நாம் எந்தச் செயலைச் செய்யும் போதும் நம்மை அறியாமலேயே அதற்குரியப் பலன்களை சிந்திக்காமல் இருக்க முடிவதில்லை.
ஆனால் ஞானிகள் பலன்களை எதிர்பார்க்காமல் செயல்களைச் செய்யச் சொல்கின்றனர். இது தான் உண்மையிலேயே நாம் பின்பற்றக் கூடிய நியமங்களில் மிக்க் கடினமான ஒன்றாக உள்ளது.
நமது நோக்கம் சரியாக இருப்பின் எதிர்பார்ப்பு தவறல்ல என்று நாம் நினைக்கிறோம். இருந்தாலும் எதிர்பார்ப்பு என்பது மற்றவர்களையும் தொடர்புக் கொண்டே உருவாகிறது.
இது ஒரு நுட்பமான வகையில் பிறரின் மேல் நாம் செலுத்தும் ஆதிக்கமாகும். பிறரின் சுதந்திரத்தில் ஏதோ ஒரு வகையில் தலையிடுகிறோம்.
நமது குருவான பத்ரிஜி எந்த வகையிலும் யாருடைய வாழ்க்கையிலும் தலையிடுவது கூடாது என்றே கூறுகிறார்.
சிலர் தியானம் செய்வது ஆன்மாவிற்கான மிக உன்னதமான உணவாகும் என்று உணர்கிறார்கள்.
யாமறிந்த இன்பம் பெறுக இவ்வையகம் என்ற நல்ல நோக்கத்தில் அடுத்தவர்களுக்கு அதை கற்பிக்கிறார்கள்.
இந்த நோக்கத்தை யாரும் குறை சொல்ல முடியாது.
எனினும், அவர்களின் முழு விருப்பம் இல்லாமல் அவர்களும் இந்த ஆன்மிகப் பாதையில் பயணிக்க வேண்டும் என்று யாரும் அவர்களை கட்டாயப் படுத்தக் கூடாது.
நாம் நம்பும் எந்தவொரு நல்ல விஷயத்தையும் ஒரிரு தடவை சொல்வது நமது கடமையாகும் . ஆனால் யாரும் யாரையும் நிர்பந்திக்க உரிமை இல்லை.
நாம் நல்ல விஷயம் என்று நினைப்பதே இப்படியென்றால் , மற்ற செயல்களைப்பற்றி யோசிக்க கூட முடியுமா?
நம்முடைய செயல்களுக்கு பலன்களை நாம் எதிர்பார்க்கும் போது எதிர்மறையான விஷயங்கள் நடந்தால் நாம் ஏமாற்றமடைகிறோம்.
ஏமாற்றத்தினால் கோபம் மற்றும் வருத்தம் உண்டாகிறது. உறவுகள் மற்றும் பணியிடங்களில் பிரச்சனைகள் தோன்றுகின்றன.
நாம் யாருடைய சுதந்திரத்திலும் தலையிடாமல் இருப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு அடுத்தவரும் நம் விஷயத்தில் தலையிடாமல் இருப்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.
நமக்கு எதிர்பார்ப்பு உள்ளது போல அடுத்தவருக்கும் நம்மிடத்தில் எதிர்பார்ப்புகள் கட்டாயம் இருக்கும்.
அந்த எதிர்பார்ப்புகள் நம்மை சிறை பிடிக்க அனுமதிப்பதும் கூடாது. நமது சுதந்திரம் நமக்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவு அவரவர் சுதந்திரம் அவரவருக்கு முக்கியம் என்பதை உணர்வதே மிகப் பெரிய ஞானமாகும்.
இதை உணர்ந்துக் கொண்டாலே எதிர்பார்ப்புகள் குறைந்து விடும். மேலும் எதிர்பார்ப்புகள் என்பது எதிர்காலத்திற்கு உரியவை.
நிகழ்கணத்திற்கான செயல்களின் இன்பங்களை அனுபவிக்க இயலாமல் செய்யக் கூடியவை. உண்மையில் காலம் ஒன்றே அது நிகழ் காலம் மட்டுமே .
நிகழ்கணத்தில் நாம் வாழும்பொழுது மட்டுமே நம்மால் பிரபஞ்ச அலைவரிசையோடு நாம் ஒத்து செயல்படுவதை உணர முடியும்.
பிரபஞ்ச புரிதல் இருப்பின் நாம் செய்யும் காரியங்களின் விளைவுகளை குறித்து சிந்திப்பது நமக்கு தேவையில்லை என்ற நம்பிக்கை நம்முள் தோன்றும்.
எதிர்பார்ப்புகள் உள்ள வாழ்க்கை உண்மையில் பிறரை மட்டுமல்ல நம்மையும் கட்டுபடுத்துவதே என்ற முழுமையான ஞானம் உருவாகும்.
மேலும் எதிர்பார்ப்புகளோடு செய்யப்படும் செயல்களில் நம்முடைய முழுத்திறமையும் வெளிப்படுவதும் இல்லை.
உள்ளபடிக்கு எதிர்பார்ப்புகள் நம்மை பலவீனப்படுத்தவே செய்கின்றன.இலவச இணைப்பாக பயம், பதட்டம், ஏமாற்றம், கோபம், கவலை மற்றும் வருத்தம் போன்றவைகளும் வருகின்றன.
இனி வாழ்வை எதிர்பார்ப்புகள் இல்லாத சுதந்திர வாழ்வாக இனிமையுடன்
Comments