்ன? எதைச் செய்வது ? எதைச் செய்யக் கூடாது? என்பதை அறிவது. நாம் பேசுவதில் கூட தர்மம் உண்டா இல்லையா என்பதை உணர வேண்டும்.
பிச்சைக்காரர்கள்நம்மைக் கண்டு ்தர்மம் செய்யுங்கள் என்கிறார்கள். எனக்கு பசிக்கிறது உணவளியுங்கள் அது உங்கள் தர்ம்ம அல்லவா? என்கிறாரே தவிர எனக்கு இது வேண்டும் என்று கூட கூறுவதில்லை.
நான் இருக்கும் நிலையை காண்கிறீர்கள் எனக்கு என்ன தேவை என்று முடிவெடுத்து உதவி செய்வது உங்கள் தர்மமேேே என்று முடிவை நம் கையில் கொடுக்கிறார்கள்.
தர்மம் செய்வது எனக்காக அல்ல . உங்கள் பர வாழ்க்கைக்காகவே என்ன ஒரு நல்ல வார்த்தை தர்மம் என்பது. ஒவ்வொருவரிடமும் வெவ்வேறு விதமாக தர்மம் வெளிப்படுகிறது.
வர்ணாசிரம தர்மம் என்பது மிகப் பெரிய தத்துவம். உன் கடமை என்ன என்பதை உணர்த்துவதே தர்மம்.பள்ளிக்் குழந்தைகளின் தர்மம் என்ன? தங்கள் கல்வியை சிரத்தையுடன் கற்பதே அவர்களின் தர்ம்ம்.
ஆசிரியரின் தர்மம் என்பது என்ன? மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்பிப்பதே அவர்களின் த்ர்மம் ். தலைமையாசிரியரின் ் தர்மம் பிள்ளைகளின் ஒழுக்கம், உடல்நலம் , மன நலம் நோக்குவதேயாகும்.
நாம் வாயை திறந்தாலும் காது கொண்டு கேட்டாலும் கண்ணால் பார்த்தாலும் தர்மம்் இல்லாதவற்றை பார்க்கக் கூடாது. பேசக் கூடாது கேட்கக்் கூடாது .
நாம் எப்பொழுது பேச வேண்டும் ? எப்படி பேச வேண்டும்? ஏன் பேச வேண்டும் ? என்பதையும் உணர்ந்து செய்ய வேண்டும். தர்மம் சூட்சமமானது.
தர்மம் குறித்து விவரிக்க விவரிக்க பெரிய விளக்கமாகும். சங்கீதத்தில் சுரங்கள் குறித்து விளக்குவது போன்றது .
பகவத் கீதையிலும் கிருஷ்ணர் அர்ச்சுன்னிடம் உனக்கு தர்ம்ம் என்று தோன்றியதை செய் என்றார். உன் தர்ம்ம் என்ன என்பது உனக்கே தெரியும்.
என்னுடைய தர்மம் அனைவருக்கும் தியானம் சொல்லிக் கொடுப்பதே என்பதை 40 வருடங்களுக்கு முன்பு உணர்ந்தேன்.
யாருக்கு தியானம் சொல்லிக் கொடுப்பது கேட்பவர்களுக்கு விரும்பி கற்பவர்களுக்கு மட்டுமே. விருப்பமில்லாதவர்களுக்கு சொல்லிக் கொடுப்பது விழலுக்கு இறைத்த நீராகும்.
தியானம் வேண்டி வருபவர்களுக்கு தியானம் சொல்லிக் கொடுப்பது தர்மம். கௌரவர்களுக்கு கிருஷ்ணர் மீது அக்கறை இல்லை. பாண்டவர்களுக்கே கிருஷ்ணர் தேவைப்பட்டார்.
இப்பொழுது கௌரவர்கள் குறைந்து பாண்டவர்கள் அதிகமாகி வருகின்றனர். கலியுகம் மாறி துவாபரயுகமாகிறது . கற்றுக் கொள்பவர்கள் அதிகமாகி வருகின்றனர்.
ஒருவருக்கு நான் சொல்லத் தொடங்கி ஒரு லட்சம் பேரைத் தாண்டி விட்டது. சிறிது காலத்திற்கு பின்னர் அனைவரும் பாண்டவர்களாகிவிடுவர்.
Comments