
நீங்கள் பூணூலை கூட வெட்டி விட்டதாக கூறுகிறார்கள்்? எங்கிருந்து இந்த தைரியம் வந்தது?
பூணூல் என்பது என்ன. அது நம் ஜாதிக்கான அகங்காரமே. வெளிவஷம். ஆன்ம நிலைக்கும் வெளி கஷாயத்திற்கும் சம்பந்தமில்லை.
நோ ஷோ ஆப். பெரிய ஜடாமுடி, கஷாயம், மந்திர உச்சாடனம் எல்லாம் வெளிவேஷமே.
அனைவரிடமும் நீங்கள் நன்றி உணர்வுடன் இருக்க முடிவது எவ்வாறு?
அனைவரும் ஒரே ஆன்மா அல்லவா. நிந்தித்தால் பாடம் கற்றுக் கொள்கிறேன் நன்றி.
நட்புடன் இருந்தால் அன்பை கற்றுக் கொள்கிறேன் நன்றி .என்னிடமே அல்லவா நான் நன்றி உணர்வுடன் இருக்கிறேன் என்று உணர்கிறேன் .
உங்களிடம் பழகுபவர் அனைவரும் எனக்கு பத்ரிஜி மிகவும் நெருக்கமானவர் என்றே உணர்கிறார்கள் .அதன் மாயம் என்ன ?
உங்களுக்கு என்னை பிடித்தால் எனக்கும் உங்களை பிடித்து தானே போகும்.
உன் வீட்டில் இருந்து என் வீட்டின் தொலைவும் என் வீட்டிலிருந்து உன் வீட்டின் தொலைவும் ஒரே தொலைவு அல்லவா.
எது கொடுக்கிறோமோ அது தான் திரும்ப வரும். பிரபஞ்ச நியதி இதுதான்.
தியானம் செய்வது அதுவும் பிரமிடில் தியானம் செய்வது குறித்து உங்கள் கருத்து என்ன?
தியானம் செய்ய வேண்டும் பிரமிடில் மட்டுமே அல்ல . எங்கு இருந்தாலும்.
தியானம் செய்ய வேண்டும்.
பின் எதற்காக ஆயிரக்கணக்கான பிரமிடுகளை உருவாக்கும் செய்தீர்கள்?
பிரமிடில் தியானம் செய்யும் பொழுது மிக நன்றாக இருப்பதால் தான். நான் முதலில் தியானம் செய்த ஆரம்பித்த பொழுது பிரமிடில் தியானம் செய்யவில்லை.
குழந்தையைப் பார்த்தால் கொஞ்சத் தோன்றும் பழத்தை பார்த்தால் உண்ணத் தோன்றும் .கோயிலை பார்த்தால் வணங்க தோன்றும். பிரமிடை பார்த்தால் தியானம் செய்ய தோன்றும். இதெல்லாம் பிராண்டிங் டெக்னிக் அப்பா.
தியான பிரச்சாரத்திற்காக நீங்கள் முன்பும் அலைந்தீர்கள் .இப்பொழுதும் ஏன் அலைந்து கொண்டே உள்ளீர்கள்?
அதற்காகத்தான் கொரோனா தேவதை என்னை ஒரு இடத்தில் உட்கார வைத்து உங்களிடம் பேசுவதன் மூலம் தியான பிரச்சாரம் செய்ய வைக்கிறாள் அல்லவா.
என் சுவாசம் இருக்கும் வரை என் பணி சுவாசத்தை கவனிக்க வைப்பது.
Commentaires