
உணவை நீங்கள் மிக நன்றாக சமைப்பது எவ்வாறு?
காந்திஜி ஒருமுறை ஜெயிலில் இருந்த பொழுது தினமும் உண்ணும் உணவான ரொட்டியும் சப்ஜியும் அவருக்கு வாந்தியை உண்டாக்கியது.
அவர் சமைத்தவரை அழைத்தார் . தினமும் நீதானே சமைக்கிறாய் என்றார் .அவர் காந்திஜியிடம் இல்லை நான் ஒரு கைதி.
இன்று சமைக்கும் பணியாள் விடுப்பில் இருக்கிறார். அதனால் தான் நான் சமைத்தேன் என்றார்.
சமையல் என்பது எவற்றை உண்கிறோம் என்பதல்ல . யார் சமைத்து உண்பதும் கூடத்தான்.
என் மனைவிக்கு சமையல் செய்வதே , அவள் பணி என்று உள்ளதால் உணவு சிறப்பாக உள்ளது.
சாப்பிடும் உணவு சரியான உணவாக இருக்க வேண்டும் .தவறான உணவாக இருக்கக்கூடாது.
எனவே போகும் இடம் சிலவற்றில் நானே சமைக்க கற்றுக் கொண்டேன். சமைப்பதும் எனக்கு இஷ்டமே .
பரிமாறுவதும் எனக்கு பிடிக்கும். தியானம் செய்யவும் பிடிக்கும் மற்றும் கற்றுக் கொடுப்பதும் பிடிக்கும். பிராமணர்கள் போஜன பிரியர்கள் மற்றும் பூஜனை பிரியர்கள்.
உங்களால் எப்படி பெரிய உயரத்துக்கு வந்து விட்டோம் என்ற அகங்காரம் இல்லாமல் வாழ முடிகிறது?
என் கடந்த கால கர்ம பலனே இவை எல்லாம் என்று புரிந்து போனதால் தான் மற்றும் என் பணி எது என்று எனக்குத் தெரிந்து போனதால் தான்.
தியான உலகம் உருவாவது எப்பொழுது?
செல்போனை 20 வருடங்களுக்கு முன் யாராவது அறிவார்களா? இப்பொழுது அதை உபயோகிக்காத மனிதர் உண்டா.
ஆனாபானாசதி தியானம் குறித்து 30 வருடம் முன்பு யாரும் அறியவில்லை .
இப்பொழுது பரவி உள்ளது .செல்போனை விட பயன் தரும் தியானம் உலகம் முழுவதும் பரவுவதில் அதிசயம் என்ன. இது உறுதியானது.
பிரமிடுக்கும் தியானத்திற்கும் சம்பந்தம் எப்படி ? புத்தர் கூறியதா?
இல்லை. இது வேற டெக்னாலஜி .புத்தகம் மூலம் அறிந்து இரண்டையும் இணைத்தது தான் என் வேலை .99% இதற்கு கிரெடிட் எனக்கு கொடுக்கலாம்.
இதன் உள்ளே செய்யும்போது சக்தி அதிகரிப்பதை அறிந்த பின் இரண்டையும் இணைப்பது தான் சிறந்ததாக தோன்றியது .அதனால் தான் பிரமிடு தியான மன்றம் உருவாகியது.
Comments