top of page

புத்தக வாசிப்பு ஞானம் தருமா?


Does reading books bring enlightenment
Does reading books bring enlightenment


நம்முடைய பாட திட்டங்களின் வடிவமைப்பால் நாம் சிறு வயதில் இருந்தே புத்தகங்களின் அறிமுகத்தை  பெறுகிறோம். இருந்தாலும் புத்தக வாசிப்பு என்பது பெரும்பாலானாருக்கு விருப்பமாக  இருப்பதில்லை


முதல் காரணம் இந்த பழக்கமானது கட்டாயமாக கொடுக்கப்படுவது.இவற்றை புரிந்து கொள்கிறோமோ இல்லையோ மனப்பாடம்  செய்ய வேண்டிய அவசியம் இருப்பது.

இதனால் சிறு வயதில் இருந்தே மாணவர்களுக்கு புத்தக வாசிப்பு குறைவாக உள்ளது. எந்த ஒரு புத்தகமாக இருந்தாலும் அதை எழுதியவர்களின் ஞானமானது வாசிப்பவர்களுக்கு கொண்டு செல்லப் படுகிறது.                                                                                                                                                                                                                                                                                                    குறிப்பாக ஆன்மிக புத்தக வாசிப்பு என்பது மிகப்  பெரிய ஞான களஞ்சியம் ஆகும்.நம்முடன் வாழும் ஆசான்களின் எண்ணிக்கை மிக குறைவு. மேலும் அத்தகைய மகான்களின் இருப்பிடமும் அவர்களின்  உண்மைத் தன்மையும் நாம் அறிவது  அரிதாக உள்ளது.

இங்கு தான் புத்தக வாசிப்பு என்பது நமக்கு மிகவும் கை கொடுக்கும்.பிரமிட் ஆன்மிக மன்ற இயக்கத்தின் ஸ்தாபகரான பத்ரிஜி அவர்கள் இந்த புத்தக வாசிப்பின் அருமையை முழுமையாக உணர்ந்தவர்.மேலும் அவரே ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை வாசித்தவர்.

அவர் தன்னுடைய ஞானம் புத்தக வாசிப்பினால் தான் விரிவடைந்து என்று கூறியுள்ளார்.ஓஷோ, யோகானந்தர் போன்ற பல மகான்களும் இதன் அவசியத்தை பற்றி கூறியுள்ளார்கள்.

அக்கால  சித்தர்கள் பல பாடல்களை எழுதி உள்ளனர். அதன் பொருள்களை அறிவது நமக்கு சில சமயம் சிரமமாக உள்ளது.  ஏனென்றால் அந்த ஞானத்தை பெறும் அளவிற்கு நம்முடைய புரிதல்கள் விரிவடையவில்லை.    

அதனால் அந்த பாடல்களின் பொருள் தவறாக புரிந்து கொள்ளக் கூடிய அபாயம் உள்ளது.எனவே அவற்றை மறை பொருள் என்றே கூறுவர்.

நாம் ஆன்மிகப்  பாதையில் செல்லும் பொழுது தியானத்தை கடைப் பிடிக்கிறோம்.இந்த தியான சக்தியின் பலனே நமது புரிதல்களை அதிகரிக்கிறது.தியானத்தில் பிரபஞ்ச சக்தியானது நமக்கு அதிகமாக கிடைக்கும்.புத்தகம் எழுதிய மகான்களின் அதிர்வலைகளோடு நம்மை இணைய வைத்து நமக்கு அந்த ஞானத்தை கொண்டு சேர்க்கும்.

நாம் பார்க்காத, அறியாத மகான்களின் ஞானத்தையும்  புத்தக வாசிப்பின்  மூலம்  நாம் பெற்றுக் கொள்ளலாம்.                                               

புத்தகம் வாசிப்பது என்பது மிகவும் எளிது.ஆனால் அதன் புரிதல் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு மாதிரி இருக்கும். எடுத்து காட்டாக ஒரு புத்தகத்தை ஐந்து பேர் படித்தார்கள் என்றால், அதன் பின் அவர்களுக்குள்ளே தர்க்கம் ஏற்படுவது இயல்பு.புத்தகத்தை ருசிப்பதில் மனிதர்களுக்குள் தனித் தனித் தன்மை உண்டு.

புத்தகம் வாசிப்பது அறிவுக்கான ஒரு வழிப் பாதை தான்  என்றாலும்             புரிதல் இல்லாமல் படித்தால் பலன் ஏதும் இல்லை.தியானத்தில் கிடைக்கும் ஆற்றல்  மூலம்  புத்தகத்தின் உண்மையான பொருளை எளிதில் அறிந்து கொள்ள முடியும்.

சில நேரங்களில் ஒரே புத்தகமே மீண்டும் மீண்டும் வாசிக்கும் போது பலப்பல புரிதல்களை உண்டாக்கும் சக்தி படைத்தது.

புத்தகங்கள் படிக்க மொழி ஒரு தடை அல்ல.பிற நாடுகளில் உள்ள குருமார்களின்  மொழி பெயர்ப்பு புத்தகங்களின் மூலமும் நாம் கூடுதலான  ஞானம்  பெற முடியும்.

புத்தகம் வாசிப்பது  ஏட்டுக் கல்வி அன்று. அதையும் தாண்டி புனிதமானது.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               

1 view0 comments

Comments


Message for Guided meditation for anxiety
bottom of page