பத்ரிஜி அவர்களின் மொழிபெயர்ப்பு பாகம் 3
ஆதிசேஷசயனத்தில் இருக்கும் காலம் கடந்த விஷ்ணுவாக பின்னர் நாமும் மாறலாம். அங்கு காலைப் பிடிக்கும் லக்ஷ்மி யார்? நம் காலடியில் வரும் வைபோகம் தான் .
சிவன்-- பிரம்மன் --விஷ்ணு. பார்வதி--சரஸ்வதி--லக்ஷ்மி . நமக்கு வைபோகம் {லக்ஷ்மி] வேண்டும் ஆனால் தியானம் {பார்வதி} வேண்டாம் . {சரஸ்வதி } ஞானம் வேண்டாம்.
நமது சிந்தனையின் செயல்பாடைப் பாருங்கள். லக்ஷ்மியே முக்தி என்பதன் தத்துவம் புரிவதற்கு பாமரர்களில் இருந்து தியானம் செய்து பண்டிதர்களாக மாறுங்கள்.
அஷ்ட சித்திகளை அளிப்பவளே அஷ்ட லக்ஷ்மி . தியானம் செய்து ஞானம் பெற்றால் அஷ்ட சித்தியும் கை கூடும். நரன் நாரயணனாக மாற வேண்டும்.
எத்தனை அழகான ஆன்ம விளக்கத்தை நம் முன்னோர்கள் திரிமூர்த்திகளாக படைத்துள்ளனர். சரஸ்வதி என்றால் அவர்போல புத்தகத்தை படித்து ஞானத்தை மேம்படுத்த வேண்டும்.
ஈசுவர சன்னிதியில் பசு உண்டு. அப்பசு பசுபதியாக மாற வேண்டும். சரீர ஞானத்தில் வாழ்ந்தால் பசு. சாப்பிடுவது பின் தூங்குவது. தியானம் செய்தால் பசுபதியாகலாம்.
தியானம் செய்யாதவர்களுக்கு இவையெல்லாம் கதைகளே . பண்டிதர்களுக்கே அதன் ஆழ்ந்த விளக்கங்கள் புரியும்.
கோவர்த்தன கிரிதாரி - கோ என்றால் இந்திரியம் வர்த்தனம் என்றால் வளர்ச்சி அடைவது கிரி என்றால் சரீரம் {மலை}. இந்திரியத்தை வளர்த்துக் கொண்டு மலை போல சக்தி பெறுவது
கோகுலம் என்பது இந்திரியத்துடன் மட்டும் வாழும் குலம் . கோபாலன் என்றால் இந்திரியத்தை வசப்படுத்தி பரிபாலனம் செய்வது. கோ என்றால் பசுக்கள் என்றுதான் பாமரர்களஅறிவ்.
கோகுலத்தை காத்தான் கோபாலன. ்இந்திரியத்தை வசப்படுத்தியதால் மட்டுமே சரீர இணைப்பில் வாழ்பவரை காத்தான்.
பசு பசுபதியாக வேண்டும் . நரன் நாரயணனாக வேண்டும். இந்திரியத்தை கட்டுபடுத்தி இந்திரன் ஆகலாம்.
மகேந்திரன் என்றால் கல்பத்தரு , காமதேனு, வஜ்ராயுதம், ஐராவதம், சிந்தாமணிஅனைத்தையும் வசப்படுத்தலாம்.
முருகன் உலகை வலம் வரும் இடங்களில் எல்லாம் கணபதி அவருக்கு முன்பே அங்கு இருந்ததைக் கண்டு தன் தோல்வியை ஒப்புக் கொண்டார்.
பிரபஞ்சத்தில் எவ்வளவு வேகமாக பயணித்தாலும் வெற்றி கிட்டுவதில்லை. தாய் தந்தையாராக இருக்கும் சிவன் பார்வதியை வணங்குவது அவர்கள் இருக்கும் தியான நிலையே.
கடவுளர் பலர் மயில்,எலி,புலி,கருடன்,பாம்பு,பசு,பைரவர்,காளை, சேவல், யானை எனப் பல விலங்கினங்களை தன்னுடன் வைத்திருப்பதில் தாத்பரியம் என்ன?
நாமும் விலங்கு சாம்ராஜ்ஜயமும்் ஒத்து வாழ்க்கை நடத்த வேண்டும் என்பதை உணர்த்துவதற்காகவே . அஹிம்சை ,தியானம் என்பது தான் ஆன்மிக அறிவியல்.
சரீரத்தில் உண்மையாக வாழ்வதே அஹிம்சை ஆன்மாவில் உண்மையாக வாழ்வதே தியானம் .அஹிம்சை பரம தர்மம்். தியானம் பரம மோட்சம்.
தியானம் செய்யும் பொழுது நாம் கவனிக்கும் மூச்சே இகபர லோகங்களை இணைக்கும் பாலமாகும். வாயுபுத்திரனை கவனித்தால் ஆஞ்சனேயர் ஆகலாம். அஞ்சனம் என்றால் கண்.
மூன்றாம் கண் திறந்து கிடைக்கும் ஞானம் வாயுப்புத்திரனாக அனுமன் தியானித்து ஆஞ்சனேயர் ஆனார். லங்கனா தகனம் என்பது நாலுபுறமும் நீர் சூழ தீவாக வாழாமல் அனைவரையும் ஏற்பது .
உடலைக் கட்டி மனதை அடக்கி பத்துதலை போன்ற ராவணன் போன்ற எண்ணங்களை அடக்கி கும்பர்ணனாக தூங்கி வாழாமல் சரியான வாழ்க்கை வாழ்ந்தாலே சீதா யோகம் கிடைக்கும் . இதுவே ராமாயண தத்துவம்.
Kommentare