யக்னம் என்பது அக்காலத்திலேயே அரசர்கள் மற்றும் பண்டிதர்களால் நடத்தப்பட்டு வந்த ஒரு செயல்முறை ஆகும்.
இதன் பலன்கள் அவர்களுக்கும் மற்றும் அவர்களின் ராஜ்ஜியத்திற்கும் விசேஷ நன்மைகளை அளித்தது.
யக்னம் என்றால் அனைத்தையும் இணைப்பது எனப் பொருள் கொள்ளலாம். நமது உடல், மனம் மற்றும் ஆன்மா மூன்றும் ஒன்றிணைக்கப் படுகிறது.
நாம் எதில் முழுமையாக ஈடுபடுகிறோமோ அவை அனைத்தும் யக்னங்களே. வேத பண்டிதர்கள் முற் காலத்தில் 108 வகை யாகங்களை செய்தனர்.
யாகக் குண்டத்தில் வேள்வி சமித்துக்களை இட்டு நெருப்பு வளர்த்து வேத மந்திரங்களை ஓதி யாகம் வளர்த்து தங்களின் தேவைகளையும் , பிறரின் தேவைகளையும் தீர்க்கின்றனர்.
இந்த வகை யாகங்கள் மிகவும் அடிப்படை வகையிலான யாகங்கள் ஆகும் . ஏனெனில் இவ்வகை யாகங்களில் யாகப் பொருட்கள் நம்மால் தொடக்கூடிய திடப்பொருட்களாகவே உள்ளன.
அடுத்த நிலையிலுள்ள யக்னம்் மந்திரச் சொற்களால் மட்டுமே நடத்தக் கூடிய யக்னங்களாகும். இந்த வகை யாகங்கள் தவத்தால் செய்யக் கூடிய யக்னங்களாக உள்ளன.
இதனுடைய பலன்களும் சிறிது சூட்மமானவையே. இதன் சமித்துக்கள் நாம் கேட்கக்கூடிய வகையில் மட்டுமே இருக்கும்.
மேலும் ஒரு வகை யக்னங்கள் நடைபெறுகிறது. அதனுடைய பெயர் ஞான யக்னங்கள் ஆகும்.
இதில் கல்வி கேள்விகளில் சிறந்தவர்கள் ஒன்று கூடி முக்கியமான ஆன்மிக கருத்துக்களை பகிர்ந்துக் கொள்கின்றனர்.
மேலும், வித விதமான தலைப்புகளின் மேல் விவாதம் செய்து ஞானப் பகிர்தலாகவே இவ் வகை ஞானயக்னம் நடைபெறுகிறது.
இறுதியாக உள்ளது வெகு சூட்சமமான யக்னமே தியான யக்னம் ஆகும்.
பத்துப் பேர் சேர்ந்து செய்யும் தியானம் செய்யும் போழுது கிடைக்கும் ஆற்றலானது தனியாக செய்வதைக் காட்டிலும் அதிகரிக்கிறது.
இதையே பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி தியானம் செய்யும் போது அதனுடைய ஆற்றலானது பன்மடங்கு அதிகரிக்கும்.
எல்லா வகை யக்னங்களிலும் தெய்வீக ஆற்றலானது தூண்டப்படுகிறது.
இருப்பினும், தியான யக்னத்தின் ஆற்றலானது பல மடங்கு அதிகரிக்கிறது.
இவ்வகை தியான யக்னங்கள் உலக நன்மைக்காக செய்யப்பட்டாலும் அது நமக்கும் மிகப் பெரிய நன்மைகளையும் தருகிறது.
இவ்வகை யக்னங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றால் பூமியின் அதிர்வுகளும் அதன் ஓருங்கிணைப்பும் உறுதியாக நடைபெறும்.
நம்முடைய தமிழ்நாட்டில் ஒவ்வோரு வருடமும் தியான மகாயக்னம் மீண்டும் தொடர்ந்து நடைபெற தொடங்கி வைத்த பெருமை பத்ரிஜி அவர்களையே சாரும்.
நாம் அனைவரும் பிரபஞ்சத்தில் ஒன்றோடொன்று இணைக்கப் பட்டுள்ளோம். எனவே இந்த யக்னத்தால் உருவாகும் ஆற்றல் உறுதியாக பிரபஞ்சம் முழுவதும் பரவுகிறது.
தமிழ்நாட்டில் வாணியம்பாடி அருகிலுள்ள ராமநாயக்கன்பேட்டையிலுள்ள அகத்தியர் ஆசிரமத்தில் வருடம் தோறும் 2018 முதல் நடத்தப் படுகிறது
இங்கு கான வேள்வி, ஞான வேள்வி மற்றும் தியான வேள்வியும் நடைபெறும்.
மேலும் இங்கு அமைந்துள்ள கணேசா பிரமிட், மெர்கபா பிரமிட் மற்றும் அகத்தியர் பிரமிட் உள்ளே செய்யும் தியானத்தின் பலனானது மும்மடங்கு அதிகரிக்கிறது.
கூடுதல் நன்மைகளைத் தரும் கூட்டுத் தியானம் , இயற்கை தியானம் மற்றும் இசைத் தியானம் நடப்பதால் அந்த மொத்த ஆற்றலையும் பெற்றுக் கொள்ள இந்த தியானமகா யக்னத்தில் கலந்துக் கொள்வது அத்தியாவசியமாகிறது.
இந்த வருடம் வரும் நவம்பர் மாதம் 8 9 10 11 ஆகிய தேதிகளில் இந்த தியானமகாயக்னம் நடைபெற உள்ளது . அனைவரும் கலந்துக் கொண்டு பயன் பெறுவோம்.
Read more blogs through PMC Tamil Website.
Comments